சுதந்திரப்போராட்ட காலம் அது; அக்காலத்தில் நாடெங்கும் மேடைகள் போட்டு ஆங்கிலேய ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டும். அவர்களை இந்திய நாட்டை விட்டு விரட்ட வேண்டும் எனப்பேச்சாளர்கள் வீர முழக்கமிட்டுப் பேசி வந்த காலம்.
ஒரு மேடையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையும்,அவரோடு விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவும் அமர்ந்திருக்கிறார்கள்.அப்போது ஒருபேச்சாளர், "வெள்ளைக்காரர்களை மூட்டை முடிச்சுகளோடு இந்தநாட்டை விட்டே விரட்ட வேண்டும்" என ஆவேசமாக தனது பேச்சினூடே தெரிவித்தார்.
அவரது பேச்சை இடைமறித்து சுப்பிரமணிய சிவா எழுந்து, "இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்"என்றார்.இதனால்,மேடையில் இருந்தவர்களும்,பேச்சாளரும் கூட்டத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானவர்களும் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தார்கள்.
சுப்பிரமணிய சிவா தொடர்ந்து பேசினார். 'வெள்ளைக்காரர்களை மூட்டைமுடிச்சுக்களோடு இந்த நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்று நண்பர் கூறினார். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மூட்டை முடிச்சுகள் நம்முடையவை! வெள்ளைக்காரர்களை வெறும் பயல்களாகத் தான் நாட்டை விட்டு விரட்ட வேண்டும்' என்று கூறினார்.இதைக் கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் உற்சாக ஆரவாரம் செய்து "வந்தே மாதரம்" என வீரமுழக்கம் இட்டனர்.
இந்த சம்பவம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகியும்,வரலாறு திரும்புகிறது இல்லையா? இது தான் ஆச்சரியம் நிறைந்த கொடுமை!
No comments:
Post a Comment