30.4.11 சனிப்பிரதோஷமும் ஓம்சிவசிவஓம் மந்திரமும்
சென்ற சனிக்கிழமையன்று சனிப்பிரதோஷம் வந்தது.ஒரு சனிப்பிரதோஷத்தன்று ஏதாவது ஒரு சிவாலாயம் சென்று பிரதோஷ நேரத்தில் நந்திபகவானை வழிபட்டால்,ஐந்து ஆண்டுகள் தினமும் சிவாலயம் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என சிவபுராணம் தெரிவிக்கிறது.
ஒரு மாதம் முன்பாகவே திட்டமிட்டு,சுமார் ஐந்து ஊர்களிலிருந்து பதினைந்து ஜோதிட வாடிக்கையாளர்களை தயார் படுத்தி,அண்ணாமலைக்கு 30.4.2011 அன்று காலையிலேயே வந்துவிட்டோம்.
கிரிவலப்பாதையில் அக்னி லிங்கத்தை வழிபட்டப்பின்னர், அரசு கலைக்கல்லூரி வரும்.அதைக் கடந்ததும்,ஒரு பெரிய மைதானம் போன்ற இடம் ஒன்று திரு அண்ணாமலையை ஒட்டி காட்சியளிக்கும்.இதுதான் உட்பிரகாரம் எனப்படும் உட்கிரிவலப்பாதையின் நுழைவாசல்!!!
இன்றும் கூட சித்தர்கள்,துறவிகள்,மகான்கள்,பிரபலங்கள் கிரிவலம் செல்லுவது இந்தப் பாதையில் வழியாகத்தானாம்.ஏராளமான அதிசயங்களை உள்ளடக்கியுள்ளது இந்த உட்பிரகாரப் பாதை!!!
உடன் வந்த பத்து பேருடன்(என்னையும் சேர்த்து) காலை 10.45 மணிக்கு தண்ணீர் கேன்களுடன் உட்பிரகார கிரிவலப்பாதைக்குள் நுழைந்தோம்.மதியம் 2.30 மணிக்கு குபேரலிங்கத்திற்கு அருகே வந்துவிட்டோம்.
இந்தப் பாதை முழுக்கவும்,மஞ்சள் நிற ஆடைகள் அணிந்தும்,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ஐந்து முக ருத்ராட்சங்களை வைத்தும் ஒரு விநாடி கூட வீணாக்காமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே வந்தோம்.
பத்துபேர்களில் சுமார் எட்டு பேர்கள் இந்த விதமாக ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு வந்தோம்.குபேரலிங்கத்தின் அருகே ஒரு கிராமீய காவல் நிலையம் கிரிவலச் சாலைக்கும் உட்பிரகார கிரிவலப்பாதைக்கும் நடுவே அமைந்திருக்கிறது.
வழியில் காட்டு சிவா குளம் என்ற குளமும்,ஏராளமான வறண்ட குளங்களும் அமைந்திருக்கின்றன.ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் கோப்பாளம் (வெள்ளை அம்புக்குறிக்கு உள்ளே சிகப்பு கோடு) போட்டிருந்தனர்.சில வெள்ளைக்காரர்களும்,காரிகளும் எதிர்ப்பட்டனர்.திடீரென துறவிகளும்,மனிதர்களும் எதிர்ப்பட்டனர்.
கிராமியக் காவல் நிலையம் வழியே கிரிவலச் சாலையை நெருங்கியதும்,அந்த காவல் நிலைய அதிகாரி எங்களை அழைத்தார்.சரிதான் நம்மை விசாரிக்கப் போறாங்கன்னு பயந்தோம்.
இந்தாங்க கோவில் கும்பாபிஷேகப் பிரசாதம் என கை நிறைய தக்காளி சாதம் அனைவருக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்தார்.
அட! ஓம்சிவசிவஓம்

No comments:
Post a Comment