Monday, January 11, 2021

அரிய சிவலிங்க வழிபாடு!

 


பலா மரத்தின் வடக்கு வேர் கொண்டு சிவலிங்கம் செய்ய வேண்டும்;

இந்த சிவலிங்கத்தைக் கொண்டு பகலில் தினமும் பூஜை செய்ய வேண்டும்;
தொடர்ந்து 12 ஆண்டுகள் செய்து வர,சிவகணமாகும் வழிமுறை நம்மைத் தேடி வரும்;

2000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பலாமரசிவலிங்கம் செய்யும் முறை உலகம் முழுக்கவும் இந்த அரிய சிவலிங்க வழிபாடு மனிதர்களால் பின்பற்றப்பட்டு வந்தது;

1000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் நமது பாரத நாடு முழுவதும் (காஷ்மீர் முதல் குமரிக்கண்டம் வரை;குஜராத் முதல் இன்றைய தாய்லாந்து வரை) இந்த அரிய சிவலிங்க வழிபாடு பரவியிருந்தது;

தற்போது கேரளமாநிலத்தில் வெகு சிலரால் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகின்றது;


சிவமந்திர ஜபம் + அண்ணாமலை கிரிவலம் + அன்னதானம்+ ருத்ராட்ச தானம் = முக்திக்கு ஒரு சுலபவழியாக சித்தர் பெருமக்கள் உபதேசித்துள்ளனர்;






சில சிவமந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால்,நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் உருவாகும்;யாரெல்லாம் கடந்த ஐந்து முற்பிறவிகளில் ஜபித்தார்களோ,அவர்களே இப்பிறவியில் கைராசி டாக்டர்களாக வாழ்ந்து வருகின்றனர்;


சில சிவமந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால்,ஈசனே குருவாக அமைவார்;அப்படிப் பட்டவர்களே இன்று பழமையான சிவாலயத்தில் சிவாச்சாரியார்களாக இருக்கின்றனர்;


சில சிவமந்திரங்களை தொடர்ந்து(சில பல பிறவிகளாக) ஜபித்து வந்ததால்,தமது 18 வயது முதல் வாழ்நாளின் கடைசி நாள் வரை அரசாங்கத்தில் மிகப் பெரிய பதவி(தலைமைச் செயலகத்தில் சாதாரண பதவியில் பணி சேர்ந்து,துறைச் செயலாளர் ஆன பின்னர்,பணி ஓய்வு வயதை அடைகின்றனர்)யில் பணிபுரிந்து வருகின்றனர்;


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்;



ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment