Thursday, March 17, 2011


கேள்வி:ஆன்மீகத்தால் பல நல்ல விஷயங்கள் நடக்கும்போது உங்களுக்கு மட்டும் ஏன் இந்த வெறுப்பு?

தமிழ் திரைப்பட இயக்குநர் பாலா:ஆன்மீகத்தை நான் வெறுக்கல.நல்ல விஷயங்கள் நடக்குறதா சொல்றீங்க சரி.என்ன வேணாலும் சேவை பண்ணுங்க.எதுக்காக பட்டையை அடிச்சுகிட்டு அங்கியை மாட்டிகிட்டு சேவை பண்றீங்க.மனிதனா சேவை பண்ணாமல் மதத்தின் போர்வையில் சேவை செய்யறது உண்மையான சேவையா எனக்குத் தெரியல.

அதே சமயம் சமீப காலமா ஆன்மீகத்தைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.அதுக்குக் காரணம் ரெண்டு சம்பவம்.ஒரு கோயில்ல ஷீட்டிங் எடுத்தப்போ கோயில் சுவத்துல எண்ணெயில் ஏதேதோ எழுதியிருந்தது.அதுல ஒரு இடத்துல, ‘சாமி! எங்க அக்காவுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்’னு ஒரு சின்னப்பையன் எழுதியிருந்தான்.இதுக்கு மேல ஒரு அடி எனக்கு வேணுமா?

இன்னொரு சம்பவம்.நான் தேனியில் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பக்கத்துல ஒரு கோயில்ல ஐம்பதுபேர் சேர்ந்து, ‘என் தாலியை காப்பாய் சிவசக்தி. . .’ன்னு உருகிப் பாடிக்கிட்டிருந்தாங்க.அந்த ஐம்பது பேரும் என்னை முச்சந்தியில் நிறுத்தி வெச்சு செருப்பால அடிச்ச மாதிரி இருந்திச்சு.அவங்க நம்பிக்கையைத் தவறுன்னு நான் எப்படி சொல்ல முடியும்.தப்புன்னு சொல்ல நான் யாரு.இனி நாத்திகக் கருத்துக்களை நான் பேசவே மாட்டேன்.
நன்றி:குமுதம் பக்கம் 54,16.3.11

No comments:

Post a Comment