Saturday, May 7, 2011

சுதேசி கேள்வி பதில்:மே 2011




கேள்வி;வரி ஏய்ப்பாளர் ஹஸன் அலிக்கு பாஸ்போர்ட்டுக்கு பரிந்துரைத்ததற்காக பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் இக்பால்சிங் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது பற்றி?

பதில்:

காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டவர் இவர்.பெரும் ஊழல் செய்தாலோ,பெரும் ஊழலுக்கு உடந்தையாக இருந்தாலோதான் பெரும் பதவி காங்கிரசால் வழங்கப்படும்.இக்பால் குற்றவாளியே!



கேள்வி:அன்னா ஹசாரியின் போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை;ரெலேகான் சித்தியில் அன்னா ஹசாரே செய்தது சாதனையா? என கல்கியில் ஞாநி எழுதியுள்ளாரே!



பதில்:முன்னே போனால் கடிக்கும்;பின்னே போனால் உதைக்கும் இனத்தைச் சேர்ந்தவர் போலும்! அப்துல்கலாமையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.ஆனால்,கார்கில் போர் நேரத்தில் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு ஜால்ரா அடித்தார்.தெளிவாக எழுதும் கலை அறிந்த தெளிவற்ற “அஞ்ஞானி”.



கேள்வி:ஊழலை ஒழிக்க ஆதரவு கேட்டு அன்னாஹசாரே சோனியாவிற்கு கடிதம் எழுதுகிறார்.ஊழலை ஒழிக்க ராகுல்காந்திக்கு கடிதம் எழுதுகிறார் கிருஷ்ண ஐயர்.ஏதாவது புரிகிறதா?

பதில்:ஓ! ஊழலின் ஊற்றுக்கண் இவர்கள்.இவர்களுக்கு தலையாட்டுபவர் பிரதமர் மன்மோகன்.எனவே,தஞ்சாவூர் பொம்மைக்கு எழுதாமல் உயிருள்ள ஜீவனுக்கு,காரணகர்த்தாக்கள் எவர் என அறிந்து எழுதியுள்ளனர் என்று புரிகிறது.

சுயமரியாதைச் சிங்கம்தான் மன்மோகன்!



கேள்வி:தகவல் அறியும் உரிமையின் சட்டத்தின் கீழ் சோனியாவின் மதத்தைச் சொல்ல முடியாது.அது தனி நபர் சுதந்திரம் என்று கூறியிருக்கிறதே உச்சநீதிமன்றம்?

பதில்:பொதுவாழ்வில் இருக்கும் ஒருவர் பற்றிய முக்கியத் தகவலை கோடானுகோடி மக்கள் விரும்பும் தகவலை மறைத்து வாழ்வது சோனியா & ராகுல்களின் அயோக்கியத்தனம்.காங்கிரஸ்,கம்யூனிஸ்டு எனும் சுயமரியாதையற்ற அடிமைகள் இருக்கும் வரை இந்த நிலை நீடிக்கத்தான் செய்யும்.

No comments:

Post a Comment