$ இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி கோவில் மூலவரின் பின்புறம் இருப்பதாக ஒரு செய்தி உலவுகிறது.நாடி ஜோதிடத்தில்,திருஅண்ணாமலையின் மீது இருப்பதாக தெரிகிறது.மலைச்சரிவில் மூங்கில் தோப்பும்,குள்ள நெல்லி இனமும் அபூர்வ மணம் வீசும் அதியப் பூவும் செங்கல் சிதைவுகளும் சுனையும் கூடிய வித்தியாசமான சூழலில் அமைந்திருக்கிறது.யாராவது இந்த மாதிரியான அமைப்பை அண்ணாமலை மீது பார்த்திருக்கிறீர்களா?
$ பால் பிரண்டன் என்ற மேல்நாட்டுக்காரர்,ரமண மகரிஷியின் பக்தர்.இவர் 1930 இல் திரு அண்ணாமலையில் சிறிது காலம் வாழ்ந்தார்.தனது அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதிவெளியிட்டார்.அதில் ரமண மகரிஷி பற்றியும்,திரு அண்ணாமலை பற்றியும் எழுதியிருந்ததால்,அதன்பிறகு,இங்கு ஐரோப்பக் கண்டமும்,அமெரிக்கக் கண்டமும் வரத் துவங்கியது.
$ அண்ணாமலை கோபுரங்களைப் பற்றி எம்.ஹெச்.க்ரேவி என்பவர் அருமையான ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
$ நள்ளிரவு 12 மணிக்கு அண்ணாமலை மீது சித்தர்கள் பூஜை செய்வார்கள்.அப்போது எழுப்பப் படும் சங்கொலியை அண்ணாமலை பக்தர்கள் பலரும் கேட்டிருக்கின்றனர்.
$ஆன் மார்ஷல் என்பவர் எழுதிய இந்தியாவில் குருவைத் தேடி என்ற நூலும், பால் பிரண்டன் எழுதிய ரகசிய இந்தியாவில் ஒரு ஆராய்ச்சி என்ற நூலும் பிரபலமானவை.இவைதான் எதிர்காலத்தில் ஐரோப்பாக் கண்டமே இந்து தர்மத்துக்கு மாறுவதற்குக் காரணமாக இருக்கப் போகின்றன.
$ ஆப்தர் ஆஸ்பர்ன் என்பவர் எழுதிய ரமண மகரிஷி அண்ட் தி பாத் ஆப் செல்ப் நாலட்ஜ் என்ற நூல் இங்கிலாந்தில் ஒரு மகத்தான ஆன்மீக புரட்சியை உருவாக்கிவிட்டது.
$ மே 2001 முதல் வாரத்தில் இரவு 9 மணிக்குள் ஒரு பறக்கும் தட்டு வந்தது.திரு அண்ணாமலையின் மலையை ஒரு சுற்றிவிட்டு,தென் மேற்கு திசையில் போய் மறைந்தது.
$ 14.4.1950 இரவு 8.47க்கு அண்ணாமலையில் இரமண மகரிஷி முக்தி அடைந்த நேரம் இது.அப்போது வானில் ஒரு நட்சத்திரம் மின்னி,வடகிழக்கில் நகர்ந்தது.அண்ணாமலையில் கலந்தது.ஜோதிடர்கள் இந்த நேரத்தை வைத்து ஆன்மீக ரீதியாக ஜோதிட ஆராய்ச்சி செய்யலாம்.
$ காக புஜண்டர் வழி நாடி ஜோதிடம் சொல்லும் ஒரு முஸ்லீம் குடும்பம் திரு அண்ணாமலையில் இன்றும் இருக்கின்றனர்.
$ மூன்று பவுர்ணமிகளுக்குத் தொடர்ந்து அண்ணாமலைகிரிவலம் சுற்றினால்,எப்பேர்ப்பட்ட பிரச்னையும் தீர்ந்துவிடும் என்பது நிரூபிக்கப்பட்ட நம்பிக்கை!!!
$ செவ்வாய்க்கிழமை கிரிவலம் சென்றால்,கோடி கோடியாக மோட்சம் கிடைக்கும் என்பது சேஷாத்ரி மகரிஷியின் அருள்வாக்கு!!!
நன்றி: திருவண்ணாமலை அரிய செய்திகள் 1000,எழுதியவர்:ஏ.டி.எம்.பன்னீர்செல்வம், விஜயா பதிப்பகம்,20,ராஜ வீதி,கோயம்புத்தூர்-1.தொலை பேசி:0422-2394614,2382614. விலை ரூ.50/-
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment