Saturday, March 5, 2011

கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட பாட்டி:ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில் சிவராத்திரி விழா சிறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி பத்திர காளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி, 77 வயதான முத்தம்மாள், கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு. பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மகா சிவராத்திரியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார் பட்டி தெரு பத்திர காளியம்மன் கோவிலில் கொதிக்கும் நெய்யில், கையால் அப்பம் சுட்டு வழிபாடு நடத்துவது, கடந்த 48 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்காக மடத்துப்பட்டி முத்தம்மாள், மூன்று மாதம் விரதமிருந்தார். நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு, அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்து வந்த முத்தம்மாள், கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார். பதமாக வெந்த அப்பத்தையும் கையாலேயே எடுத்தார். இவ்வாறு 25 பெட்டி நிறைய அப்பம் சுட்டார். இதை பார்க்க ராஜபாளையம், சிவகாசி பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். பின் இந்த அப்பங்கள் அம்மனுக்கு படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
thanks:http://www.dinamalar.com/News_Detail.asp?Id=199071

No comments:

Post a Comment