Sunday, July 15, 2018

தேசப்பிரிவினைபற்றி சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் கருத்து









1946இல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எழுதிய பாகிஸ்தான் பற்றிய சிந்தனைகள்(THOUGHTS ON PAKISTAN)என்ற புத்தகம் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்தது.அதிலிருந்து சில பகுதிகள்:
உலக நாடுகளில் முஸ்லீம்களின் கடந்தகால வரலாறு,அவர்களது குறிக்கோள்,செயல்பாடுகள்,திட்டங்கள் முதலியவற்றை அவர் அலசி ஆராய்ந்து,முஸ்லீம்கள் எந்தக் கால கட்டத்திலும் பாரதத்தில் இந்துக்களுடன் சேர்ந்து வாழமாட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டினார்.

இந்திய முஸ்லீம்களின் செயல்பாடு,மதவெறி,பாகிஸ்தான் கோரிக்கை அனைத்துக்குமே காந்திஜியின் தாஜா செய்யும் கொள்கையே காரணம் என்று அம்பேத்கர் கருதினார்.காந்தியின் ‘கிலாபத் இயக்கம்’ ஒரு ‘பைத்தியக்கார முயற்சி’ என்று என அவர் சாடினார்.துருக்கியில் நடந்த உள்நாட்டுப் புரட்சிக்கும்,இந்தியாவுக்கும் சம்பந்தம் இல்லை;அது இந்தியாவுக்கு தேவையற்றது.கிலாபத் இயக்கத்தின் மூலம் இங்குள்ள முஸ்லீம்களின் மத உணர்வைத் தூண்ட உதவியிருக்கக் கூடாது என்று அம்பேத்கர் அதை வன்மையாகக் கண்டித்தார்.
பிரிவினை வரத்தான் போகிறது என்பதை உணர்ந்த அவர்,நாட்டின் எந்தெந்த மாகாணங்களில்,எந்தெந்தப் பகுதிகளில் முஸ்லீம்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதைத் தீவிரமாக ஆராய்ந்து,துல்லியமான புள்ளிவிவரங்களுடன் குறிப்பிட்டு,அந்தப் பகுதிகள் தான் பாகிஸ்தான் பகுதிகளாக ஆக வேண்டும் எனக் குறிப்பிட்டார்.ஆனால்,அதன்படி நாடு பிரிக்கப்படவில்லை;முஸ்லீம் பெரும்பான்மையில்லாத பல இடங்கள்,பாகிஸ்தானுக்குச் சென்றன.அதைத் தடுக்க காந்தியும்,நேருவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை:நல்லவேளை! டாக்டர் ஷ்யாம்பிரசாத் முகர்ஜியின் கடும் முயற்சியால் முழு வங்காளமும் பாகிஸ்தானாக ஆவது தடுக்கப்பட்டு,கிழக்கு வங்கம் மட்டும் அளிக்கப்பட்டது.
அம்பேத்கர் தனது புத்தகத்தில் இன்னொரு முக்கியமான கோரிக்கையை வைத்திருந்தார். “மக்கள் பரிமாற்றம்”(EXCHANGE OF POPULATION) செய்தபிறகே நாடு பிரிக்கப்பட வேண்டும்.அதாவது பாகிஸ்தான் பகுதியாக ஆக்கப்படவிருக்கும் பிரதேசத்திலிருந்து இந்துக்கள் அனைவரையும் பாரதத்துக்குக் கொண்டு வந்துவிட வேண்டும்.அதேபோல் பாரதத்தின் பகுதியில் உள்ள அனைத்து முஸ்லீம்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடவேண்டும் என்று கூறினார்.அதற்கான சில முன்னுதாரணங்களையும்,பரிமாற்றத்துக்கான செயல்முறைகளையும் விளக்கியிருந்தார்.


முதல் உலகப்போருக்குப்பின்,துருக்கி நாட்டின் சில பகுதிகள் கிரீஸ் நாட்டுடன் இணைக்கப்பட்டபோது,கிரீஸ் பகுதியில்    இருந்த முஸ்லீம்கள் துருக்கிக்கும்; துருக்கியில் இருந்த கிறிஸ்தவர்கள் கிரீஸ் நாட்டுக்கும் அனுப்பப்பட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜின்னாவும் இந்தக் கருத்தை ஆதரித்தார்(?!).முஸ்லீம்கள் இந்துக்களுடன் இணைந்து வாழ முடியாது என்பது அவரது திடமான நம்பிக்கை.வீரசாவர்க்கர்,டாக்டர் முகர்ஜி,அம்பேத்கர் போன்ற தலைவர்கள் தெரிவித்த இந்தத் திட்டத்தை காந்தியும்,நேருவும் ஏற்கவில்லை;


விளைவு? 3,50,00,000 இந்துக்கள் பாகிஸ்தானின் பகுதியில் சிக்கிக் கொண்டனர்.5,00,000 இந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.280,00,000 இந்துக்கள் தங்களது அனைத்து உடைமைகளையும்,சொத்துக்களையும் பாகிஸ்தானிலேயே விட்டுவிட்டு அகதிகளாக,பாரதம் நோக்கி ஓடி வந்தனர்.மற்றவர்கள் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டு சாக்கடை,கழிப்பிடம் சுத்தப்படுத்துதல் போன்ற கீழ்நிலை வேலைகளுடன் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.

இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமைகளை,அம்பேத்கர் தீர்க்கதரிசனத்துடன் உணர்ந்து எழுதியிருக்கிறார்.இந்துக்களுக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமைகளுக்கு காந்தியும்,நேருவும் தான் முழுப்பொறுப்பு என்பதை வரலாறு கூறும்.

No comments:

Post a Comment