எதிர்வரும் 16.5.2011 திங்களும்,17.5.2011 செவ்வாயும் பவுர்ணமி திதி வருகிறது.திங்கள் மாலை முதல் செவ்வாய் மாலை சுமார் 5 மணி வரையிலும் வைகாசி பவுர்ணமி வருவதால்,16.5.11 திங்கள் இரவுதான் பவுர்ணமி என கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தவிர,இந்த வைகாசி மாதம் இரண்டு பவுர்ணமிகள் வருகின்றன.ஆமாம்.வைகாசி மாதத்தின் இறுதியிலும் ஒரு பவுர்ணமி வருகிறது.ஆனால்,அது விசாக நட்சத்திரத்தில் வரவில்லை;கேட்டை நட்சத்திரத்தில் வருகிறது.எனவே,முதல் பௌர்ணமியே வைகாசி விசாகம்.
பவுர்ணமியன்று ஏதாவது ஒரு அம்மன் சன்னதியில் இரவு 9 மணி முதல் 12 மணி வரை அமர்ந்து,(பகலில் முடிந்தால் எதுவும் சாப்பிடாமல் இருந்து)அல்லது ஒரு மணி நேரமாவது ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;நமது ஒவ்வொரு ஓம்சிவசிவஓம் ஜபமும் ஒரு கோடி தடவை ஜபிப்பததற்கான பலனை நமக்குத் தரும்;
கூடவே,இரண்டு கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சம் வைத்து ஜபிப்பதால்,ஒரு ஓம்சிவசிவஓம் ஜபம்,100 கோடி தடவை ஜபித்தமைக்கான பலனைத் தரும்.
இருந்தும்,ஏன் நமது நியாயமான கோரிக்கை அல்லது ஆசை விரைவில் நிறைவேறுவதில்லை?
நாம் குறைந்தது கடந்த ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்களை/கர்மங்களை இந்த ஜன்மத்தில் அனுபவிக்கிறோம்.புண்ணியத்தையும் தான்.இதில் பாவ அல்லது கர்மக்கணக்கு அதிகமாக இருப்பதால் கஷ்டப்படுகிறோம்.இந்த கர்மக்கணக்கினை கரைக்க கலியுகத்தில் இறைநாம ஜபமே ஏற்றது.சுலபமானது;எளியது;
தவிர,நமது கர்மத்தை நாம் மட்டுமே கரைக்க முடியும்;வேறு யாராலும் கரைக்க முடியாது!!!
எனவே, நமது ஓம்சிவசிவஓம் மந்திரஜப எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்ட வேண்டும்;ஒரு நாளுக்கு இரண்டு வேளை வீதம்,ஒரு வேளைக்கு ஒரு மணி நேரம் என ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தால்,நாம் ஒரு நாளுக்கு 400 முறையே ஓம்சிவசிவஓம் ஜபித்திருப்போம்.(எண்ணிப்பார்த்தாலும் சரி,எண்ணிப்பார்க்காமல் இருந்தாலும் சரி)
நமது ஓம்சிவசிவஓம் மந்திரத்தின் ஜப எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டியதும்,சிறு சிறு அதிசயங்களை நாம் உணரத்துவங்குவோம்;
இதை உணர்ந்த ஓம்சிவசிவஓம் வலைப்பூ வாசகர்கள்,தங்களின் அனுபவங்களை எழுதியனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment