Sunday, November 25, 2012

சபரி மலைக்குச் செல்ல இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு!!!



ஒரு மண்டலம் (48 நாட்கள்) அளவுக்கு ஹரிஹர சுதன் என்று போற்றப்படும் ஐயப்பசுவாமிகளை உங்கள் மனதிலும்,உடலிலும் தாங்கி வலம் வரும் ஐயப்ப பக்தர்களின் விரதத்துக்கு தலைவணங்கி வாழ்த்துகிறோம்.

நமது ஆன்மீக குரு. அவர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு என்று பிரத்யேகமாக சில ஆன்மீக வழிகாட்டுதல்களை கூறியிருக்கிறார்.அவைகளை உங்களுக்கு அறிவிப்பதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.


இந்த 48 நாட்களும் ஐயப்ப பக்தர்களாகிய தாங்கள் உடல் ஊனமுற்றோர்களுக்கு அன்னதானம் செய்வது சபரிமலையானை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்;வீடு வாசல் இல்லாத மாற்றுத்திறனாளிகள்(உடல் ஊனமுற்றோர்களின் இன்றைய பெயர்) எங்கும் இருக்கிறார்கள்.அவர்களுக்குத் தேவைப்படும் மாற்றுத்திறன் கருவிகள் அல்லது ஆடைகள் மற்றும் சிறு சிறு உதவிகளை தாங்கள் செய்வதன் மூலமாக அவர்கள் அளவற்ற மகிழ்ச்சியடைவார்கள்;அந்த மகிழ்ச்சியானது உங்களுடைய நீண்டகால சிக்கல்களைத் தீர்க்க உதவும்.(இந்த தானங்களைச் செய்வது நீங்கள் அல்ல;ஐயப்பசுவாமியே செய்வதாக அர்த்தம்!!!)

மேலும் சபரி மலை செல்லும்போதும்,சபரிமலைக்குச் செல்லும் முன்பாகவும்(இந்த 48 நாட்களில்) தாங்கள் காட்டுப்பகுதியிலும்,மலைப்பகுதியிலும் இருக்கும் கோவில்களுக்கு வழிபடவோ,திருவிழாவில் கலந்து கொள்ளவோ செல்ல வேண்டியிருக்கும்.அப்படிச் செல்லும் போது குறைந்தது ஐந்துகிலோ நவதானியங்களை(நவதானியங்கள் அனைத்தும் கலந்தது எனில் ரூ.ஆயிரத்துக்குள் வரும்;தனித்தனியாக எனில் ரூ.மூன்று ஆயிரங்களை எட்டும்)அனைத்தும் கலந்தவைகளை வாங்கி,அந்த காட்டுப்பகுதியிலும்,மலைப்பகுதியிலும் தங்கள் கரங்களால் மனித காலடி படாத இடங்களில் தூவ வேண்டும்.அதோடு குறைந்தது ஒரு கிலோ  டயமண்டு கல்கண்டு வாங்கியும் தூவ வேண்டும்.இப்படி தாங்கள் செய்வது ஐயப்பசுவாமியின் மனதில் அளவற்ற மகிழ்ச்சியைத் தர வைக்கும்;தங்களின் பணப்பிரச்னைகளும்,நவக்கிரகங்களில் ஏதாவது ஓரிரு கிரகங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் எதிராகச் (அவரவர் பூர்வ ஜன்ம கர்மாக்களின் படி)செயல்பட்டுக் கொண்டிருக்கும்.அந்த செயல்பாடு பெருமளவு குறைந்துவிடும்.

ஹரி என்றால் மஹாவிஷ்ணு,ஹரன் என்றால் சிவன்;இருவரும் இணைந்து உருவாக்கியவரே ஹரிஹரன் என்ற ஐயன் என்ற ஐயப்பசுவாமி ஆவார்.தாங்கள் ஐயப்பசுவாமிகளை தரிசித்து வர விரதம் இருக்கும் இந்த காலகட்டத்தில் இவ்வாறு செய்து வந்தால்,தங்களின் விரதபலம் சில கோடி மடங்கு அதிகரிக்கும் என்பது குரு வாக்கு.

சாமியே சரணம் ஐயப்பா!

ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. திரு வடுகர் அவர்களுக்கு

    உங்கள் ஓவ்வொரு பதிவும் காலத்திற்கு தகுந்தார் போல் உள்ளது. இது எல்லாம் வல்ல காலத்தை இயக்கும் சர்வ வல்லமை பெற்ற ஒம் ஸ்ரீ காலபைரவர் என்றும் உங்களுக்கும் இந்த வாசகர்களுக்கும் என்றும் அருள் புரிவாராக

    உங்கள் செந்தில்

    ReplyDelete
  2. சரியான விளக்கங்கள்... நன்றி...

    ReplyDelete