சுமார் இருநூறு ஆண்டுகளாக புத்தகங்கள் நமது பாரத நாட்டில் அச்சாகி வெளிவந்து கொண்டிருக்கின்றன;இவைகளில் பல அரிய,அபூர்வத்திலும்,அபூர்வமான புத்தகங்கள் மறு பதிப்பாக வெளிவரவே இல்லை;இப்படிப்பட்ட அபூர்வமான புத்தகங்களின் பட்டியல் மிக மிக மிகப் பெரியது;வானியல்,ஜோதிடம்,சித்த வைத்தியம்,மாந்திரீகம்,சூத்திரகணிதம்,சரக்கலை எனப்படும் சுவாசக் கலை,பஞ்ச பட்சி சாஸ்திரம் என பலதுறைகளைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் கி.பி.1850 முதல் புத்தகவடிவுக்கு மாறியிருக்கின்றன.
கோயம்புத்தூரிலிருந்து ஞானசிந்தாமணி என்ற ஜோதிட,மருத்துவ,சித்தவைத்திய மாத இதழானது கி.பி.1980களில் தமிழ்நாட்டில் ஒரு மகத்தான ஜோதிட விழிப்புணர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.அதே காலகட்டத்தில் வெளிவந்த(இன்னும் வெளிவந்து கொண்டிருக்கும்) பால ஜோதிடம் என்னும் வார இதழும் பல அரிய ஜோதிட உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கின்றன.ஜோதிடத்தை தொழிலாக செய்ய விரும்பும் ஒவ்வொருவருமே இந்த புத்தகங்களை வாங்கி வைத்துக் கொள்வது அவசியம்.இதே போல,நமது ஆன்மீக ஆராய்ச்சிக்காக சில புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.ஆன்மீகக்கடல் வாசகர்களாகிய உங்களிடமோ,உங்களுக்கு வேண்டியவர்களிடமோ பின்வரும் புத்தகங்கள் இருப்பின் நகல் எடுத்துத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நீங்கள் செய்யும் உதவியின் தொடர்விளைவால்,பல லட்சக்கணக்கான மக்களுக்கு அவர்களுடைய கர்மவினைகள் நீங்கும்.அதற்கு தாங்கள் செய்யும் உதவி காரணமாக அமையும் என்பது உறுதி.
1.ருத்ராட்ச உபநிஷத்
2.தமிழ்வேதம்=கிரிபதிப்பகம்,மதுரை நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது.
3.மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்த நூல் இது: பரமேஸ்வரன் பிள்ளை எழுதிய “மஹா சாஸ்த கல்பம்”
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment