ஆதிசங்கரர் நம்முடைய இறை வழிபாட்டு முறைகளை ஆறு பெரும் பகுதிகளாகப் பிரித்தார். எனவே நமது இந்து மதத்திற்கு ஷண்மத வழிபாடு என்று பெயர்.
ஷண்மத வழிபாட்டில் முதன்மையானது விநாயகர் வழிபாடு ஆகும்.
விநாயகர் வழிபாட்டு முறைக்கு காணபத்தியம் என்று பெயர். 33 வகையான விநாயகர் அவதாரங்களில் சர்வசக்தி வாய்ந்த அவதாரத்துக்கு உச்சிஷ்ட கணபதி என்று பெயர்.
உச்சிஷ்ட என்றால் எச்சில் படுத்தப்பட்ட என்ற ஒரு அர்த்தம் உண்டு. இதற்கு ஆன்மீக விளக்கம் மட்டுமே உண்டு.
உச்சிஷ்ட கணபதிக்கு மட்டும் படையலாக நாம் சாப்பிட்ட உணவில் பாதியை வைக்க வேண்டும் என்ற நியதி உண்டு. எந்த ஒரு இறைவழிபாட்டிலும் பாதி சாப்பிட்ட உணவை இறைவனுக்கு படைக்கும் வழக்கம் கிடையாது. உச்சிஷ்ட கணபதி மட்டும் அப்படி ஒரு வழக்கம் உண்டு. இதற்கு பின்னணியில் ஒரு மிகப்பெரிய புராண கதையும் உண்டு.
உச்சிஷ்ட என்ற வார்த்தைக்கு மேலும் பல அர்த்தங்கள் உண்டு.சரியான ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு உண்மையான குரு நேரில் வந்து இதற்கான விளக்கங்களை தருவார்.
அருள்வாக்கு சொல்பவர்கள்
ஜோதிடர்கள்
மற்றும் சாமியாடிகள்
ஒவ்வொருவரும் உச்சிட்ட கணபதியின் அருளை கண்டிப்பாக பெற முயற்சி செய்ய வேண்டும்.
முறைப்படி தீட்சை வாங்காமல் உச்சிஷ்ட கணபதி மந்திரம் ஜெபிப்பதால் அவருடைய அருள் கிடைக்காமல் போகலாம்.
பல்வேறுவிதமான மாந்திரீக தாக்குதல்களால் நிலைகுலைந்து போயிருக்கும் சாதாரண மனிதர்கள் கூட உச்சிஷ்ட கணபதி உபாசனை செய்யலாம்.
ஜோதிடப்படி உங்கள் பிறந்த ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.லக்னத்திற்கு ஒன்பதாம் இடத்து அதிபதி யார் என்பதை கண்டுபிடியுங்கள்.ஒன்பதாம் இடத்து அதிபதி நிற்கும் நட்சத்திரம் அஸ்வினி அல்லது மகம் அல்லது மூலமாக இருந்தால் உங்களுக்கு இந்தப் பிறவி முழுவதும் முன்னேற்றத்தை அள்ளித்தரும் கடவுள் விநாயகர் ஆவார்.
போட்டி /பொறாமை /கண்திருஷ்டி போன்றவைகளிலிருந்து முழுமையாக நமக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் கணபதியின் அனுக்கிரகத்தை பெற முயற்சி செய்ய வேண்டும்.
அனைத்து விதமான மாந்திரிகத்தின் தாக்குதல்களிலிருந்தும் நிரந்தரமாக மீட்டு நிம்மதியான வாழ்க்கையை அள்ளித் தருபவர் உச்சிஷ்ட கணபதி.
பூமியில் பிறந்து வளர்ந்து வரும் மனிதர்களுக்கு பல ஆன்மிக உண்மைகளை உணர விடாமல் தடுத்து விடும் சக்தி மாயைக்கு உண்டு.
உச்சிஷ்ட கணபதி அருளாசி பெற்றவர்களுக்கு இந்த மாயை நெருங்காது.
பல்வேறு விதமான மாந்திரீக முறைகள் நமது நாட்டிலும் மற்றும் பல்வேறு நாடுகளிலும் புழக்கத்தில் உள்ளன.எல்லாவிதமான மாந்திரீக முறைகளும் உச்சிஷ்ட கணபதியின் அருளைப் பெற்ற மனிதர்களை (உச்சிஷ்ட கணபதி உபாசகர்கள்) சிறிதும் நெருங்காது. அவர்கள் வசிக்கும் இடம் வேலை பார்க்கும் இடம் அல்லது தொழில் செய்யும் பகுதி போன்றவைகளையும் எப்போதும் நெருங்காது.
உச்சிஷ்ட கணபதியின் அருளைப் பெற்றவர்கள், மாந்திரீக பாதிப்பில் உள்ள மனிதர்களை நேரில் பார்த்தால் அந்த மாந்திரீக பாதிப்பு சில விநாடிகளில் விலகிவிடும். எந்தவிதமான பூஜை /யாகம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.
*இவரை வழிபடுபவர்களுக்கு ஏவல் பில்லி சூனியம் செய்வினை போன்ற எந்தவிதமான ஆபத்தும் வராது
*முக்கியமாக எதிரிகள் ஸ்தம்பனம் ...
*இவரை வழிபடுபவர்களுக்கு எதிரிகளே கிடையாது எதிர்ப்பவர்களுக்கு எமலோகம் தான் ...அப்படிப்பட்ட ஒரு கணபதி இந்த கணபதி ஆவார்
இந்த கணபதி தாந்திரீக கணபதி
செஞ்சந்தனதாலோ வெள்ளை ஏருக்கினாலோ கட்டை விரல் அளவு பிள்ளையாரை செய்து தேய்பிறை சதுர்த்தியில் இருந்து வளர்பிறை சதுர்த்தி வரை தினமும் தனிமையிலிருந்து நான் கணேசர் என்ற எண்ணத்தோடு பூஜையும் யாகமும் செய்துவந்தால் சிறந்த அரசை பெறுவார் அரசியலில் கொடி கட்டி பறப்பார்
குயவனின் மண்ணெடுத்து பதுமை செய்து பூஜித்தால் அரசு பதவிகள் வந்து சேரும்!
எந்த துறையில் இருந்தாலும் அந்தத் துறையில் கொடி கட்டி பறப்பார்!
இந்த ஒரு தெய்வத்தின் அருளைப் பெற்றாலும் அந்த தெய்வத்தின் அருளாசி இந்த பிறவி முழுவதும் நிலைத்து நிற்க வேண்டும் என்றாலும், இந்தப் பிறவிக்கு அடுத்து வரக்கூடிய அனைத்து பிறவிகளிலும் அந்த தெய்வத்தின் அருளாசி நிலைத்து நிற்க வேண்டும் என்று விரும்பினால் உச்சிஷ்ட கணபதி அருளாசியை இந்த பிறவியிலேயே பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் .
நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அண்ணாமலையில் உருவாகும் அபூர்வமான சிவலிங்கத்திற்கு கோஹிதாய லிங்கம் என்று பெயர். இந்த கோகிதாய லிங்கத்தை முதன் முதலில் வழிபாடு செய் பவர் உச்சிஷ்ட கணபதி.
கடந்த 30,000 மனிதப் பிறவிகளில் சிறிது சிறிதாக சிவபெருமானுடைய அருளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே இப்பிறவி உச்சிஷ்ட கணபதி உபாசனை செய்ய வேண்டும் அவருடைய அருளைப் பெறவேண்டும் என்ற எண்ணம் உருவாகும் !அந்த எண்ணமும் வெற்றி அடையும்!! என்று சித்தர் பெருமக்கள் நமக்கு உபதேசம் செய்து உள்ளார்கள்.
இல்லறத்தில் இருப்பவர்கள் மட்டுமே உச்சிஷ்ட கணபதி மந்திர ஜபம் செய்ய வேண்டும்;
தீட்சை வாங்காமல் (இணையத்தில் இருக்கும் கட்டுரை அல்லது யூட்ட்யூப் பார்த்து) மந்திர ஜபம் செய்தால்,ஜபம் செய்பவருக்கு பல்வேறு ஆபத்துக்கள் உண்டாகும்;எச்சரிக்கை!!!
தகுந்த குருவை தேடிக் கண்டுபிடிப்பது உங்கள் சொந்த ரிஸ்க்கை பொறுத்தது;
உச்சிஷ்ட கணபதியை வணங்குவோம் அனைவரின் வாழ்வில் உச்சத்தை பெறுவோம் ...
No comments:
Post a Comment