Saturday, November 19, 2011

கார்த்திகை மாத அமாவாசை(24.11.11 வியாழன்)யைப் பயன்படுத்துவோம்

கார்த்திகைமாத அமாவாசை 24.11.11 வியாழக்கிழமை மதியம் சுமார் 2.40 முதல் 25.11.11 வெள்ளி மதியம் சுமார் 12.40 வரை அமைந்திருக்கிறது.இந்த நேரத்தில் நமது ஆத்மாக்காரகனாகிய சூரியனும்,மனக்காரகனாகிய சந்திரனும் ஒன்று சேரும் நேரம் நிஜத்தில் மூன்றே மூன்று விநாடிகளே!!!

சூரியனிடமிருந்து பல கோடி கிலோ மீட்டர்கள் தூரத்தில் நாம் வசிப்பதால்,அமாவாசை அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு இருப்பதாக நாம் நம்புகிறோம்.

ஓம்சிவசிவஓம்  மந்திர ஜபம் முதன் முதலாக இந்த நாளில்ஜபிக்க ஆரம்பிக்கலாம்.அப்படி ஆரம்பிக்க ஏற்ற நேரங்கள் :24.11.11 வியாழன் இரவு 8.00 மணி முதல் 8.12க்குள்ளும், 25.11.11 வெள்ளி  காலை 10.00 மணி முதல் 10.12க்குள்ளும்,மாலை 5.00 மணி முதல் 5.12க்குள்ளும் சிறந்த ஓரைகள் ஆகும்.



வெகு நாட்களுக்கு முன்பு ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்து,தொடர்ந்து ஜபிக்க இயலாதவர்களும் இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில்(உங்களுக்கு வசதியான நேரத்தில்)ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்.


அப்புறம் ஒரு முக்கிய செய்தி: 21 வயதுக்குக் குறைவானவர்கள்,ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது என்பது விதி.ஆனால்,21 வயதை விட குறைந்த ஆண்கள்,பெண்கள் ஓம்சிவசிவஓம் ஒரு நாளுக்கு ஒரே ஒரு முறை 108 தடவை எழுதலாம் என எனது ஆன்மீக குரு மிஸ்டிக் செல்வம் தெரிவித்துள்ளார்.கூடவே,சில நிபந்தனைகளையும் தெரிவித்துள்ளார்.


21 வயதை விடக்குறைவான வயதுடையவர்கள் இந்த மந்திரத்தை எழுத ஆரம்பித்தப்பின்னர்,எக்காரணம் கொண்டும் அசைவம் சாப்பிடக்கூடாது.

அசைவ சூப்கள்,அசைவம் மறைமுகமாக கலந்திருக்கும் உணவுகள்(கேக்குகள்,பன்னாட்டு நிறுவனங்களின் பற்பசைகள்) பயன்படுத்திடக் கூடாது.


அதே சமயம்,ஒரு நாளுக்கு ஒரே ஒரு 108 முறை மட்டுமே எழுத வேண்டும்.அதை விட,அதிகமாக எழுதுவது தப்பு.


ஏனெனில்,அதற்கு மேல் எழுதும்போது,அவர்கள் மனதுக்குள் உருப்போடும் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.இதனால்,ஏற்படும் அதீத சிவ சக்தியை தாங்கும் திறன் கிடையாது.


ஓம்சிவசிவஓம்

4 comments:

  1. ஓம்சிவசிவஓம்

    ReplyDelete
  2. சிலருக்கு ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் எதனால் பயன்படாமல் போகும்?
    இந்தத் தலைப்பில் வெளியான பதிவை பார்தவுடன் பலத்த சந்தேகங்கள் எனக்குள் ஏற்பட்டது?
    நான் சாதாரன நாட்களில் காலை 30நிமிடம் நேரம் கிடைத்தால் மாலை 30நிமிடம் ஓம்சிவசிவஓம் ஜெபிப்பேன் விசேடநாட்களாகிய அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் காலை 1மணித்தியாலங்கள் மாலை 1மணித்தியாலங்களும் நேரம் கிடைக்கும் போதும் ஜெபிப்பது வழமை இனி இப்படி ஜெபிக்க்கூடாதா? இனி நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெபிக்கக் கூடாதா? விசேடநாட்களில் கூடுதல் நேரம் ஜெபிக்கக் கூடாதா?

    பாலசிங்கம்

    ReplyDelete
  3. பால சிங்கம் அவர்களுக்கு,ஒவ்வொரு நாளும் ஒரே சீராக ஜபிக்காமல்,பலர் வேகமாக ஒப்பிப்பதுபோல ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகின்றனர்.அப்படி ஜபிக்கக் காரணம்,விரைவாக ஒரு லட்சம் தடவை ஜபித்துமுடிக்க வேண்டும் என்ற எண்ணமே காரணம்.நீங்கள் ஜபிக்கும் முறை சரியானது.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  4. வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete