கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமியே பெரிய கார்த்திகை எனப்படும்.(ஓவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளன்று முருகக் கடவுளை வழிபடும் பழக்கம் பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்களிடையே இருக்கிறது)இந்த பெரிய கார்த்திகை அன்று திரு அண்ணாமலை கிரிவலம் மிகச் சிறப்பான திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.
எந்த ஒரு பக்தி உணர்வுமின்றி ,திரு அண்ணாமலையில் அமைந்திருக்கும் கிரிவலப் பாதையான 14 கி.மீ.தூரத்தை நடந்தே சென்றால்,அப்படி பயணிப்பவர்களின் கர்மவினைகள் பெருமளவு கரைந்துவிடும்.ஏனெனில்,அண்ணாமலையே சிவபெருமானாக காட்சியளிக்கிறார்.இப்படி ஒரு சாதாரண நாளில் கிரிவலம் சென்றாலே இப்படிப்பட்ட புண்ணியம் கிடைத்துவிடும்.ஒவ்வொரு பவுர்ணமிக்கும் சித்தர்கள் கிரிவலம் வருவார்கள்;துறவி வடிவில் அல்ல;நம்மைப் போலவே ஜீன்ஸ் அணிந்து!!! நாமும் பவுர்ணமிக்கு கிரிவலம் சென்றால் நமது முன்னோர்களில் யார் சித்தராக இருக்கிறாரோ அவரது அருட்பார்வை நம் மீது படும்;அப்படி பட்டாலே நமது அனைத்து பாவங்கள் மட்டுமல்ல;நமது முந்தைய அனைத்து மனித பிறவிகளிலும் செய்த பாவ வினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்;
அதுவும் கார்த்திகை மாதம் வரும் பவுர்ணமியன்று பிரபஞ்சம் முழுவதும் இருந்து அனைத்து சித்தர்களும் அண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் வருகிறார்கள்.சித்தர்களோடு அருட்பெரும் ஜோதி வள்ளலாரும்,ரமணமகரிஷியும்,வேதாத்திரி மகரிஷியும்,ஷீர்டி சாய்பாபாவும்,விசிறிச்சாமிகளும்,காஞ்சி சங்கராச்சாரியார்களாக முன்பு இருந்தவர்களும்,ரஜினியின் குரு பாபாவும் கிரிவலம் வருவது வழக்கம்.இப்படி கிரிவலம் வரும்போது சிலருக்கு காட்சியளிப்பதுண்டு;பலருக்கு தீட்சையளிப்பதும் உண்டு;பலரிடம் பேசுவதும் உண்டு;ஒரு நாளுக்கு ஒருமணி நேரம் வீதம் குறைந்தது ஐந்து ஆண்டுகள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வரவேண்டும்;மாதம் ஒரு முறை(திருவாதிரை நட்சத்திரம் எனில் மிகவும் சிறப்பு) அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்ல வேண்டும்;அவ்வாறு கிரிவலம் செல்லும் போது கிரிவலப் பயணம் முழுவதும் ஓம்சிவசிவஓம் என்று ஜபிக்க வேண்டும்;இவ்வாறு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் செய்தால்,நாம் விரும்பும் சித்தரை நேரில் தரிசிக்கும் சந்தர்ப்பம் அமையும்;அந்த சித்தரிடம் தீட்சையும் கிடைக்கும் என்பது சித்த ரகசியம் ஆகும்.
இந்த நந்தன வருடத்தின் கார்த்திகை மாத பவுர்ணமியானது 27.11.12 செவ்வாய்க்கிழமை இரவில் தான் கார்த்திகை மாதத்து பவுர்ணமி அமைந்திருக்கிறது.எனவே,இந்த நாளில் அண்ணாமலை கிரிவலம் செல்பவர்கள் பின்வரும் ஆன்மீக வழிமுறையைப் பின்பற்றினால்,சித்தர்களின் அருட் பார்வையும்,அண்ணாமலையின் ஆசியும் கிடைக்கும் என்பது சர்வநிச்சயம்.
இன்று 27.11.12 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் நாளை 28.11.12 புதன் கிழமை இரவு 9.40 வரையிலும் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;அவ்வாறு செல்லும்போது மஞ்சள் வேட்டி மட்டும் (பெண்கள் எனில்,மஞ்சள் நிறம் மட்டும் இருக்கும் ஆடைகள் அணிந்து) உடுத்தி,ரூ.1/-நாணயம் அல்லது ரூ.5/-நாணயம் குறைந்தது 150 சேகரித்துக் கொண்டு செல்ல வேண்டும்.அதே போல 150 பழங்கள் (எந்தப் பழங்களாக இருந்தாலும் சரி) சேகரித்துக் கொண்டு கிரிவலம் செல்ல வேண்டும்.கிரிவலப்பாதையில் நாம் எதிர்கொள்ளும் துறவிகள் ஒவ்வொருவரிடமும் ஒரு நாணயத்தையும்,ஒரு பழத்தையும் தானமாக வழங்க வேண்டும்;அந்த துறவி நம்மிடமிருந்து வாங்கியதும்,நாம் அவரை கையெடுத்துக் கும்பிட வேண்டும்;முடிந்தால் அவரது கால்களில் விழுந்து கும்பிடவும் செய்யலாம்;
வசதியுள்ளவர்கள் பழங்களுக்குப் பதிலாக உணவுப் பொட்டலங்கள் வழங்கலாம்; மனமுள்ளவர்கள் ரூபாய் நாணயம் ஒன்று,ஏதாவது ஒரு பழம்,ஒரு உணவுப்பொட்டலம்,காவிநிற ஆடை மற்றும் குடிநீர்பாட்டில் என்று ஒரு பேக்கேஜாகவும் தானம் செய்யலாம்.
இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளியவர் நமது ஆன்மீக குரு ஆவார்.அவருக்கு கோடி அண்ணாமலை நன்றிகள்!!!
வசதி குறைந்தவர்கள் ஐந்து கிலோ நவதானியங்களையும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டையும் வாங்கி கிரிவலப் பாதையின் ஓரத்தில் மனித காலடி படாத இடங்களில் தூவலாம்;அடுத்த கார்த்திகை மாத பவுர்ணமிக்கு(17.11.2013 ஞாயிறு) இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள ஆன்மீக வழிகாட்டுதலைச் செயல்படுத்திட நமது ரிமைண்டரில் சேமித்தும் வைக்கலாம்.
ஓம்சிவசிவஓம்
சிறப்பு பகிர்வுக்கு நன்றி...
ReplyDelete