Monday, June 1, 2009

ஏன் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதியாகவில்லை?

அப்துல்கலாம் அவர்கள் ஏன் மீண்டும் ஜனாதிபதி ஆகவில்லை?

நமது நாட்டின் அரசியல் சாசன சட்டப்படி, முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அவர்களே!
ஒரு இந்திய ஜனாதிபதி முப்படைகளின் படைக்கலன்கள், பீரங்கிகள்,ஏவுகணைகள் பற்றிய முழுவிபரம் தெரிந்தவராக இருந்தால் எப்படி இருக்கும்?!இந்த சிந்தனையில்தான் பா.ஜ.க.ஆளும்கட்சியாக இருந்தபோது டாக்டர்.அப்துல்கலாம் அவர்களை ஜனாதிபதியாக்கியது.இவர் ஜனாதிபதியானதும் நமது நாட்டின் எதிரி நாடுகள் பயந்து நடுங்கின.ஏன் அமெரிக்காவே ரொம்பவும் யோசித்தது.(உதாரணமாக ரஷ்ய அதிபர் புதின் முன்னாள் ரஷ்ய உளவுப்படை தலைமை அதிகாரி.சீனாவின் ஜனாதிபதி மற்றும் அதிபர்கள் கனவே சீனா இன்னோரு அமெரிக்காவாக வேண்டும் என்பதே.அங்கும் அமெரிக்காவிலும் ராணுவ அதிகாரியாக இருந்தவரே ராணுவ அமைச்சராக முடியும்.இதனால் அந்த நாடுகள் தனது சுய கவுரவத்தை தனது நட்புநாடுகளிடம் கூட விட்டுக்கொடுப்பதில்லை.)இதனால் நமது நாட்டு ஜனாதிபதி பதவிக்கு டாக்டர் அப்துல்கலாம் அவர்களால் பெருமை.

இந்நிலையில் பா.ஜ.க ஆட்சி நிறைவடைந்து காங்கிரஸ் ஆளும் கட்சியானது.ஆட்சியமைக்க தனது ஆதரவு எம்.பிக்களின் கடிதங்களோடு சோனியா மீமொய்னோ அவர்கள்(காங்கிரஸ் கட்சித் தலைவி) ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்தார்.

அப்போது ஜனாதிபதியும் இந்த தேசத்தின் ஆன்மாவை இன்றைய சிறுவர்-சிறுமிகளிடம் தட்டி எழுப்பிய தேசபக்தருமாகிய டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் சோனியா மீமொய்னோவிடம் ஒரு கேள்வி கேட்டார்.

நீங்கள் இன்றுவரை இத்தாலிக்குடியுரிமை வைத்திருக்கிறீர்களா?
அதற்கு சோனியா ஆம் எனப் பதிலளித்தார்.அதற்கு நீங்கள் பிரதமர் பதவிக்கு யாரையாவது பரிந்துரையுங்கள் என டாக்டர் அப்துல்கலாம் பரிந்துரைத்தார்.
இதனால், கோபமடைந்த சோனியா மறு ஜனாதிபதி தேர்தலின் போது டாக்டர் அப்துல்கலாம் ஜனாதிபதியாகாமல் பார்த்துக்கொண்டார்.அந்த சமயத்தில் சோனியா மீமொய்னோவைத் தவிர எல்லாக் கட்சிகளும் ஏன் காங்கிரஸ் கட்சி எம்.பிக்களும் டாக்டர் அப்துல்கலாம் அவர்களே மீண்டும் ஜனாதிபதியாகவேண்டும் என்றே விரும்பினர்.
ஒரே ஒரு குடும்பத்தலைவியின் பிடிவாதத்தின் விளைவைப்பாருங்கள்.
2009உடன் முடிந்த மக்களவைத்தேர்தலுக்கு முன் நமது பிரதமர் மன்மோகன்சிங் பல முறை கீழ்க்காணும் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

சோனியா ஒரு சராசரி


குடும்பத்தலைவி.அவரிடம் சராசரி

குணங்கள்தான் இருக்கின்றன.பிடிவாதம் ரொம்ப

இருக்கிறது.

இதை நம்பாதவர்கள் 2004 முதல் 2009 வரையிலான தினசரிகளை வாங்கிப்படித்துக் கொள்ளவும்.இந்த வாசகங்கள் அவற்றில் வெளிவந்துள்ளன
.

No comments:

Post a Comment