ஸ்தல வரலாறு; திருக்கடையூரில் மார்க்கண்டேயனை சம்ஹாரம் செய்யத் துணிந்த எமன்,மார்க்கண்டேயன் மீது பாசக்கயிற்றை வீசினான்.அது மார்க்கண்டேயன் கட்டியணைத்திருந்த சிவலிங்கம் மீது பட்டதால்,சிவனுக்கு கோபம் உண்டானது;சிவபெருமான் தனது பக்தன் மார்க்கண்டேயனைக் காக்கும்பொருட்டு,எமனுக்கு சாபம் கொடுத்தார்.இதனால்,தனது தெய்வீக சக்திகளை இழந்த எமன்,விஸ்வாமித்ரமகரிஷியை அணுகி,இதற்கான விமோசனத்தைக் கேட்டான்.அவரது ஆலோசனைப்படி,நுரையுடன் கூடிய சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து,பூஜித்தான்.தொடர்ந்து பல ஆண்டுகளாக பூஜித்ததால்,எமனுக்கு சாப நிவர்த்தி கிடைத்தது.அப்படி சாப நிவர்த்தி கிடைத்த இடமே,ஸ்ரீகாலகாலேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.
இறைவன்:ஸ்ரீ கால காலேஸ்வரர்,இறைவி:ஸ்ரீகருணாகரவல்லி
சிறப்புகள்:ஸ்ரீகாலகாலேஸ்வரருக்கும் ஸ்ரீகருணாகரவல்லி தாயாருக்கும் இடையே ஸ்ரீகால முருகன் சன்னதி அமைந்திருக்கிறது.இந்த ஸ்ரீகால முருகன் சன்னதியின் நேர் பின்புறமாக நஞ்சுண்டேஸ்வரர் என்ற பெயரில் ஒரு தனி சிவபெருமான் அமைந்திருக்கிறார்.
இந்த ஆலயத்தில் ஸ்ரீகரிவரதராஜப் பெருமாள் சன்னதி அமைந்திருக்கிறது.
தட்சிணாமூர்த்தியின் திரு உருவம் 5 அடிக்கும் மேலாக காட்சியளிக்கிறார்.
இங்குள்ள வில்வ மரத்தின் காய்கள் உருண்டையாக இல்லாமல்,நீளவடிவில் இருக்கிறது ஒரு சிறப்பு ஆகும்.
கோயிலின் முக்கியத்துவம்:குழந்தைப் பேறு இல்லாமை,நாட்பட்ட நோய்கள் தீரவும்,ஆயுள்பயம் உள்ளவர்கள் திருக்கடையூர் சென்று சதாபிஷேகம்,ஆயுஷ்ஹோமம்,சஷ்டியாப்த பூர்த்தி செய்ய முடியாதவர்கள் இங்குவந்து ஸ்ரீகாலகாலேஸ்வரரை வழிபட்டு சாந்திபூஜைகள் செய்தால்,பூரண நலம் பெறுவார்கள்.
இருப்பிடம்:கோயம்புத்தூரிலிருந்து சத்யமங்கலம் செல்லும் வழியில் 16 ஆவது கிலோ மீட்டரில் கோவில் பாளையம் என்னும் ஊரில் அமைந்திருக்கிறது.காந்திபுரத்திலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment