ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Monday, June 8, 2009
வாழ்க்கை வழிகாட்டி:சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்-1
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
புராதன நாலந்தா பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் பயின்றவர் சாணக்கியர் என்ற கவுடில்யர்.இவர் எழுதிய அர்த்த சாஸ்திரம் 25,000 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்திவருகிறது.
இந்துக்களாகிய நாம் இப்பேர்ப்பட்ட அரசியல்துறவியை நமது முன்னோர்களாகக் கொண்டிருக்கிறோம்.
சீனா நமது நண்பர்களான இலங்கை,பர்மா,நேபாளம், பங்களாதேஷ் இவர்களை நமக்கு எதிராக திருப்பிவிட்டு நமக்கு தீராத பிரச்னையை உண்டாக்கிவருகிறது.
சுண்டைக்காய் நாடு இலங்கை நம்மை மிரட்டுகிறது.எங்கள் உள்நாட்டுவிவகாரத்தில் நீங்கள்(இந்தியா) தலையிடக்கூடாது என மிரட்டுகிறது.
சரி போகட்டும்.இந்துக்களாகிய நாம் ஒவ்வொருவரும் சாணக்கியராக வேண்டும்.அதற்காக சில அர்த்த சாஸ்திரக் கருத்துக்களை இங்கே பார்ப்போம்:
ஒருவன் தன்னுடைய மனைவி, உணவு, செல்வம் இம்மூன்றிலும் திருப்தியுடையவனாக இருக்க வேண்டும்.(மனைவியால் மட்டும் திருப்தியடையாவிட்டால் காம வெறி பிடித்தவனாகிவிடுவோம்.உணவு தின்று கொண்டே இருந்தால் 30+ வயதிலேயே நோய்கள் நம்மைத் தாக்கும்.செல்வம் சம்பாதிப்பதில் பேராசை வருவதால் தான் அம்மா தன து மகளையே விபச்சாரியாக்குகிறாள்.அப்பா தனது மகனிடமிருந்தே ஆபத்துக்காலத்தில் செலவழித்ததற்கு பணம் பிடுங்குகிறார்.கட்சித்தலைவர் ஆசியாவிலேயே பெரும் பணக்காரராகிவிடுகிறார்.கி.பி.2009 முதல் 2019க்குள் அவர்களுக்கு பெரும் வீழ்ச்சி இருக்கிறது)
ஆனால் ஒருபோதும் தன்னுடைய தவத்திலோ(இக்காலத்தில் தினசரி செய்யும் தியானம் என க் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்),தானத்திலோ(தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ற இந்த வலைப்பூப் பகுதியை மீண்டும் ஒருமுறைப் படிக்கவும்), படிப்பிலோ திருப்தியடைக்கூடாது.
நாம் எந்தத்துறையோ அந்தத் துறை தினமும் பிரம்மாண்டமாக வளர்ந்துவருகிறது.அதுபற்றி அறிய நாம் இணையம் மூலமாக நமது துறைசார்ந்த பிளாக்(google-blogsearch),குழுக்கள்(google groups, yahoo groups),இணையதளங்கள்(websites) மூலமாக வாழ்நாள்முழுக்க அறிந்து கொண்டே இருக்கவேண்டும். அப்படிச் செய்துவந்தால் மட்டுமே நேர்காணலில்(interview)வெற்றி பெறுவோம்.
யாரெல்லாம் பெற்ற தாய்க்குச் சமமானவர்கள்?
அரசனின் மனைவி, குருவின் மனைவி,நண்பனின் மனைவி, மனைவியின் தாய்,தன்னுடைய தாய் இந்த ஐவரும் பெற்ற தாய்க்குச் சமமாக போற்றத்தக்கவர்கள்(திருட்டுப் பயலே படம் பார்த்தீர்களா?மாளவிகாவின் கணவன் பிஸினஸ் என அலைய அவன் மனைவியோ காமசுகத்திற்கு தன் கணவனின் நண்பனையே தேர்ந்தெடுக்க,அதை நம்ம ஹீரோ பார்த்துவீடியோ எடுக்க ஒரு முழுப்படம் வாழ்க்கையை விளக்குகிறது)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment