உங்களுடைய வயது ஆண் எனில் 21 நிரம்பியிருக்க வேண்டும்;பெண் எனில்,18 நிரம்பியிருக்க வேண்டும்;கண்டிப்பாக ,அசைவம் சாப்பிடுவதை கைவிட்டிருக்க வேண்டும்;மது அருந்தவே கூடாது;
இன்று முதல் வராகியை ஜன்மாந்திர அன்னையாக நினைக்கிறேன் என்று மனதில் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்;
வராகி ஜபம் செய்வதை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் தெரிவித்துக் கொள்ளலாம்;ரகசிய வழிபாட்டு முறைகளில் இதுவும் ஒன்று;’
ஒருவேளை எல்லோருக்கும் தெரியும்படியாக நீங்கள் வராகி ஜபத்தை ஆரம்பித்தால்,சில நாட்கள் மட்டுமே ஜபிப்பீர்கள்:அதன் பிறகு,ஜபிக்க முடியாது;மனிதர்களின் தீய எண்ணங்களுக்கு அப்பேர்ப்பட்ட சக்தி இருக்கிறது;
எப்படி ஜபிப்பது?
ஒரு புதிய துண்டின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள்;அந்த துண்டு வெண்மை நிறமாக இருக்கலாம்; அல்லது மஞ்சள் அல்லது பச்சை நிறம் நன்று;இதை ஜபத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்;
இலுப்பை எண்ணெய் அல்லது கலப்படம் இல்லாத நெய்யில் தீபம் ஏற்றுங்கள்:தீபம் வடக்கு நோக்கி எரிய வேண்டும்; பிறகு,
சந்தன வாசம் அல்லது மல்லிகைப்பூ வாசம் அல்லது சாம்பிராணி வாசம் தரும் பத்தியை பொருத்துங்கள்;
வராகி மாலையை ஜபியுங்கள்;இரவில் மட்டுமே வராகி மாலையை ஜபிக்க வேண்டும்;இரவு 7 மணி முதல் காலை 6 மணிக்குள் உங்களுக்கு வசதியான நேரத்தில் ஜபித்து வாருங்கள்:
ஒரு நாளுக்கு ஒரு முறை வீதம் 3 ஆண்டுகள் வரை தினமும் வராகி மாலை ஜபித்து வருக!
சிலருக்கு பல முற்பிறவி கர்மவினைகள் பெருமளவு இருக்கும்;அவர்களது வாழ்க்கை மிகவும் சராசரியாக இருக்கும்;ஆனால்,நிம்மதியான,வளமான வாழ்க்கை நமக்கு கிடைக்காதா? என்று ஏங்குவோர் 91 வது நாளில் இருந்து மீண்டும் , தினமும் 5 முறை வராகி மாலையை ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;
தினமும் ஜபித்து முடித்ததும்,தீபத்தை அணைத்துவிடுங்கள்;
தினமும் நீங்கள் வீட்டில் சமையல் செய்த உடனே முதல் படையலாக அன்னைக்கு நீங்கள் சமைத்த உணவை ஒரு சிறு கிண்ணத்தில் வைக்க வேண்டும்;(அதன் பிறகு தான் உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்) வைத்த 20 நிமிடங்களுக்குப் பிறகு,அதை நீங்கள் அல்லது உங்கள் வீட்டு உறுப்பினர்கள் யாராவது சாப்பிட்டு விட வேண்டும்; தனித்து வாழ்ந்து வரும் ஆண்/பெண் ஏதாவது பழம் அல்லது எந்த ஒரு உணவுப் பொருளையும் படையலாக வைக்கலாம்;
No comments:
Post a Comment