Wednesday, June 24, 2009

கபிலர் மகரிஷியின் ஆசிரமம்தான் இன்றைய கலிபோர்னியா

அமெரிக்காவும் ஒரு இந்து தேசம்தான் – ஆதாரத்துடன் விளக்கம்

ஸாகரர்கள் குதிரையைத் தேடி பாதாளத்துக்கு வெட்டிக்கொண்டே போனார்கள். அப்போது உண்டான கடலே ‘ஸாகர’மாயிற்று.கடைசியில் கபில மகரிஷி ஆஸ்ரமத்திற்குப் பக்கத்தில் குதிரையைக் கண்டார்கள்.அவரே குதிரையை அபகரித்ததாக எண்ணி அவரை இம்சித்தார்கள்.அவரோ ஸாகரர்களை தனது திருஷ்டியினால் பொசுக்கி சாம்பலாக்கினார்.- இது ராமாயணக்கதை.
நம் தேசத்துக்கு நேர் கீழே உள்ள அமெரிக்காவை பாதாளம் என்று வைத்துக் கொண்டால் அங்கேயிருக்கும் கபிலாரண்யம்(மதுரை என்பது மருதை என்று மாறியது போல)கபிலாரண்யமாக-
கலிபோர்னியாவாக இருக்கலாம்.அதற்குப் பக்கத்தில் குதிரைத்தீவு(Horse Island),சாம்பல் தீவு(Ash Island) இவை உள்ளன.
ஸகரர், ஸாகரம் பற்றி இன்னொன்றும் தோன்றுகிறது.ஸகாரா பாலைவனமும் ஒரு காலத்தில் கடலாக இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.ஸாகரம் தான் ஸகாராவாயிற்றோ என்று தோன்றுகிறது.
ஆதாரம்:தெய்வத்தின் குரல் பாகம்-१.காஞ்சிப்பரமாச்சியார் அவர்கள் பக்கம் 168-169 வானதிப் பதிப்பகம் வெளியீடு।இணையதளம்:www.vanathi.in

No comments:

Post a Comment