Wednesday, November 7, 2012

சித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண முருகக் கடவுள்!!!


தண்டாயுதபாணி கடவுளின் இருப்பிடமாக உள்ள பழனி மலை மகத்தானது. ஜாதி மதம் இன்றி பல்வேறு மதப்பிரிவினரும் பெரும் திரளாக அங்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டு நிவாரணம் பெறுகின்றனர். பழனியின் பெருமையைப் பற்றிக் கல்விமான் ஒருவர் கூறினார் ......
அபாராமான பழங்காலத்துப் பொருட்கள் பழக்க வழக்கங்கள் சரித்திரம் புராணக் கதைகள் வீர காவியங்கள் மாபெரும் முனிவர்களின் கதைகள் இலக்கியங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டு அமைந்துள்ள இடமே பழனி மலை தமிழ்நாட்டு கிழக்குப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் உள்ள அப்படிப்பட்ட பெருமை மிக்க இடமான சிவகிரி மலையில் தண்டாயுதபாணி பழனி ஆண்டவராக வீற்று இருக்கின்றார்.

புராதானக் காலத் துவக்கத்தில் இருந்தே சித்தர்களும் முனிவர்களும் பழனி மலை மீது தவம் இருந்ததினால் அந்த இடம் இன்னும் புனிதத்தன்மை அடைந்தது. பல மன்னர்களும் கொடையாளிகளும் அந்த ஆலயத்திற்கு பல வகையிலும் தங்களுடைய ஆதரவை வழங்கி உள்ளனர். தமிழக முன்னணிப் பாடகர்கள் பலர் தண்டாயுதபாணியின் பெருமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் நிறைய தமிழ் பாடல்ப் பாடி உள்ளனர்.

துடித்துக் கொண்டே இருக்கும் தெய்வீக நிலையில் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கொண்டு இருக்கும் வழிபாட்டு முறைகளை எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இந்துக்கள் தொடர்ந்து கடைபிடித்தவண்ணம் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். அனு தினமும் அங்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களே அதற்குச் சாட்சி ஆவார்கள். ஆறு படை வீடுகளில் மணிபுரக்கம் என்ற மூன்றாவது தெய்வீக நிலையை ஒருவர் எட்டியதும் அந்த நிலையில் இருந்து பரிபூரண ஆன்மீக நிலையை அவர்கள் அடையத் துவங்கி விடுகின்றனர்.

பழனியில் குடி கொண்டுள்ள அந்த தெய்வம் உலகத்தின் பல இடங்களில் இருந்தும் பக்தர்களை தன்பால் இழுக்கின்றது. பழமையில் ஊறிப் போன பல முஸ்லிம் மதத்தினரும் கூட இங்கு வந்து அவரை வணங்குகின்றனர்.முருகனை பழனி பாத்ஷா என அன்புடன் அழைத்து அவரை வணங்குகின்றனர்.ஆத்ம ஞானம் பெற அங்கு வரும் பக்தர்களுக்கு தெய்வீக ஒளி வெள்ளத்தைக் காட்டியவண்ணம் பழனி ஆண்டவர் அவர்களை வழி நடத்திக் கொண்டு செல்கின்றார்.

தண்டாயுதபாணி ஆலயம் தனி மகத்துவம் பெற்றது. மற்ற ஆலயங்களுடன் ஒப்பிடும் பொழுது அவற்றில் இருந்து பலவற்றிலும் வேறுபட்டு உள்ளது தொரியும். முதலாவது அந்த ஆலயத்தில் உள்ள பிரதான தெய்வத்தை மூலவர் என அழைக்கின்றனர்.

சாதாரணமாக இந்து ஆலயங்களில் உள்ள தெய்வ உருவங்களை கறுங்கல் பாறைகளில் செதுக்குவார்கள். அதற்குக் காரணம் அதில் உள்ள அதிக இழுவிசை சக்தியே. கறுங்கல் பாறைகள் பெரும் பலம் உடையவை. அது மட்டும் அல்லாது இயற்கை உருவாக்கி உள்ள பஞ்ச பூத சக்திகளான தண்ணீர் காற்று நெருப்பு மற்றும் ஈதர் போன்றவையும் அதற்குள் இருக்கின்றது. ஆனால் அப்படி இல்லாமல்பழனியில் உள்ள மூலவர் சிலை நவபாஷ்யம் என்ற பொருளினால் செய்யப்பட்டு உள்ளது.

