Tuesday, November 27, 2012

நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு. . .



உலக அழகிப் பட்டம் பெற்று,இந்தித் திரையுலகில் தனி இடத்தைப் பிடித்தவர் ஐஸ்வர்யாராய்.இவர் 1.11.1973 அன்று மங்களூரில் பிறந்தார்.இணையத்தில் இவரது பிறந்த விபரத்தை இப்படி வெளியிட்டிருக்கின்றனர்.சரி,இதே 1.11.1973 அன்று சென்னையிலும்,மதுரையிலும்,மும்பையிலும்,வைசாக்கிலும் பெண் குழந்தைகள் ஏராளமானவர்கள் பிறந்திருக்கிறார்கள்.இருந்தும்,ஏன் ஒரே ஒரு ஐஸ்வர்யாராய் உலக அழகிப்போட்டியில் கலந்து கொண்டு பட்டம் பெற்றார்?

இங்கே தான் இந்த கேள்விக்கு ஜோதிட அறிவியல் தேவைப்படுகிறது.புதிதாக வாங்கிய டீ.ஷர்ட் அல்லது சுடிதாரை அணிந்த அன்று முழுவதும் நமது மனநிலை எப்படி இருந்தது? கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா?

கெட்டுப்போன உணவை ஒரு நாள் நமது வீட்டில் வேறு வழியில்லாமல் சாப்பிட்டிருப்போம்;அப்படிச் சாப்பிட்ட 24 மணி நேரத்திற்கு நமது மனநிலை என்ன?

நம்மை,நமது மனநிலையை,நமது ஆளுமைத்திறனை நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலையும்,நாம் அணியும் ஆடையும்,நாம் சாப்பிடும் உணவும் பாதிக்கும்போது எத்தனையோ கோடிக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கிரகங்கள் பாதிக்காதா?


விண்வெளி முழுவதும் பலவிதமான கதிர்வீச்சுக்கள் இருக்கின்றன என்று விண்வெளி விஞ்ஞானம் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.
விண்வெளியிலிருந்து பலவிதமான சக்திகள் சூட்சுமமாக பூமியை நோக்கி பாய்ந்து கொண்டே இருக்கின்றன என்பதை ஜோதிடமும்,ரெய்கியும் கண்டறிந்துள்ளன.அந்த கண்டுபிடிப்பில் பலவிதமான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
நாம் நமது துறையில் ஓரளவு சாதித்திருப்போம்;அந்த சாதனையை நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் பெருமையாகச் சொல்லி சொல்லி மாய்ந்து போவோம்;அப்படிச் சொன்ன மறு நாள் அல்ல; சில நிமிடங்களிலிருந்தே நமது வழக்கமான நடவடிக்கைகளில் பல விதமான தடைகள் தோன்றத் துவங்கும்;ஆனால், ‘சாதித்த’ உற்சாகத்தில் அந்தத் தடைகளை நாம் கூர்ந்து கவனிக்க மாட்டோம்;

ஒரு மகத்தான வெற்றியைப் பெறும் வரையிலும் நாம் நமது சிறு சிறு சாதனைகளை தம்பட்டம் அடிக்காமல் இருப்பதே மிகவும் நல்லது;அப்படி ஒன்றும் பிறரின் பாராட்டுக்காக நாம் ஏங்க வேண்டுமா?

அப்படி ஏங்கி,ஏங்கி நமது சிறு சாதனைகளை எல்லோரிடமும் சொல்லித் தான் நமது அடுத்த கட்ட முன்னேற்றத்தைத் தொடக் கூட முடியாமல் தவிக்கிறோம்.இந்தியர்களாகிய நமக்கும்,தமிழர்களாகிய நமக்கு பொறாமை உயிர்மூச்சாகவே இருக்கிறது.போட்டி மனப்பான்மைக்கும்,பொறாமைக்கும் ஒரு சிறு வித்தியாசமே இருக்கிறது.அதை நாம் எப்போது புரிந்து கொள்ளப்போகிறோம்?

ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. thangal nadathum payirchikalil kalanthu kolla virumbukiren. chennaiyil vasipathal ingu ethavathu payirchigal nadathinal theriyapaduthavum. nanri.

    ReplyDelete