Saturday, May 14, 2011

சென்னை அடையாறில் ஒரு தமிழ்பண்பாட்டை வெளிப்படுத்தும் கடை





ழ கஃபே என்ற பெயரில் அருள் அரசி என்பவர் சென்னை அடையாறில் நடத்திவருகிறார்.இங்கே பதநீர்,இளநீர்,கோலி சோடா முதலான சுதேசி பானங்களுடன்,தமிழ்ப்பண்பாட்டை வெளிப்படுத்தும் பல்லாங்குழி(?!),மண்பானைக்குள் வைக்கப்பட்ட ஸ்பீக்கர் போன்றவை உண்டு.ஆனால்,வெளிநாட்டுக் குளிர்பானங்கள் மட்டும் கிடையாது.

இதற்கு சகோதரி அருள் அரசி சொல்லும் கருத்து:மல்டி நேஷனல் கம்பெனிகளின் நம்மூர் நிறுவனங்களைக் கபளீகரம் பண்ணி,மார்க்கெட்ல ஆதிக்கம் செலுத்தறத ஏத்துக்க முடியாது;இந்த பானங்களை விற்பதைத் தவிர்க்குறது மூலமா எங்களோட சின்ன எதிர்ப்பைக் காட்டுறோம்.இதில் மட்டும் நாங்க சமரசம் செய்யவே மாட்டோம்

தமிழினத் தலைவர் என சொல்லிக்கொள்ளுபவர்கள் செய்ய வேண்டிய தேச சேவையை ஒரு சாதாரண அருள் அரசி,சாப்ட்வேர் என் ஜினியர் செய்வதை நினைத்து,ஆன்மீகக்கடல் இவரைப் போற்றுகிறது.

நன்றி:குமுதம்,18.5.2011 பக்கம் 94,95,96.



No comments:

Post a Comment