சமிஸ்கிருதத்தில் நவ என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. நவ என்றால் புதியது அல்லது ஒன்பது என்ற இரண்டு அர்த்தங்கள் உண்டு. அதுபோலவே பாஷம் என்றால் விஷம் அல்லது தாதுப் பொருட்கள் என்ற இரண்டு அர்த்தம் கொண்டது. பழங்காலத்திய இலக்கியங்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அந்த நவபாஷண சிலையை செய்தவர் சித்த முனிவரான போகர் என்று கருத்து தொரிவித்து உள்ளர்.

அங்குள்ள மூலவருடைய சிலை நவபாஷணங்களினால் செய்யப்பட்டு உள்ளது. அதை மிகவும் நுண்ணியமாக ஒன்பது விஷப் பொருட்களின் கலவையினால்; செய்து உள்ளார். அந்த ஒன்பது நச்சுத் தன்மை கொண்ட பொருட்களும் ஒன்றாகிய பொழுது உடைக்க இயலாத அளவு பலம் பெற்றதாக மாறியதும் அல்லாமல் பல வியாதிகளை குணப்படுத்தும் ஒருவித மருந்துத் தன்மை கொண்ட பொருளாகவும் மாறி இருந்தது. அதற்குப் பின்னரே அந்தக் கலவையில் செய்த பொருளில் மூலவருடைய சிலை செய்யப்பட்டு உள்ளது.

அப்படிப்பட்ட ஒரு கலவையில் ஒரு சிலையை வடிவமைத்திருப்பதில் இருந்தே சித்த முனிவர் போகர் ரசவாத கலவைகளில் கைதேர்ந்தவர் என்பது மட்டும் அல்ல தொலை தூரக் கண்ணோட்டத்தில் பின்னர் வர உள்ள காலங்களில் தோன்ற இருக்கும் முருக  பக்தர்களுடைய உடல் நலனில் அளவுக்கு மீறிய நாட்டம் கொண்டு இருந்தார் எனவும் மிக உயர்வான தெய்வ நிலையை பெற்று இருந்தவர் எனவும் தொரிய வந்தது.

அந்த முனிவருடைய சந்ததியினரைப் பற்றியும் அந்த இலக்கியங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. சித்தர்களுடைய தலைவர் சிவபெருமானுடைய வாகனமான நந்திதேவர். அவருக்கு இருந்த ஏழு சிஷ்யர்களில் திருமூலரும் ஒருவராவார். அந்த  திருமூலருக்கு ஐந்து சிஷ்யர்கள் இருந்தனர். அதில் பிரபலமானவர் கலங்கிகஞ்சமலையான் என்பவர். அந்த கலங்கிகஞ் சமலையான் என்பவருடைய சிஷ்யரே சித்த முனிவரான போகர் ஆகும்.

போகரைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் திருமூலர் எழுதி உள்ள திருமந்திரம் என்ற நூலில் உள்ளன. திருமூலர் சைவ சித்தான்தத்திற்கு தூண் போன்றவர். அவர் சைவ சித்தான்திகளுக்கு தெய்வீக மார்கத்தில் இணைந்து பின் ஆத்ம ஞானத்தைப் பெற்று இறுதியாக தெய்வத்தின் பாதங்களில் இணைந்து விடத்தேவையான மார்கத்தில் செல்ல அவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டு இருந்தவர். நவபாஷணப் பொருட்களின் கலவையைக் கொண்டு  தயாரித்த முருகன் சிலையை வடிப்பதிலும் வித்தியாசமான முறையை போகர்  கையாண்டுள்ளார். சாதாரணமாக அனைத்து ஆலயங்களிலும் காணப்படும் முருகன் சிலைகள் அழகிய இளைஞர் போன்ற தோற்றம் உள்ளதாக அமைக்கப்படும்.

அந்த சிலைகள் அனேகமாக கிழக்கு நோக்கிப் பார்த்த வண்ணம் அமைந்து இருக்கும். ஆனால் பழனியில் உள்ள முருகன் சிலையோ மெல்லியதாகவும் மொட்டைத் தலையுடன் மெல்லிய காவி உடை அணிந்தபடியும் சாமியார் போன்ற தோற்றத்திலும் கையில் தண்டாயுதத்தை ஏந்திக் கொண்டும் மேற்கு நோக்கி பார்த்தபடி அமைக்கப்பட்டு உள்ளது. ...... நானே முதிர்ச்சியுற்ற அறிவுப் பழம் ...... என்பதை பறை சாற்றிக் கொண்டு நிற்பது போல அமைந்து உள்ளது அந்த சிலை

அங்கு வரும் பக்தர்கள் பக்தி பெருக்குக் கொண்டு மூலவருக்கு செய்த அபிஷேகங்களினால் அந்த சிலை எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பது ஒரு ஆச்சாரியமான செய்தி ஆகும். அறுநூறு முதல் எழுநூறு எண்ணிக்கையிலான அபிஷேகங்கள் கிருத்திகை தினங்களில் நடைபெறுகின்றது. அத்தனை எண்ணிக்கையிலான அபிஷேகங்கள் செய்த பின்னரும் அவற்றினால் எந்த விதமான சேதமும் அடையாமல் எப்படி நவபாஷணத்தில் செய்த அந்த மூலவர் சிலை அப்படியே உள்ளது என்பதை கற்பனைக் கூடச் செய்து பார்க்க முடியவில்லை.

இருந்தாலும் அந்த சிலையை அருகில் சென்று உன்னிப்பாகப் பார்ப்பவர்களுக்கு கழுத்துக்குக் கீழே உள்ள பாகங்கள் தக்க விகிதாசாரத்தில், இப்போது இல்லை என்பது தெரியவரும். பக்தர்கள் உபயோகித்து வந்த அபிஷேகப் பொருட்கள் சிலவற்றினால் அந்த சிலையின் கைகளும் கால்களும் மிகவும் சேதம் அடைந்து உள்ளன. தொடைப்பகுதியில் முட்டிக்குக் கீழே உள்ள கால்கள் மிகவும் மெல்லியதாகி விட்டது தொரிகின்றது. இரண்டு இரும்புக் கம்பிகள் ஒரு பீடத்தில் நிற்பது போலவும் எலும்புகள் தேய்ந்து போன நோயாளியின் கால்களைப் போலவும் தோற்றம் தரும் அளவுக்கு அந்த சிலை பழுது அடைந்து விட்டது.

உடலின் பல பாகங்களில் சிறுசிறு பள்ளங்கள் போன்றவைத் தோன்றி சொற சொறப்பான உடல் அமைப்பைக் கொண்டது போல தோற்றம் தருகின்றது. சில பகுதிகளில் கூரான பகுதி நீட்டிக் கொண்டு இருப்பது போலவும் உள்ளது. அந்த சிலையின் கால்கள் பலத்தை இழந்து விட்டதால் கனத்தைத் தாங்காமல் எந்த நேரத்திலும் அந்த சிலையின் கால்கள் உடைந்து விடும் என்று கூட ஒரு காலகட்டத்தில் பயந்தனர்.

அந்த நிலைமை முற்றிக் கொண்டு போகத் துவங்க பல பக்தர்களும் மக்களும் பழுதடைந்து கொண்டிருந்த சிலையின் உருவத்தைக் கண்டு பயந்து போய் தமிழக அரசிற்கு பல  விண்ணப்பங்களை அனுப்பினர். அதனால் தமிழக அரசும் கவலை அடைந்து 1983-84 ஆம் ஆண்டுகளில் பழனில் உள்ள அந்த மிகப் பெருமை வாய்ந்த ஆலயத்தில் உள்ள சிலை அதற்கு மேலும் பழுதடைந்து விடாமல் இருக்க வேண்டும் என தீர்மானித்தப் பின் அரசிடம் தினமும் வந்து கொண்டிருந்த பல யோசனைகளைப் பரிசீலித்தது.

அந்த சிலையை மாற்றி விடலாமா என்று கூட ஒரு சமயத்தில் நினைக்கலாயினர். ஆனால் அதில் ஒரு பிரச்சனை இருந்தது. ஆலயங்களின் அகம விதிப்படி ஆலயங்கள் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் அந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி செய்தபின் முதலில் பிரதிட்சை செய்யப்பட்டிருந்த சிலையை மாற்றி அதற்குப் பதிலாக அதே மாதிரியான வேறு ஒரு உருவச் சிலையை அதே இடத்தில் பிரதிட்சை செய்யப்பட்டதாக எந்த ஒரு முன் உதாரண நிகழ்ச்சிகளும் இதுவரைக் கிடையாது. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் இதுவரை எந்த ஆலயத்திலும் நடைபெற்றதில்லை.

கற்பாறைகளில் செதுக்கப்பட்ட சிலைகளைக் கூட ஒரு சில ஆலயங்கள் பழுது பார்க்கப்பட்ட பொழுது தற்காலிகமாக அதே ஆலயத்திற்குள்ளேயே எங்காவது ஒரு இடத்தில் கொண்டு போய் வைத்திருந்து ஆலய வேலைகள் முடிந்தப் பின் அதே சிலையை அஷ்டபந்தனம செய்த பின்னர் ( வெண்ணையில் சில மூலிகைகளைக் கலந்து பசை போல தயாரித்து சிலை முழுவதற்கும் பூசுவது முதலில் இருந்த இடத்திலேயே சிலையைக் கொண்டு போய் வைத்து விட்டு அதை பிரதிட்சை செய்து விடுவார்கள் என்பதைத் தவிற மூலவர் சிலைகளையே மாற்றி அமைத்ததாக எந்த ஆலயத்திலும் சாரித்திரம் கிடையாது.

அதையும் தவிற பழனியில் ஏற்பட்ட பிரச்சனை வேறு வகையிலும் வித்தியாசமானது. மூலவர் சிலை பல மூலிகைகளைக் கொண்டு விசேஷ கலவையில் தயாரிக்கப்பட்டு வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட சிலையாக வரும்கால சந்ததியினருடைய உடல் நலத்தை மனதில் வைத்துக் கொண்டு தெய்வாம்சம் பொருந்திய போகரால் செய்யப்பட்டு உள்ளது. அது செய்யப்பட்ட விதமோ மூலிகைகள் பற்றிய விவரமோ எவருக்குமே தொரியாது.

முதல் நாள் இரவு நல்ல சந்தனத்தை அரைத்து பசை போல செய்து அதை சிலை மீது பூசி வைத்த பின் மறுநாள் எடுத்தால் அது அற்புதமான வேறொரு மருத்துவ குணம் கொண்டதாக வியாதிகளைத் தீர்க்கும் முறையில் அமைந்து விடுவதினால் அதன் மீது ஊற்றப்படும் தண்ணீரைக் குடித்தால் பல நாள்பட்ட நோய்களும் விலகுகின்றன என மக்கள் கருதினர். அதற்கு விஞ்ஞான காரணம் உள்ளது என ஆலயம் வெளியிட்டிருந்த புத்தகத்தில் செய்தி காணப்பட்டது.

ஒரு சாரருடைய கருத்துப்படி அந்த சிலையில் உள்ள பொருளில் லட்சக்கணக்கான கிருமிகள் உள்ளன எனவும் அவற்றில் சில அபிஷேக நீருடன் கலந்து வெளியேறுவதால் அதை பருகும் மக்கள் உடலில் இருக்கும் தீய அணுக்கள் மறைந்து வியாதிகள் விலகுகின்றன. அதனால்தான் அந்த அபிஷேகப் பொருட்கள் பல நாட்களுக்கு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு சித்த மருந்துகளாக பயன்படுத்தப் படுகின்றது. அதனால்தானோ என்னவோ பழனி மலை அடிவாரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பல சித்த மருத்துவசால்கள் பரவி இருந்தன என்பது வியப்பை அளிக்கும் செய்தியாக விளங்கவில்லை. பழனி தண்டாயுதபாணியே முதல் மருத்துவராக விளங்குவதால் அந்த மூலவர் சிலையை மாற்றி அமைக்கலாம் என்ற யோசனையை ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே அந்த சிலை மேலும் பழுது அடைந்து அழிந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய ஒரு உயர்மட்டக் குழுவை அரசாங்கம் நியமித்தது.

நல்ல கல்விமானும் பெரும் தெய்வ பக்தி கொண்டவருமான நீதிபதி சதாசிவம் அந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் ஐந்து உப குழுக்களை ஏற்படுத்தி பல்வேறு வழிகளையும் ஆராய்ந்து அந்த பிரச்சனைக்குத் தீர்வு தரக்கூடிய வகையில் கருத்துக்களைக் தரும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அந்த குழுக்களில் இருந்தவர்கள் ்-

1. சில பெரிய மடங்களின் மடாதிபதிகள் மத அமைப்புக்களின் தலைவர்கள்
2. புகழ் பெற்ற ஸ்தபதிகள்
3. அகமங்களில் சிறந்து விளங்கியவர்கள்
4. பூஜரிகள் பண்டாரங்கள் மற்றும்
5. விஞ்ஞானிகள்
நானும் ஒரு விஞ்ஞானி என்பதினால் அந்த உப குழுவில் இருந்த விஞ்ஞானிகளின் குழுவில் இடம் பெற்றேன். அந்த மூலவருடைய சிலை எந்தப் பொருட்களின் கலவையினால் செய்யப்பட்டு இருந்தது என்பதை சோதனை செய்து கண்டறியும் வேலை எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. நாங்கள் உண்மையை கண்டறியும் குழுவில் இருந்ததினால் பண்டாரங்கள் மற்றும் பூஜரிகளுடன் கற்பக்கிரகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். அதை என்னுடைய வாழ்நாளிலேயே கிடைத்த பெரும் பாக்கியமாகவே நினைத்தேன்.

அந்த சிலையின் அருகில் நெருங்கி அதை ஆராய்ந்தோம். சிலையின் முகமோ எந்தவிதமான மாறுதலும் சேதமும் அடையாமல் புத்தம் புதிய சிலைப்போல சமீபத்தில்தான் நிறுவியதைப் போலவே இருந்ததை கண்டு வியந்து போனோம். பூதக் கண்ணாடி கொண்டு ஆராய்ந்ததில் அது கருங்கல் அல்லது அதைப் போன்ற ஒரு பொருளாகவே இருந்ததும் தொரிந்தது. அடுத்து கழுத்தப் பகுதிக்கு கீழே இருந்த உடல் பகுதிகளை சோதனை செய்த நாங்கள் திடுக்கிட்டோம். முகத்திற்கும் உடம்புப் பகுதிக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது தொரிந்தது. உடல் முழுவதும் சிதைந்து போய் சிறு சிறு பள்ளங்களும் சிலையின் சில உடல் பாகங்கள் கூர்மையான பகுதிகளைப் போல்; நீண்டும் இருக்க இரண்டு கால்களும் மெல்லிய குச்சிகள் ஒரு பீடத்தில் நின்றிருந்தது போல இருந்தது. பலமிழந்து இருந்த மெல்லிய கால்களினால் எந்த நேரத்திலும் விழுந்து விடக் கூடிய நிலைமையில் சிலை இருந்தது. மூலவரின் முகமோ புத்தம் புதியதாக இருக்க உடல் மட்டும் சிதைந்து போய் இருந்ததினால் முன்னர் நம்பப்பட்டது போல அந்த பழுதடைந்த நிலைக்கு சிலை ஆளானது அபிஷேகத்தினால் இருக்க முடியாது என தொரியவந்தது. அபிஷேகம்தான் சிலை சிதைந்ததிற்கான காரணம் என்றால் முகம் மட்டும் எந்த விதமான பழுதும் அடையாமல் உடல் பகுதிகள் மட்டும் எப்படி பழுதடைந்து இருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. ஆகவே அபிஷேகம் செய்ததினால்; சிலை பழுதடைந்து விட்டது என்ற கருத்து தவறானது என எங்களுக்கு புரிந்தது.

அடுத்த செய்தி கர்பக்கிரகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்த அர்ச்சகர்கள் மற்றும் பழனியில் இருந்த சித்த வைத்தியர்களுக்கும் இடையே இருந்த வந்த தொடர்பு பற்றியது. அவர்களிடையே இருந்திருந்த தொடர்ப்புக்களினால் சில விஷமிகள் அந்த சிலையின் உடலை சிறிதளவுக்கு அவ்வப் பொழுது சுறண்டி அதில் கிடைத்தப் பொருள்கலை அவர்கள் தயாரித்து வைத்திருந்த மருந்துகளில் சிறிதளவு கலந்து கொடுத்திருக்கலாம் எனவும் அதனால்தான் சிலை தேய்ந்து போய் உள்ளது எனவும் பரவலாகக்நம்பப்பட்டு வந்திருந்தது . ஏன் எனில் பழனியில் இருந்த சில சித்த வைத்தியசாலைகள் திடீரென புகழ் பெற்று வளரத் துவங்கின. அந்த சிலை எதோ ஒரு வகையான கருங்கல்லினால் செய்யப்பட்டு உள்ளதைப் போலத் தோற்றம் தந்தாலும் அதை விஞ்ஞானபூர்வமாக நிருபிக்க எங்களால் முடியவில்லை என்பதின் காரணம் எங்களுக்கு அந்த சிலையில் இருந்து அபிஷேக நீருடன் கலந்து வெளிவருவதாக கூறப்படும் எந்த பொடித் தூள்களும் கிடைக்கவில்லை. அந்த சிலையின் மீது ஊற்றப்படும் அபிஷேக நீரில் அந்த சிலையின் நவபாஷணப் பொருள் மீதேறி வருவதால்; இரசாயன மாற்றம் அடைந்து அது வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டதாக மாறி விடுகின்றது எனவும் அந்த அபிஷேக நீரை பயன் படுத்தியவர்களுக்கு பெரும்பான்மையான வியாதிகள் விலகி உள்ளன எனவும் எங்களிடம் அங்குள்ளவர்கள் கூறினர்.

ஆகவே அந்த அடிப்படையிலும் எங்களுடைய சோதனையைத் தொடரலாம் என்ற எண்ணத்தில் நாங்கள் சந்தனத்தைப் பசை போல அரைத்து அந்த சிலை முழுவதும் பூசினோம். அதை இரவு முழுவதும் அந்த சிலை மீதே இருக்கும்படி விட்டு விட்டப்பின் மறுநாள் அந்த சந்தனப் பசையை எடுத்து பரிசோதனைக்கு உள்ளாக்கினோம். அணுத் தூள்களை சோதனை செய்யும் கருவியான பெர்கின்-எல்மர் 707 என்ற மிக நவீனமான கருவியில் சில திரவப் பொருட்களை பயன் படுத்தி அளவு காட்டும் பகுதியை துல்லியமாக வரையுறுத்தப் பின் அதன் மூலம் சிலையில் இருந்து வெளியேறி மாற்றத்தைத் தரும் பொடிகள் எதுவும் சந்தனப் பசையுடன் கலந்து உள்ளதா என்று பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் சந்தனக் கலவையை சோதனை செய்தோம். ஏன்ன ஆச்சரியம் சிலை மீது தடவப்பட்டிருந்த சந்தனக் கலவையை எடுத்து அந்தக் கருவி மூலம் ஆராய்ந்ததில் அந்த கலவையில் எந்தவிதமான பொடியும் கலந்து வரவில்லை என்றாலும் அது மருத்துவ குணம் கொண்ட கலவையாக மாறி இருந்ததும் தொரிந்தது. பலமுறை அந்த சந்தனக் கலவையை எடுத்து பரிசோதித்தும் முடிவு ஒரே மாதிரிதான்; இருந்தது. இரவு முழுவதும் நாங்கள் பூசி இருந்த சந்தனக்
கலவையில் ஏற்பட்டிருந்த இரசாயன மாற்றத்தின் காரணம் என்ன என்பதை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அது எங்களுக்கு வெளிப்படுத்திய சாதாரண உண்மை என்ன என்றால் நவீன விஞ்ஞானக் கருவிகளால் கூட தெய்வத் தன்மைக் கொண்ட பொருட்களை ஆராய முடியாது. அதன் பின் நாங்கள் எங்களுடைய அறிக்கையை தயார் செய்து தலைமையாளருக்கு அனுப்பி வைத்தோம்.

