Wednesday, June 3, 2009

பொருளாதார வலிமையில் ஒப்பீடு:நமது இந்தியாவும் அமெரிக்காவும்


பொருளாதர வலிமையில் ஒப்பீடு:நமது இந்துயாவும் அமெரிக்காவும்

நமது ஜனத்தொகை 103 கோடிகள்.அமெரிக்காவின் ஜனத்தொகை 30 கோடிகள்.
நமது நாட்டில் இளைஞர்கள் எண்ணிக்கை 38 கோடிகள்.இதில் பருவ வயதில் இருப்பவர்கள் மட்டும் 25 கோடி பேர்கள்.அதாவது 13 வயது முதல் 19 வயது வரை இருக்கும் இளம் இந்தியர்கள்.
அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 4 கோடிகள் மட்டுமே.
நாம் வெளிநாடுகளுக்குத் தந்துள்ள மொத்தக்கடன் 12,00,000,00,00,000/-.அதாவது 12 லட்சம் கோடி ரூபாய்கள்.இதில் பாதிக்கும் மேல் அமெரிக்கா நமக்குத் தரவேண்டியிருக்கிறது.


அமெரிக்கா ஒரு நாளுக்கு அரசாங்கத்தை நடத்த 10,000 கோடி டாலர்களை கடன் வாங்கிக் கொண்டேடேடே இருக்கிறது.
நேற்று லேமன் பிரதர்ஸ் திவாலானது.(காரணம் ரூ.10 முதலீட்டில் மட்டும் தொழில் செய்தால் கடனே இல்லாமல் வளரலாம்.ரூ.10 முதலீட்டில் ரூ.300 கடன் வாங்கி தொழில் செய்தால் பிச்சை கூட எடுத்து கடனை அடைக்க முடியாதே.)
இன்று(3.6.2009) ஜெனரல் மோட்டார்ஸ் திவாலாகிவிட்டது.நாளை அமெரிக்காவே திவாலாகும்.திவாலாகியே தீர வேண்டும்.
ஏனெனில், தன்வினை தன்னையே டுமீல்.ஆமாம் வெறும் ஆயுத விற்பனைக்காக அமெரிக்கா என்ன
ஆட்டம் ஆடியது.கொரியாவைப் பிரித்தது;ஜெர்மனியைப் பிரித்தது;இந்தியா பாகிஸ்தானிடம் சண்டையை மூட்டி விட்டது.
ஒன்று உங்களுக்குத் தெரியுமா? 30 கோடி அமெரிக்கர்களிடம் 120 கோடி கடன் அட்டைகள் இருக்கின்றன.அதாவது ஒரு அமெரிக்கனுக்கு சராசரியாக மூன்று கடன் அட்டைகள்(அதாங்க க்ரெடிட் கார்டு)இருக்கின்றன.


அமெரிக்கக்காரன் என்ன செஞ்சுருக்கான் தெரியுமா?
கி.பி.ஏப்ரல்2010 - மார்ச் 2011 வரையிலான வருமானத்தை இப்பவே செலவழிச்சுட்டான்.அப்பறமென்ன சொல்லவா வேண்டும்.


நம்ம நாட்டுல நம்ம அம்மாக்கள் வீட்டில் அப்பாவுக்கும் நமக்கும் தெரியாமல் கடுகு டப்பாக்கள்,அரிசிப்பைகள்,பட்டுபுடவைகளுக்குள் சேமித்து வைத்திருக்கும் பணத்தின் மொத்தமதிப்பு ரூ.50,000,00,00,000/-(ஐம்பதாயிரம் கோடி ரூபாய்கள்)என மதிப்பிட்டுள்ளனர்.எனக்கென்னமோ இந்த மதிப்பீடு ரொம்பக் கம்மின்னுதான் நெனைக்கிறேன்.
ஆக சிக்கனம் நமது குடும்பத்தைக் காக்கும்.குடும்பப்பாதுகாப்பு நமது இந்தியாவைக்காக்கும்.இந்தியாவை உலகின் சக்திவாய்ந்த வல்லரசாக்கும்.


வெட்டிச்செலவு வல்லரசு அமெரிக்காவையே வல்லரசு அந்தஸ்திலிருந்து தூக்கியெறியும்.
அமெரிக்காவின் சரிவு உலகில் போரற்ற உலகத்தை உருவாக்கும்.
இந்தியாவின் வளர்ச்சி உலகம் முழுவதற்கும் அமைதி கலந்த வளர்ச்சியைத் தரும்.சுபிட்சமான உலகம் இதோ கி.பி.2100க்குள் உருவாகிவிடும்.


ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.50/-என நம்புகிறோம்.ஆனால் உண்மையில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெறும் ரூ.8/-மட்டுமே!
அது எப்படி?ப.சிதம்பரத்தை கேளுங்கள்.

No comments:

Post a Comment