இந்த கர வருடம்,ஐப்பசி மாதத்தின் பவுர்ணமி நாளை இரவு வருகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபத்திரகாளியம்மனின் கோவிலில் நாளை இரவு 10 மணிக்கு பவுர்ணமி பூஜை ஆரம்பமாகிறது. மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில் இராஜபாளையத்துக்கு முந்திய ஊர்தான் ஸ்ரீவில்லிபுத்தூர்.ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கினால்,சிவகாசி ரோட்டில் ஒரு கிலோ மீட்டர்கள் தூரம் வரை நடந்தால் முதலியார்பட்டித்தெரு வரும்.அந்தத் தெரு முழுக்கவும் நெசவினை தமது குலத் தொழிலாகக் கொண்ட சாலியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.இந்தத் தெருவின் மையப்பகுதியில் வடக்கு நோக்கியவாறு ஒரு ஆர்ச் இருக்கிறது.அதுதான் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மனின் கோவிலின் நுழைவாசல்!உள்ளே சென்றால் இருபுறமும் நெசவுச் சப்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும்.இங்குதான் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மனின் கோவில் அமைந்திருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கி,கையால் பணியாரம் சுடும் பத்திரகாளி கோவிலுக்கு எப்படி போகணும்? என்று கேட்டீர்கள் எனில்,சில நேரம்,சிலர் உங்களை அழைத்துச் சென்றே கொண்டுபோய்விட்டுவிடுவார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பத்திரகாளியம்மன் கோவில்கள் இருக்கின்றன என்பதை நினைவிற் கொள்ளவும். ஒரு பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த பவுர்ணமி பூஜை வரும் முன்பே அவர்களின் மிக முக்கியமான அல்லது மிக தீவிரமான பிரச்னை தீரத்துவங்கும்; அல்லது தீர்ந்திருக்கும்.இது 30 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் அதிசயம் ஆகும். ஓம்சிவசிவஓம்
ஐய்யா!
ReplyDeleteநடிகர் ராஜேஷின் தொடரை பழையபடி வெளியிடுங்களேன். நானும் பலமுறை வந்து ஏமாற்றத்துடன் சென்றேன். ப்ளீஸ்.