Wednesday, May 27, 2009

வேதங்கள் வெறும் வாழ்க்கை நெறிமுறைகள் தானா?


வேதங்கள் வாழ்க்கை நெறிமுறைகள் தானே?வெறும் நெறிமுறைகளா கடவுளல் சொல்லப்பட்டிருக்கும்?

நாட்டு நடப்புக்களை தினசரி,டிவி,ரேடியோ மூலமாக அறிந்துகொள்ளலாம்.இதற்காக நாம் மகான்களை நாடுவதில்லை.ஆனால் நமது ஸ்தூல கண்களுக்கும் அறிவுக்கும் புலப்படாத பல தெய்வீக விஷயங்களை அறிய மகாத்மாக்களை நாம் அணுகுகிறோம்.
வேதத்தில் அங்கங்கே வாழ்க்கை நெறிமுறைகள் குறிப்பிடப்படலாம்.ஆனால் அது மட்டுமே வேதத்தின் தாத்பர்யம் அல்ல.பல விஷயங்களை விடுகதைகள் போல மறைத்துப் பேசுவதால் தமிழில் வேதத்திற்கு மறை என்று பெயர்.
வேதம், தேவதைகள், தேவதாலோகங்கள்,ஆத்ம தத்துவங்கள்,உபாசனை முறைகள், பக்தி,பகவானின் அவதாரங்கள்,சரணாகதி, கடவுளின் மகிமை போன்ற பலவற்றைப் பற்றி பேசுகிறது.
வேதத்தில் ஆகாய விமானம்,தரை ஊர்திகள்,நவீன ஆயுதங்கள் போன்ற பல விஷயங்களும் கூறப்பட்டுள்ளதாக வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment