Wednesday, May 18, 2011

உங்கள் குழந்தைகளை ஏன் தமிழ் மீடியத்தில் சேர்க்க வேண்டும்?





உலகில் எந்த குழந்தையும் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலும்(ஐந்து வயது முதல் பத்து வயது வரை) தாய்மொழிக்கல்வியிலேயே கற்றால் மட்டுமே மொழித்திறனும்,படைப்புத்திறனும் வளரும் என்பது மனோதத்துவ உண்மை.

இன்றைய நிலவரப்படி எட்டாம் வகுப்புக்குப் பிறகு ஆங்கிலத்தை ஒரு பாடமாகவோ அல்லது இங்கிலீஷ்மீடியம் பள்ளி எனப்படும் மெட்ரிகுலேஷன் பள்ளியிலோ நமது குழந்தையைப் படிக்க வைப்பது நன்று.

ஆனால்,நடைமுறையில் நமது தருமம் மிகு தமிழ்நாட்டில் இருப்பது என்ன?

3 வயதிலேயே இங்கிலீஷ் மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.தாய்மொழியாம் தமிழே தெரியாத ஒரு இனம் உலகில் உருவாகிவிட்டது எனில் அது நமது தமிழ்நாடாகத் தான் இருக்கமுடியும்.விளைவு?

படிக்கும் வயதில் பள்ளியிலும்,வீட்டிலும் தரப்படும் தொல்லைகளால் ஏராளமான தமிழ்நாட்டுக்குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகமாகி,வலிப்பு நோய் மாநிலமயமாகிவிட்டது.இதை எங்கள் ஊர் குழந்தை சிறப்பு மருத்துவர் சொன்னது.ஆனால்,கொந்தளிக்கும் நிஜம்.(எனவே,எனதருமை தமிழ்ப்பெற்றோர்களே,உங்கள் கால்களில் விழுந்து மன்றாடிக்கேட்கிறேன்.உங்கள் குழந்தையை தமிழ் வழிக்கல்வியில் சேருங்கள்)

ஆனால்,நாம் என்ன செய்கிறோம்? எம்புள்ள இங்கிலீஷ் மீடியம் படிக்கிறது என பீற்றிக்கொள்கிறோம்.

இங்கிலீஷ் மீடியம் பள்ளி நடத்துபவர்களின் பின்னணி பணம் பண்ணுவது மட்டுமே.இம்மாதிரியான பள்ளிகளின் ஆசிரியர்களில் எத்தனை பேர்கள் தகுதி வாய்ந்தவர்கள்?வெறும் ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்கள் சம்பளத்துக்கு வரும் ஆசிரியைகளின் கோபங்கள் பிஞ்சுகளை அடிக்கவும்,உதைக்கவுமே!!

உங்கள் குழந்தையின் படைப்புத்திறனையும்,சிந்திக்கும் திறனையும்,தன்னம்பிக்கையையும் நீங்கள் நாசமாக்குகிறீர்கள்.அப்படி நாசமாக்குவதை ஒரு மரபாக ஆக்கிய பெருமை தமிழறிஞர் டாக்டரைச் சேரும்.

இதிலும் பணம் சம்பாதிக்க வழி செய்த இவரா தமிழறிஞர்?புதிய சமுதாயப்பிரச்னையை உருவாக்கி,தமிழினத்தின் தரத்தை சிதைத்துவிட்ட இவரா முத்தமிழ்க்காவலர்?

No comments:

Post a Comment