Monday, January 11, 2021

ஏன் ஜோதிடம் கற்றுக் கொள்ள வேண்டும்?

 


ஏன் எனில்,ஜோதிடமே ஆன்மீகத்தின் நுழைவு வாசல்!
அருள்வாக்கு சொல்லும் திறன் ஒருவருக்கு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்;அந்தத் திறன் அவருக்கு ஆயுள் முழுவதும் இருக்குமா? அல்லது குறிப்பிட்ட ஆண்டுகள் வரை இருக்குமா? என்பதை அவரே கண்டறிய அவரது ஜாதகம் தேவை;


அருள்வாக்கு சொல்லும் திறன் மட்டும் அல்ல;கூடு விட்டு கூடு பாயும் திறன்,ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காட்சியளித்தல் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெவ்வேறு செயல்களில் ஈடுபடுதல்;வானில் பறந்து செல்லுதல்;இந்த பூமியில் வாழ்ந்து கொண்டே வேறு உலகங்களுக்குச் சென்று வருதல் போன்ற பலவிதமான சூட்சுமக் கலைகள் ஒருவருக்கு கைகூடும் என்பதை அறிய அவரது ஜனன ஜாதகம் அவசியமாகின்றது;


நார்ஸ்டிரட்டாமஸ் என்று ஒரு பிரான்ஸ் நாட்டு ஜோதிடர் வாழ்ந்தார்;அவரது ஜோதிடக் கணிப்புகள் நூற்றாண்டுகள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது;மிகவும் அதிகமான பிரதிகள் விற்பனை ஆன சில நூல்களில் இதுவும் ஒன்று;


ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் குறிப்பிட்ட தலைப்பில்(அரசியல்,ஆன்மீகம்,கம்யூனிஸம் என்ற தொழிலாளித்துவம்) எழுதப்படும் நூல்கள் அதிகமாக விற்பனை ஆகும்;ஆனால்,இந்த நூற்றாண்டுகள் என்ற நூல் அனைத்து பத்தாண்டுகளிலும் அதிகபிரதிகள் விற்பனை ஆகிக் கொண்டே இருக்கின்றன;தமிழில் மொழிபெயர்த்தும் தமிழ்நாட்டில்,தமிழர்கள் பேசும் உலகில் இந்த நூல் இன்றும் அதிகப் பிரதிகள் விற்பனை ஆகிக் கொண்டு இருக்கின்றது;

இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்வது என்ன?
மனிதர்களின் ஆழ்மனத்தில் எதிர்காலத்தை அறியும் ஆவல் எப்போதும் இருக்கின்றது என்றுதானே அர்த்தம்???!!!


இந்த நார்ஸ்டர்டாமஸீக்கு ஜோதிடத்தின் மூலமாக எதிர்காலத்தை(கி.பி.1500 களில் வாழ்ந்தவரால் கி.பி.2000,கி.பி.2100, கி.பி.2400,கி.பி.3000 வரை) துல்லியமாக கணிக்கும் ஆற்றல் எப்படி வந்தது?
அவர் மூன்று ஆண்டுகளாக நமது பாரத நாட்டுக்கு வந்து காசியில் தங்கி ஜோதிடம் பயின்றார் என்பதுதான் அந்த ஜோதிட ரகசியம்!


அந்த எதிர்காலத்தை அறியும் விஞ்ஞானக் கலையை வீட்டில் இருந்தபடியே கற்க விருப்பமா?
1989 ஆம் ஆண்டு முதல் தொழில்முறை ஜோதிடராகப் பணிபுரிந்து வருபவர் உங்களுக்கு ஜோதிடம் கற்றுத் தரக் காத்துக் கொண்டிருக்கிறார்;
உங்களையும் ஒரு தொழில்முறை ஜோதிடராக உருவாக்கிட,உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்;
ஜோதிடம் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது:
1.அடிப்படை ஜோதிட பாடங்கள்
2.பிறந்த ஜாதகம் கணிக்கும் முறை(இதில் ருது ஜாதக கணிதமும் அடங்கும்)
3.ஜாதகப் பலன் சொல்லும் முறை(இதில் 100 விதமான வழிமுறைகள் இருக்கின்றன;சுலபமாகவும்,எளிமையாகவும் இருக்கும் வழிமுறைகளே நமக்குப் போதுமானது)

இவைகளுடன்,அவரது ஜோதிட அனுபவத்தொகுப்பையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்;இதனால்,இவரது ஜோதிட அனுபவமும் உங்களுக்குக் கிட்டும்;

குரு தொட்டுக் காட்டாத வித்தை குருட்டுவித்தை என்பது பல நூற்றாண்டு அனுபவ மொழி!

சீடன் தயாராக இருக்கும் போது குரு தோன்றுவார் என்பதும் பல நூற்றாண்டுகளாக நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் அனுபவ மொழி!

நீங்கள் தொழில்முறை ஜோதிடராக உருவாகும் வரை எமது பாடத்திட்டமும்,வழிகாட்டுதலும் தொடரும். . .

குருதட்சிணை உண்டு;

வயது வரம்பு:15 வயதும் அதற்கு மேலும்
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்;

ஜோதிடப்பாடத்திட்டம்:தமிழ் மொழியில் அனுப்பப் படும்;
தமிழ்நாடு மாநிலத்தில் வசிப்பவர்கள் நேரடியாக வந்து பெற்றுக் கொள்ளவேண்டும்;

தமிழ்நாடு தவிர்த்து தொலைதூர இந்திய மாநிலங்கள் மற்றும் அயல்நாட்டில் இருந்து ஜோதிடம் பயில்பவர்களுக்கு ஜோதிடத்தின் குறிப்பிட்ட புரிதலைக் கடந்ததும்,உரிய நூல்கள் அனுப்பி வைக்கப்படும்;

விருப்பம் உள்ளவர்கள்;Like to Learn Astrology என்று எழுதி உங்கள் ஜாதகத்தை 9092116990 க்கு அனுப்புங்கள்;

No comments:

Post a Comment