தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.அதெப்படி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது வரும் என்ற சந்தேகம் பல காலமாக எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது.பணம் சம்பாதிக்கும் வேகத்தில் அவ்வப்போது இந்த நினைவுகள் நினைவுக்கு வரும்;அதோடு சரி! ஆனால் இன்று அதற்கான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன.ஆஹா! சிவபூமிதான் நாம் வாழும் பூமி என்று தெரிந்ததும் இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியும்,பெருமையும் கொள்கிறேன்.ஆன்மீகக்கடல் பெருமைப் படுகிறது.
இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர் இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.இதற்காக நாம் ஜபிக்கும் ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தில் நூற்றில் ஒரு பங்கினை இவருக்கு நாம் வழங்குவதே மிகப் பொருத்தமாக இருக்கும்.
குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்)
குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய மக்கீஸ்வரம் என்ற சிவாலயம் இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது.இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283)
தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி,இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி.இந்த சிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)
இலங்கைக்கு தெற்கே கன்னி,குமரி,காவிரி என்று ஒன்பது நதிகளும்,ஏழு மலைகளும் கொண்ட மகேந்திரமலை என்ற திருத்தலத்தில் வேதங்களும்,ஆகமங்களும் தோன்றி வளர்ந்து சிவமணம் கமழ்ந்து இருந்தது.ஈசன் அருளிச்செய்த புண்ணிய வேத ஆகமங்கள் தோன்றிய தென்னகம் உலகிலேயே மிகவும் புனிதமான திசை என்று வடநாட்டிலிருந்து வந்து தமிழ்த்தொண்டு புரிந்த திருமூலர் போற்றியுள்ளார்.
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுன்
பேறான வேத ஆகமமே பிறத்தலால்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே (திருமந்திரம்)
மன்னு மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் (திருவாசகம்)
என்று தெய்வத் திருமுறைகள் தென்னாட்டு வேதங்களையும் ஆகமங்களையும் போற்றுகின்றன.திருக்கேதீஸ்வரம்,திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351)
ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்புராணங்கள் தெரிவிக்கின்றன. ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.
படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,வாழ்க்கையையும்,பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).
வட அமெரிக்காவில் கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது.கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள்.சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.ஜப்பானில் சந்திகளிலும் சதுக்கங்களிலும் சிவாலயங்களை நிர்மாணித்து வழிபட்டு வந்துள்ளனர். போர்னியா நாட்டுக்குகைகளிலிருந்து ஈசன் திரு உருவங்கள்கண்டெடுக்கப்பட்டுள்ளன.சுமத்திராவில் பெரிய அளவிலான லிங்கப்பரம்பொருளும் அர்த்தநாரீஸ்வர வடிவமும் கிடைத்துள்ளது.ஹர என்ற வடமொழிச்சொல்லும் அப்பா என்ற தமிழ்ச்சொல்லும் சேர்ந்து ஹரப்பா என்றாயிற்று.தென் இந்திய இசையின் ஒரு ராகப்பெயர் கனடா.இந்தப் பெயரில் ஒரு வல்லரசு நாடு இருப்பதை நாம் அறிவோம்;அமெரிக்காவிலுள்ள உருகுவே என்ற ஊரின் பெயர் ஒரு தமிழ்ச்சொல்.ஈரான் என்பது இரட்டைப்பசு என்று பொருள் தரும் தமிழ்ச்சொல்.ஈராக் என்பதற்கு இரட்டையுடல் என்ற தமிழ் அர்த்தம் உண்டு.பஞ்சாக்கை என்ற சிவத்தலத்தை அப்பர் தேவாரம் போற்றியுள்ளது.பஞ்சாக்கை என்பது இன்றைய பஞ்சாப் ஆகும்.சூரிநாம்,சகாரா,ருமேனியா,யமன்(ஏமன்),மங்கோலியா ஆகியவையெல்லாம் ஆரிய மொழிச்சொற்களாகும்.பிள்ளைப்பண் என்பதே பிலிப்பைன்ஸ் ஆனது;ஓமன் என்பது ஓங்காரேஸ்வரனைக் குறிக்கும்;ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஜலால்கோட்,பாகிஸ்தானில் இருக்கும் ஜெயில் கோட் ஆகிய பெயர்களில் கோட்டை என்ற தமிழ்ச்சொல் உள்ளது.
பாரதப்பெயர்கள் எல்லாம் மூல உச்சரிப்பே தெரியாத வகையில் சிதைத்து வழங்கப்படுவது இன்றும் இயல்பு.தூத்துக்குடி,கோழிக்கோடு போன்றவையெல்லாம் டூட்டிகுரின்,காலிகட் என்றெல்லாம் மாற்றப்படுவழங்கப்படுவது போல,மேற்கூறியவைகளும் மாறியுள்ளன.ஆப்கானிஸ்தானின் பழைய பெயர் காந்தாரம்.இன்றும் இதிலுள்ள ஸ்தானம் என்பது சமஸ்க்ருதப் பெயர்.காந்தார நாட்டு இளவரசியே காந்தாரி.காந்தாரம்,பியந்தைக் காந்தாரம்,காந்தார பஞ்சமம் ஆகியவையெல்லாம் தேவாரத் திருமுறைப் பண்களின் /ராகங்களின் பெயர்களாகும்.ப்ரம்மதேசம் என்பதே இன்றைய பர்மா.அகஸ்தீஸ்வரம் என்பதே இன்றைய ஆஸ்திரேலியா.திருச்செந்தூருக்கும் இலங்கைக்கும் இடையே முழுகிப்போன தலமே கந்தமாதனம் ஆகும்.(பக்கங்கள் 354,355,356)
ஓம்சிவசிவஓம்
ஆச்சரியமான தகவல்கள் ஐயா.
ReplyDeleteதிருச்சிற்றம்பலம்
மிக அருமையான பதிவு ஐயா , எவ்வளவு விஷயங்களை நாம் மறந்திருக்கிறோம். உலகை படைத்த அந்த பரம்பொருளின் ஊரில் அல்லவா நாம் இன்று பிறந்திருக்கிறோம் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் இது. தமிழ்நாட்டில் பிறந்தது எவ்வளவு புண்ணியம்.
ReplyDeletenalla thagaval nandri
ReplyDeletereally great data thanks
ReplyDeleteஅருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeletesuperb post (www.astrologicalscience.blogspot.com)
ReplyDeleteஇப்பொழுது தாஜ்மஹால்
ReplyDeleteஇருக்கும் இடம் ஒரு
இந்து சிவாலயம் என்ற
கருத்தும் உண்டு;
இவற்றில்
எவ்வளவு உண்மை
என்பது
எம்பெருமானுக்கேத் தெரியும்;
arputhamana thagaval.arumaiya iruku thodarnthu ezuthikitte irunga vazga ungal sevai.
ReplyDeletenalla irukku sir.namma history very nice.
ReplyDelete