Monday, January 11, 2021

சத்குருவின் அருளைத் தரும் அண்ணாமலை கிரிவலம்!!!

 





உங்கள் ஒவ்வொருவருக்கும் காரண குரு,காரிய குரு,வித்தை குரு,வழிகாட்டும் குரு,சத்குரு என்று ஐந்து விதமான குருமார்கள் தேவை;இதில் காரண குருவும்,காரிய குருவும் வாழ்க்கைப் பயணத்தில் தானாகவே ,தக்க நேரம் பார்த்து வருகை தருவர்;வருகை தந்து,நமக்கு எதைப் போதிக்க வேண்டுமோ அதை போதித்துவிடுவர்;


வழிகாட்டும் குரு என்பவரை நம்மால் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும்;நமது பிறந்த நட்சத்திரம் தெரிந்தால் போதும்;நமது பிறந்த நட்சத்திரத்தை 1 வது நட்சத்திரமாகக் கொண்டு,15 வது நட்சத்திரம் எதுவோ அதைக் கண்டுபிடிக்க வேண்டும்;அந்த 15 வது நட்சத்திரத்தில் யார் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்களோ,அவரே நமது வழிகாட்டும் குரு ஆவார்;

இந்த ஜோதிடம் சார்ந்த தெய்வீக ரகசியத்தை அடியேனுக்கு அருணாச்சலேஸ்வரர் அருளால் பாம்பாட்டி சித்தரின் பரம்பரையைச் சேர்ந்த ஒரு ஆத்மா உபதேசம் செய்தார்;


சத்குருவின் அருளும்,வழிகாட்டுதலும் கிட்டினால் மட்டுமே மீண்டும் இந்த பூமியில் பிறவாமல் வாழும் தெய்வீக வாழ்க்கை கிடைக்கும்;


நம் ஒவ்வொருவருக்கும் சத்குரு அண்ணாமலை என்ற அருணாச்சலத்தில் காத்துக் கொண்டு இருக்கிறார்;நமது பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் நமக்கு என்று ஒரு சத்குரு அண்ணாமலையில் இருக்கின்றார்;அவரை நேரில் சந்திக்கும் பாக்கியம் நமக்கு வேண்டும் எனில்,இரண்டு விதமான முயற்சிகளில் ஒன்றை செயல்படுத்த வேண்டும்;


1.இந்த பிறவிக்குள் அல்லது இந்த பிறவி முதல் அடுத்து வரும் ஒரு சில பிறவிகளுக்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய வேண்டும்;

அல்லது

2.செவ்வாய்க்கிழமையும் விசாகம் நட்சத்திரமும் இணைந்த நாளில் அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்;இப்படிப்பட்ட நாட்கள் ஒரு தமிழ் வருடத்தில் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே வரும்;அதில் 1008 நாட்கள் அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்;

 பின்வரும் சத்குரு இடியாப்ப சித்தரின் மந்திரத்தை மட்டும் ஜபித்தவாறு கிரிவலம் வர வேண்டும்;

இதுவரை இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் இடியாப்ப சித்தர் பிரான் நமக்கு உபதேசமாக தெரிவித்திருக்கின்றார்;


ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீசாக்த பரப்பிரம்ம மகரிஷி
மகேஸ்வராய கெளஸ்துப புருஷாய
இடியாப்ப சித்த ஈச மஹராஜ் கீ ஜெய்!


ஆத்மபலமும்,குரு அருளும்,அண்ணாமலையாரின் அருளும் பெற்றவர்கள் இரண்டு முறை கூட கிரிவலம் செல்லலாம்;


,27.4.2021 செவ்வாய்க்கிழமை இரவு 9.42 முதல் மறுநாள் காலையில் சூரிய உதயம் வரை(5.45) விசாகம் நட்சத்திரம்  இருக்கின்றது;(பவுர்ணமி நாள்!!!)

25.5.2021 செவ்வாய் 


22.6.2021  செவ்வாய்க்கிழமை காலை சூரிய உதயத்தில் இருந்து அன்று மதியம் 12.37 வரை விசாகம் நட்சத்திரம் இருக்கின்றது;இந்த நேரத்திற்குள் கிரிவலம் நிறைவு செய்திருக்க வேண்டும்;

22.2.2022 செவ்வாய்க்கிழமை மதியம் 2.48 முதல் மறுநாள் புதன் கிழமை காலை சூரிய உதய நேரம் 6 மணி வரை

22.3.2022 செவ்வாய்க்கிழமை காலை சூரிய உதயம் முதல் இரவு 9.38 வரை


குரு அருள் இல்லாமல் திரு(இறை) அருள் கிடைக்காது என்பதற்காக இதை தங்களுக்கு தெரிவிக்கின்றோம்;

No comments:

Post a Comment