Tuesday, November 1, 2011

ஹிந்துதர்மத்தைக் காக்க இரு தொலைக்காட்சிகள்



கடந்த பத்துஆண்டுகளில் மாவட்டத்துக்கொரு கிறிஸ்தவ தொலைக்காட்சிகள் உருவாகிவிட்டன.தொழில்வளம் மிகுந்த மாவட்டங்களில் குறைந்தது ஐந்து கிறிஸ்தவ மதமாற்றச் சேனல்கள் 24 x 7 என்று ஒளிபரப்பாகி,மதமாற்ற வேகம்,சுனாமி வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.நாம் வேலைக்குப் போகிறோம்;வேளாவேளைக்கு சாப்பிடுகிறோம்;திமுக,அதிமுக என சண்டையிட்டுக்கொள்கிறோம்;விஜய்,அஜீத் என நமது மகன்கள் சண்டையிட்டுக்கொள்கிறார்கள்.நமது இந்து தர்மத்தின் பெருமைகளை அழிக்கவும்,முடிந்தால் நாம் மறக்கடிக்கவும் இந்தியா முழுக்கவுமே புராஜெக்ட் போட்டு கிறிஸ்தவ மதமாற்ற வேலைகள் தீவிரமாகவும்,அதே சமயம் மறைமுகமாகவும் நடைபெற்று,வெற்றிபெற்றும் வருகின்றன.வாடிகன் இந்த வேலைகளால் மிகுந்த சந்தோஷப்பட்டு,மேலும் மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை பல நாடுகள் வழியாக இந்தியாவில் பாய்ச்சிக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில்,சோனியாவை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக சன் டிவியும் நமது சித்தர்கள்,புராதன கோவில்களை நக்கலடித்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்பியிருக்கின்றன.அதன் வீரியத்தை நாம் இன்னும் உணரவில்லை;
இந்த சூழ்நிலையில் க்ருஷ்ணஸ்வாமி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் க்ருஷ்ணசுவாமி அவர்களும்,ஜனதாக் கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி அவர்களும் இணைந்து “க்ருஷ்ணா டிவி” என்ற சேனை விஜயதசமி 6.10.11 அன்று முதல் அரசு கேபிள் கழகம் மூலம் ஒளிபரப்பத் துவங்கியிருக்கிறது.

அதேபோல் , தமிழன் தொலைக் காட்சியில் :விஸ்வதரிசனம்” என்னும் நிகழ்ச்சி மூலம் நமக்கு மிகவும் அறிமுகமான திரு.குமரி க்ருஷ்ணன் அவர்கள் விஜயதசமியன்று  “தரிசனா டிவி” தொடங்கியுள்ளார்.இந்த டிவியின் துவக்க விழா நிகழ்ச்சியில் கன்னியாக்குமரி வெள்ளிமலை சுவாமிகள் ஸ்ரீ சைதன்ய மஹராஜ், ஹிந்துமுன்னணி தலைவர் இராம.கோபாலன் B.E.,விஸ்வ ஹிந்து பரிஷத்  துணைத்தலைவர் திரு.ஆர்.எஸ்.நாராயண ஸ்வாமி,பா.ஜ.க.தலைவர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன்,பா.ஜ.க.தேசிய செயற்குழு உறுப்பினர் திரு.இல.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு தரிசனா டிவி சானலைத் தொடங்கி வைத்தனர்.
ஆன்மீகக்கடல் வாசகர்களே! உங்கள் பகுதி கேபிள் ஆபரேட்டரிடம் இந்த சேனல்களின் இணைப்பைத் தருமாறு வலியுறுத்துங்கள்.
ஓம்சிவசிவஓம்  ஓம்ஹரிஹரிஓம்

1 comment: