ஜோதிட அறிவியலின் படி,கன்னி ராசியில் சனிபகவான் 26.6.2008 முதல் 2011 இறுதி வரையிலும் சஞ்சாரித்துவருகிறார்.எதிர்வரும் 24.3.2011 விடிகாலை முதல் 45 நாட்களுக்கு மீனராசியில் செவ்வாய் பகவான் சஞ்சாரிக்கப்போகிறார்.இதில் செவ்வாய் நெருப்பு மற்றும் யுத்தக் கிரகம் ஆகும்;சனி காற்றுக்கிரகம் ஆகும்.
சனியின் முழுப்பார்வை மிதுனராசியைப் பார்க்கிறது;செவ்வாயின் நான்காம் பார்வையும் 24.3.11 வியாழன் முதல் மிதுன ராசியைப் பார்க்கப்போகிறது.இதன் விளைவாக,மிதுன ராசியில் பிறந்தவர்கள்,மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத விபத்து,சண்டை,வாக்குவாதம்,அனாவசியமான ஆவேசம் அதனால் ஆத்திரமான செயல்பாடுகள்,தற்கொலை முதலானவைகளில் ஈடுபடுவர்.மிதுன ராசியில் சுமார் ஓராண்டாக KETHU பகவான் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மிதுன ராசிக்கும் ,உலக தீவிரவாத நாடு அமெரிக்காவின் தாயகம் இங்கிலாந்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.எனவே,24.3.2011 முதல் 45 நாட்களுக்கு இங்கிலாந்தும் ஏதாவது ஒரு அழிவைச் சந்திக்கும்.
இது தவிர,12 ராசிக்காரர்களும் ஏதாவது ஒருவிதத்தில் இந்த 45 நாட்களுக்குப் பாதிக்கப்படப்போவது உறுதி.
ஆழ்ந்த தெய்வபக்தியும்,தினசரி ஏதாவது ஒரு மந்திர ஜபமும் செய்பவர்களையும்,ஸ்ரீஇராகவேந்திரர்,சித்தர்களில் யாராவது ஒருவர்,குலதெய்வ வழிபாடு தினமும் செய்பவர்,தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்லுவோரை இந்த சனி செவ்வாய்ப் பார்வை பெருமளவு பாதிக்காது.இது அனுபவ உண்மை!!!
ஓராண்டாக மிதுனத்தில்ராகு அல்ல,கேது உள்ளார்.
ReplyDeleteமிதுனராசியில் கேது பகவான் இருக்கிறார்.எனது கவனக்குறைவால் இராகு பகவான் இருக்கிறார் என எழுதிவிட்டேன்.வாசகர்கள் மன்னிப்பார்களாக!!!
ReplyDeleteமின் அஞ்சல் மூலமாகவும்,நேரடியாகவும் சுட்டிக்காட்டிய வாசகர்களுக்கு கூகுள் நன்றிகள்(கூகுள்=1க்குப்பின்னால் 100 சைபர்கள்)
ஜப்பான் சுனாமிக்கு கிரக காரணங்கள் என்ன?
ReplyDelete