Sunday, July 15, 2018

நரகத்திற்குச் செல்லாமல் இருக்க நட வேண்டிய விருட்சங்கள்!!!


ஓர் அரசு ஆலும் வேம்பும்
ஒரு பத்து புளியும் மூன்று
சீருடன் விளவும் வில்வம்
மூன்றுடன் சிறந்த நெல்லி
பேர் பெறும் ஐந்து தென்னை
பெருகு மா ஐந்தும் ஒன்றும்
யார் பயிர் செய்தாரேனும்
அவர்க்கில்லை நரகம் தானே!

இப்பாடல் கார்த்திகை புராணத்தில் இருக்கிறது;ஒவ்வொருவரும் கார்த்திகை மாதத்தில் சுக்கில பட்சத்தில் ஒரு அரசு,ஒரு ஆல்,ஒரு வேம்பு,மூன்று விளாமரம்,மூன்று வில்வமரம்,மூன்று நெல்லிமரம்,பத்து புளியமரம்,ஐந்து மாமரம்,ஐந்து தென்னை ஆகிய ஒன்பது புண்ணிய மரங்களையும் வைத்து வளர்த்தால் அவருக்கு நரகம் இல்லையாம்;மரங்கள் தரும் பெரும் பயனை இப்பாடல் எளிய முறையில் விளக்குகிறது;

வில்வமரத்தையும்,வன்னி மரத்தையும் வெட்ட மாட்டார்கள்;அப்படி வெட்டினால்,அது பரிகாரத்திற்கு உள்படாத பாவத்தில் வருகிறது;கடந்த நூற்றாண்டு வரை இந்துக்களாகிய நம்மிடம் இது பற்றிய விழிப்புணர்ச்சி இருந்தது;

மரங்கள் வைத்து ‘வனமஹோத்ஸவம்’ கொண்டாட வேண்டியகாலத்தையும் நமது முன்னோர்கள் குறித்திருக்கிறார்கள்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment