Sunday, June 21, 2009

உலகை ஆளத்துவங்கும் இந்து சமயல் பொருட்கள்











மிளகு,மஞ்சள்,சீரகம் பற்றி அவங்க சொல்றாங்க:
நம்மவங்க இப்ப நம்புவாங்க

தலைவலிக்கு நம்மூர் குழம்புப்பொடி போதுமாம்.ஆம், ஆஸ்பிரினில் உள்ள மருத்துவ குணங்கள், இந்து ‘கறிப்பொடிகளில்’ அதிகம் உள்ளது என நம் தாத்தாக்களின் வாழ்க்கை முறை கூறிய போது நம்பவில்லை;ஸ்காட்லாந்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து கூறிவிட்டனர். எப்போது?
28.8.2006 ஆம் நாளன்று தினமலரில்!!!

மருத்துவ நிபுணர்களில் ஒருவரான கேரி டத்தே வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் உள்ள விஷயங்களைப் படித்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.நம்மூர் சாம்பார், ரசம் குடித்து அவற்றை ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அதன் விளக்கம் வருமாறு:தலைவலிக்கான மாத்திரை ஆஸ்பிரின்.இது பக்கவிளைவைத் தருகிறது.ஆனால்,இந்து சமயலறைகளில் உள்ள சமையல் தானிய வகைகளில் ஆஸ்பிரினைத் தாண்டி பலன் தரும் வகையில் சத்துக்கள் அமைந்துள்ளன.
இந்து சமையலறைகளில் மிளகு, மஞ்சள்,கறிவேப்பிலை போன்றவை இல்லாமல் சமையலே இல்லை.அவற்றைக் கொண்டுதான் குழம்புப்பொடி, ரசப்பொடி என்று பவுடர்களைத் தயாரிக்கின்றனர்.இந்த கறிப்பொடிகளில் மூலிகை சத்துக்கள், ஆஸ்பிரினில் உள்ள ரசாயன(கெமிக்கல்)சத்துக்களைவிட சிறந்தவை.

இந்த குழம்புப்பொடியில் சாலிசிலிக் ஆசிட் என்ற ரசாயனக்கலவை கிடைக்கிறது.இதுதான் தலைவலியைப் போக்க முக்கியமானது.
அதே சமயத்தில் நீண்டகாலமாக ஆஸ்பிரின் முழுங்கிக் கொண்டே இருந்தால் பக்கவிளைவு நிச்சயம்.உதாரணமாக, கிட்னி செயலிழந்து போகலாம்.

ஆனால், நீண்டகாலம் இந்தகுழம்புப்பொடியை உணவில் பயன்படுத்தினால் தலைவலி பறந்து போகும்.அதையும் மீறி தலைவலி வந்தால் அதற்கு வேறு பல காரணங்கள் இருக்கும்.
இந்த குழம்புப்பொடியில் சிறிதளவு எடுத்து சோதனை செய்து பார்த்ததில் 95 மில்லி கிராம் சாலிசிலிக் ஆசிட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதே சமயம் ஆஸ்பிரின் மாத்திரை ஒன்றில் வெறும் 65 கிராம் சாலிசிலிக் ஆசிட்தான் இருக்கிறது.

அதே போல எந்தளவுக்கு சூடாக சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு பலன் இருக்கிறது.இந்த மூலிகை சத்துக்கள் நிறைந்த சாற்றை(ரசம் அல்லது குழம்பை) சூடாகக் குடித்தாலே தலைவலி போய்விடும்.இவற்றில் உள்ள மிளகு, மஞ்சள்,சீரகம் இம்மூன்றும் உடலில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.முழு மனித உடல் ஆரோக்கியத்துக்கு இவை பயன்படுகின்றன.


இப்போது புரிகிறதா? நமது சமையல் பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகின்றன।வெகு விரைவில் சமையல்பொடிகள் ஏற்றுமதி செய்தே பல இந்திய கோடிஸ்வரர்கள் உருவாகப் போகிறார்கள்.

No comments:

Post a Comment