Wednesday, March 30, 2011

ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தின் சக்தியை அதிகரிக்கும் அண்ணாமலை கிரிவலம்





நீங்கள் விரைவாகவும்,எளிதாகவும்,சுலபமாகவும் உங்களின் கர்ம வினைகளிலிருந்து விடுபட விரும்புகிறீர்களா?

சுத்தமான(கோடுகள்,டிசைன்கள் இல்லாத) மஞ்சள் வேட்டியை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்;அதே போல்,மஞ்சள் நிறத்தில் ஒரு சட்டையைத் தைத்து வைத்துக்கொள்ளுங்கள்.வசதியிருந்தால்,மஞ்சள் பட்டில் ஆடைகளைத் தயார் செய்து கொள்ளுங்கள்.

மூன்று ஐந்து முக ருத்ராட்சங்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.ஒன்றை கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள்.(பெண்கள் மாத விலக்கு நாட்களிலும் அணிந்திருக்கலாம்.தீட்டு/பாவம் கிடையாது)மற்ற இரண்டையும் வீட்டில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்போது உள்ளங்கைகளில் வைத்து,கைகளை மடக்கி வைத்து ஜபிக்க வேண்டும்.



அதே போல, உங்களால் முடிந்த பிரதோஷம்,அமாவாசை,பவுர்ணமி,திருவாதிரை நட்சத்திர நாள்,துவாதசி திதி வரும் நாள் அல்லது எந்த ஒரு சாதாரண நாளிலும் மேற்கூறியவற்றை எடுத்துக்கொண்டு,விழுப்புரம் அருகிலிருக்கும் திருஅண்ணாமலைக்குச் செல்லுங்கள்.எந்த நாளிலும்,நேரத்திலும்,கிழமையிலும்,கிரிவலம் செல்லலாம்.

மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு,இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்து,கைகளை மடக்கிக் கொள்ள வேண்டும்.அண்ணாமலையின் கிழக்குக் கோபுர வாசலில் இருக்கும் தேரடி முனீஸ்வரர் கோவிலில் முனீஸ்வரரை வழிபட்டு விட்டு,அண்ணாமலையாரை சாலையிலிருந்தே வணங்கிவிட்டு,கிரிவலம் புறப்படலாம்.



கிரிவலத்தின் 14 கிலோ மீட்டர்கள் தூரமும் எவரிடமும் பேசாமல்,ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறே செல்லுங்கள்.களைப்பாக இருக்கும்போதெல்லாம் தண்ணீர் அருந்திக்கொள்ளவும்.முடிந்தால் இளநீர் அருந்தலாம்.(இளநீர் அருந்தினால் அதுவரை நீங்கள் ஜபித்த ஓம்சிவசிவஓம் மந்திர அலைகள் உங்கள் உடலுக்குள் பதிவாகிவிடும் என மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது)

எட்டு லிங்கங்களோடு தற்போது சந்திர லிங்கத்தையும் உருவாக்கியுள்ளனர்.எனவே,இனி ஒன்பது லிங்கங்கள்!! ஈசான லிங்கத்தைக் கடந்து,பூத நாராயணர் கோவிலில் கிரிவலத்தை முடிக்க வேண்டும்.அதுவரை மானசீகமாக ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே வரவும்.

உங்களின் சொந்த ஊர் திரும்பிய சில நாட்களிலேயே நீண்ட கால பிரச்னை தீருவதற்கான வழிமுறை அல்லது உதவி கிடைப்பதை அனுபவபூர்வமாக உணருவீர்கள்.அப்படி உணர்ந்ததும் ஆன்மீகக்கடல் வலைப்பூவுக்கு எழுதவும்.

சிலருக்கு ஓரிரு முறை இதேபோல கிரிவலம் சென்றவாறே ஓம்சிவசிவஓம் ஜபித்தப்பின்பே பிரச்னைகள் தீரும்.

கிரிவல மந்திரம் ஓம்சிவசிவஓம் என நமது குரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

இது தவிர,திருப்பதிக்கு மலையேறிச்செல்லும்போதும்,சபரிமலைக்கு விரதமிருந்து மலையேறும்போதும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாமாம்

3 comments:

  1. Is it okay to drink canned coconut water? we dont really get other in usa?

    ReplyDelete
  2. நல்ல பல செய்திகளை தந்துகொண்டிருக்கிறீர்கள் .. வாழ்த்துக்கள் தொடரட்டும, சிறக்கட்டும் தங்கள் பணி ...

    தங்களுடைய பெயரை அறிந்து கொள்ளலாமா ?

    அப்புறம் பிளாகர் செட்டிங்ஸ் ல் போய் கருத்துரைகளுக்கான
    சொல் சரிபார்ப்பு
    ( WORD VERIFICATION )
    என்ற பகுதியை நீக்கவும் அது பின் ஊட்டம் இடும் அன்பர்களுக்கு தொல்லையில்லாமல் இருக்கும், நன்றி..

    ReplyDelete
  3. வணக்கம் ,
    ஒம் சிவசிவ ஒம் மந்திரத்தின் பலன்களை பற்றி அவப்போது தொடர்ந்து சொல்வதற்கு நன்றி. இவ்வாறு கூறுவதன் மூலம் மந்திரீகத்தை தவறாக பிரயோகித்து செய்யப்படும் செய்வினை ,சூனியம் போன்றவைகளில் இருந்து தப்பித்துகொள்ள முடியுமா?

    **நல்லேந்திர பாண்டியன்,
    திண்டுக்கல்

    ReplyDelete