அவரும் அதற்குத் தேவையான குறிப்புக்களை இணைத்து அரசின் கவனத்திற்கு அனுப்பினார். அந்த சிலையின் உருவப் பாதுகாப்பைக் கருதி நாங்கள் அந்த சிலைக்கு செய்து வந்த அபிஷேகங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து அதன்படி மட்டுமே அபிஷேகங்களை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்திருந்தோம். அந்த ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது பல காலமாக இன்னொரு வதந்தி நிலவிக்கொண்டு இருந்ததையும் அறிய முடிந்தது. அந்த செய்தியின்படி சித்த முனிவர் போகர் பழனியில் தான் செய்து வைத்திருந்த மூலவரின் சிலையைப் போலவே முதலில் மூன்று சிலைகளை செய்து இருந்ததாகவும் அவற்றில் இரண்டு சிலைகளை கிழக்குப் பகுதியில் எங்கேயோ பூமியில் புதைத்து மறைத்து வைத்து உள்ளதாகவும் தக்க சமயத்தில் தெய்வப் பிறவி எடுத்து ஒருவர் அதைக்கண்டு பிடித்து வெளியில் எடுத்து அந்நாள்வரை பயன்படுத்தப்பட்ட சிலை பழுதடைந்த பின் அதை மாற்றி அமைப்பார் எனவும் கூறி உள்ளாராம்.

இதன் மூலம் தெரியவருவது என்ன எனில் இறைவன் நம்மிடம் கொடுத்துள்ள படைப்புக்களை முறையாகப் பயன்படுத்தினால் நாம் நன்மைகளை அடைய முடியும். ஆனால் மனிதர்களினால் இறைவனுடைய படைப்புக்களை வெற்றி கொள்ள முடியாது. இந்த இடத்தில் சர்.ஐசக் நியூடன் கூறியதை நினைவு கொள்ளாமல் இருக்க முடியாது. ......

மனித குலத்திற்கு நான் செய்துள்ள சேவை நியமங்களை மதித்து நடக்க வேண்டியதின் அவசியத்தை ஒவ்ஒரு மனிதன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே ......

முருகனுடைய நவபாஷணச் சிலையில் இருந்து என்ன பொருள் மாற்றத்தைத் தருகின்றது என்பதை நவீன கருவியால் கூட கண்டு பிடிக்க முடியவில்லை என்ற உண்மையை பெருன்தன்மையுடன் அடக்கமாக வெளிப்படுத்தி உள்ளார் ஒரு விஞ்ஞானி. கவிஞன் கண்ணதாசன் எழுதிய பாடல் இந்த நேரத்தில் நினைவில் நிற்கின்றது. ...... எண்ணிடத்தில் இருந்து கொண்டு அகண்டத்தையே ஆண்டு கொண்டு நம் கற்பனைகளுக்கு அப்பால் இருப்பவரே கடவுள் என்பவர். எவர் அவர் இருப்பதை புரிந்து கொண்டு அவரை உளமாற உணருகின்றனரோ அவர்களுக்கே அவர் காட்சி தருவார் ......
Tags; பழனி முருகன் கோவில், பழனி மலையில், பழனி மலை, முருகனை,
Dr. Prof. M.S. Saravanan, M.Sc., Ph.D., F.M.S., F.G.S. is an an earth scientist and mineralogist and former Director of the Tamil Nadu Department of Geology & Mines and Chairman of Tarnilnadu Minerals Limited. A one-time close associate of Kripananda Variar, he was appointed Head of the Palani Andavar Idol Replacement Committee.

3 comments:

  1. vetri vel veera vel........Pattikka patikka...Vinthai.......

    ReplyDelete
  2. வாழ்க முருகன் புகழ், வளர்க போகரின் சிலை, வேல் வேல் வெற்றி வேல்

    ReplyDelete