Wednesday, November 28, 2012

கார்த்திகை பவுர்ணமிபூஜையில் ஸ்ரீவி.பத்திரகாளியம்மன்!!!








நந்தன வருடத்தின் பெரிய கார்த்திகை என்று அழைக்கப்படும் கார்த்திகை மாதத்து பவுர்ணமி பூஜை 27.11.12 செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பத்திரகாளியம்மன்  கோவிலில் கொண்டாடப்பட்டது.அப்போது எடுக்கப்பட்ட படங்கள்  இவை;

திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,ராகு மஹாதிசை நடைபெற்றுக்கொண்டிருக்கும் அன்பர்கள்,குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமையை நினைத்து ஏங்குபவர்கள்,தன்னலம் கருதாத பொதுநலவாதிகளில் நிம்மதியை இழந்து தவிப்பவர்கள் ஒரே ஒரு முறை இந்த பத்திரகாளியம்மன் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டாலே அடுத்த பவுர்ணமி நாளுக்குள் அவர்களுடைய சிக்கல்கள் தீரத் துவங்குவதை உணரலாம்;

மேலும் தமது மகளுக்கு குறித்த வயதில் திருமணம் கைகூடவில்லையே என்று ஏங்குபவர்கள் குடும்பத்தோடு இங்கே வர வேண்டும்.வந்து இங்கு நடைபெறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.(கலந்து கொள்ள எந்த ஒரு நேரடி மற்றும் மறைமுகக் கட்டணமும் கிடையாது!)தொடர்ந்து  ஆறு பவுர்ணமி பூஜைகளில் கலந்து கொண்டால், பொருத்தமான வரன் அமைந்துவிடும் என்பது கடந்த பத்து வருட அனுபவ உண்மைகள் ஆகும்.

மனதில் தனிமை உணர்ச்சியால் வேதனைப்படுபவர்கள்,வாழ்க்கைத் துணை கொடுக்கும் தொல்லையால் தற்கொலை எண்ணத்தோடு வாழ்பவர்கள்(ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி) இந்த பத்திரகாளியம்மன் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி பூஜைகளில் தொடர்ந்து 12 முறை(மாதம் ஒருமுறை வீதம் ஓராண்டுக்கு!!!) கலந்து கொள்ள அவர்களுடைய தற்கொலை எண்ணம் விலகிவிடும்;வாழ்க்கைத் துணையோடு இருந்து வந்த கருத்துவேறுபாடு முழுமையாக விலகிவிடும்.முதல் மாத பவுர்ணமிபூஜையில் கலந்து கொண்டுவிட்டு,அவரவர் வீட்டுக்குச் சென்றதுமே அவர்களின் மன உளைச்சல் தீரத் துவங்கும்;அவர்களுக்கு புதிய ஆதரவு கிடைக்கும்;அவர்களின் விரக்தி மனப்பான்மை நீங்கிவிடும்;



ஒவ்வொரு பவுர்ணமி பூஜையும் எந்த நாளில் நடைபெறுகிறது? என்பதை அறிய இந்த கோவிலின் பூசாரி சுந்தரமஹாலிங்கம் செல் எண்:9003353286 இல் விசாரித்துவிட்டு வருக!!!(செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பேச இயலாது;மற்ற நாட்களில் பேச ஏற்ற நேரம் மதியம் 1.30 முதல் 4.30 வரை)


விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் சிவகாசி சாலையில்(ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ.தூரத்தில்) முதலியார்பட்டித் தெரு என்ற தெற்குப்பட்டியில் நெசவாளர்கள் வீடுகளுக்கு மத்தியில்  அமைந்திருக்கிறது அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில்.ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு 10 மணிக்கு பவுர்ணமி பூஜை ஆரம்பமாகி,நள்ளிரவு 1 மணிக்கு நிறைவடையும்.பவுர்ணமி பூஜையின் நிறைவாக அன்னதானம் வழங்கப்படுகிறது.யாரிடமும் ஒருபோதும் அன்பளிப்பு கேட்கப்படுவதில்லை என்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பு.சுமார் 2000  சாலியர்(நெசவாளர்) குடும்பங்களின் குலதெய்வமாகத் திகழ்ந்தாலும்,விருதுநகர் மாவட்டத்தில் “பணியாரப் பத்திரகாளி” என்ற பெயரில் மிகவும் பிரபலமான கோவில் இது;


ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரி என்று அழைக்கப்படும் மாசி மாதம் வரும் சிவராத்திரி நாளில் இந்த கோவிலில் ஒரு பாட்டி கொதிக்கும் நெய்யில் கரண்டி இல்லாமல் கையாலேயே அப்பங்களைச் சுட்டு எடுப்பார்;அவைகள் அனைத்தும் அருள்மிகு பத்திரகாளியம்மனுக்கு படையலாக வைக்கப்படும்;சிவராத்திரி பூஜைகள் நிறைவடைந்தப்பிறகு,பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.இந்த அற்புத ஆன்மீக அதிசயம் கடந்த 200 ஆண்டுகளாகவே இங்கே நிகழ்ந்து வருகிறது.

(வெகு தொலைவில் இருப்பவர்கள் இங்கே வர இயலாதவர்கள் இந்த பத்திரகாளியம்மன் போட்டோவை வீட்டில் இருக்கும் பூஜை அறையில் வைத்து தினமும் அரை மணி நேரம் வரை நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்;அதுவும் இயலாதவர்கள் தமது கணிப்பொறியில் வால்பேப்பராக வைத்து தினமும் சிலநிமிடங்கள் வேண்டிக் கொண்டு வர அடுத்த சில வாரங்கள்/மாதங்களில் நெருக்கடியான மனநிலை மாறத்துவங்கும் என்பதும் அனுபவ உண்மை!!!)

நமது வேதனைகள் தீர்ந்து நிம்மதியாகவும்,நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறவும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் வருவோம்;அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்வோம்;அவள் அருள் பெறுவோம்;யூ ட்யூப் இணைப்பில் பவுர்ணமிபூஜையை தரிசிக்க இங்கே சொடுக்கவும்.

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment