Monday, January 11, 2021

W.புதுப்பட்டியில் அமைந்திருக்கும் மூன்று சக்தி வாய்ந்த ஜீவ சமாதிகள்

 



சதுரகிரிக்குச் செல்ல விரும்பும் எவராக இருந்தாலும் , மதுரை செங்கோட்டை நெடுஞ்சாலையில் இருக்கும் க்ருஷ்ணன் கோவிலில் இறங்கி,அங்கிருந்து வடக்கு நோக்கிப் பிரியும் சாலையில் வத்ராப் நோக்கிப் பயணிக்க வேண்டும்.வத்ராப் நோக்கிப் பயணிக்கையில் கோபாலபுரத்தைக் கடந்ததும்,ஒரு சாலை பிரிந்து தெற்கே செல்லும்.அந்த சாலை W.புதுப்பட்டி என்னும் கிராமத்திற்குச் செல்லுகிறது.இங்கே அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தெரு இருக்கிறது.இந்தத் தெருவின் நீட்சியாக புதுத்தெரு இருக்கிறது.இங்கிருக்கும் அருள்மிகு பாலசுப்ரமணி ஆரம்பப்பள்ளியை ஒட்டி கிழக்கு நோக்கி இந்த புதுத்தெரு அமைந்திருக்கிறது. இந்த புதுத் தெருவின் கிழக்கு கடைசியில் அமைந்திருப்பதுதான் மூவர் ஜீவ சமாதி ஆகும்.    

                                                                                                                                      இந்த மூவர் ஜீவசமாதியின் நடுநாயகமாக இருந்து அருள்பாலிப்பவர் திரு.கருப்பஞானியார் அவர்கள்;(மிக தடிமனான சிவலிங்கம் இருக்கும் படம்)இவரது வலது பக்கம்(தெற்குப்புறம்) இருந்து அருள்பாலிப்பவர் திரு. யாழ்ப்பாணம் சுவாமிகள்( சிவலிங்கத்தின் மீது விபூதிபூசியிருக்கும் படம்); இடது பக்கத்தில் இருந்து அருள்பாலிப்பவர் திரு. ஆறுமுகச்சாமிகள்(சிறியதான சிவலிங்கம் இருக்கும் படம்)     

                                                                                                                  W.புதுப்பட்டி மக்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றிவருபவர் யாழ்ப்பாணம் சுவாமிகள் ஆவார்.இவர் கருப்பஞானியர் சுவாமிகளின் சீடராக பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்தார்;    

                                                                                 விருதுநகர் மாவட்டம்,இராஜபாளையம் மாநகர் தெற்கு வைத்திய்நாதபுரம் தெருவில் கிழக்கு எல்லையில் இருக்கும் கருப்பஞானியர் கோவிலுக்கும்,இங்கிருக்கும் கருப்பஞானியர் கோவிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.இவருவரும் ஒருவரே!ஒரே நேரத்தில் இரண்டு ஊர்களிலும் காட்சியளித்த மகான் திரு.கருப்பஞானியார் சுவாமிகள்!!!!   

                                          இன்றும் கூட, தீராத நோய்களுக்கும்,உயிராபத்தான பிரச்னைகளுக்கும் உடனடியான அருளாசிகளை வழங்குபவர் திரு.கருப்பஞானியார் சுவாமிகளின் சீடர் யாழ்ப்பாணம் சுவாமிகள் ஆவார்.நாம் செய்ய வேண்டியது மனப்பூர்வமாக வேண்டுவதோடு,இவரது சன்னிதியில் தீபம் ஏற்றி,இவரது சன்னிதியில் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்வதுதான்.                  

                                                               ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் அமாவாசை அன்று இவரது குருபூஜை விழா மிகச் சிறப்பாக கடந்த 63 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.                                                                                                                                                 திரு.ஆறுமுகச்சாமிகள் கடந்த 30 ஆண்டுகள் வரையிலும் தினமும் அன்னக்காவடி எடுத்து வந்து,இப்பகுதி மக்களின் பசிப்பிணியைப்  போக்கியவர் ஆவார்.இந்த மூன்று சிவ மகான்களின் வரலாற்றை வெளியிடுவதில் மகாவில்வம் பெருமை கொள்கிறது.     

                                                                                வாசகர்களே,வாசகிகளே நாம் செய்ய வேண்டியது: இந்தப் புகைப்படங்களை அச்சடித்து,பிரேம் போட்டு,நமது வீட்டில் பூஜை அறையில் வைத்து,நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடவும்.எனது பிறந்த நாளன்று தங்களை நேரில் தரிசிக்கும் பாக்கியத்தை எனக்கு நீங்கள் அருளவும் என வேண்டலாமே! அதன் மூலமாக நாம் நிம்மதியை அடைய முடியும் இல்லையா? 

No comments:

Post a Comment