Thursday, March 24, 2011

g mail banned at china

பீய்ஜிங்: உலகில் அதிகளவில் இணையதள சேவையினை பயன்படுத்தும் நாடான சீனா, கூகுள் தேடுதல் வலைதளத்தில் உள்ள ஜிமெயில் சேவையினை முடக்கி வைத்துள்ளதாக பகிரங்கபுகார் தெரிவித்துள்ளது. சீனாவில் தான் கூகுள் தேடுதல் வலைதளத்தினை 470 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில் ஜிமெயில் சேவையினை அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டுனீசியா, எகிப்து, போன்று நாடுகளில் சமூக வலைதளங்களினால் தான் ஆட்சி மாற்றம் பொதுமக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சீனாவில் தற்போது மல்லிகை புரட்சி வெடித்துள்ளது. இதற்கு காரணம் கூகுளின் ஜிமெயில் சேவை என கூறப்படுகிறது. ஏற்கன‌வே சீனா தனது ‌சொந்த ‌மொழியில் உள்ள இணையதளங்களை முடக்கி வைத்துள்ளது. அதே போன்று உலகபுகழ்பெற்ற கூகுள் இணையதளத்தின் ஜி -மெயில் சேவையினை முடக்கி வைத்துள்ளதாக கூகுள் குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டுமின்றி வி.பி.‌என். எனப்படும் தனிநபர் இணைப்புகளையும் துண்டித்துள்ளது சீனா. இதனால் சீனாவில் ஜிமெயில் வாயிலாக வர்த்தக பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












4 comments:

  1. நீங்கள் உண்மையான ஜோதிடராக இருந்தால், ஜப்பான் பூகம்பத்திற்கு கோட்சாரக் காரணிகள் எதுன்னு சொல்லமுடியுமா?

    ReplyDelete
  2. ஜப்பானின் சுதந்திர தினம்,நேரம்,தற்போதைய பூகம்பம் உண்டான துல்லிய நேரம்,உண்டான நகரம் கொடுத்தால் கணித்துச் சொல்ல முடியும்.
    உழைப்புக்குப் பேர்போன ஜப்பானுக்குத்தான் இப்படி கஷ்டம் வரணுமா? அக்கிரமம் செய்யும் அமெரிக்காவுக்கும்,அடாவடி சீனாவுக்கும் இப்பேர்பட்ட இம்சை வரவில்லையே? என வருந்துகிறேன்.

    ReplyDelete
  3. அந்த நாளன்று பூகம்பம், நில அதிர்வு என்று பஞ்சாங்கத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை எந்த காரணியை வைத்துச் சொன்னார்கள் என்று சொல்லுங்கள் போதும்

    ReplyDelete
  4. ஜப்பானியர்கள் சீனாவில் நான்கிங் மாகாணத்தில் நடத்திய 20 ,000 கற்பழிப்புக்கு தண்டனை தான் ஹிரோஷிமா, மற்றும் இந்த சுனாமி.. சீனா செய்யறதுக்கு பதிலடி பின்னாடி வரும்.

    ReplyDelete