Sunday, July 15, 2018

மதமாற்ற அமிலமழைக்குக் குடை இந்துயிசம்



நியூயார்க் டைம்ஸ்(25.9.11)நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் இந்தோனேசியாவில் ‘போர்னியோ’தீவில் ‘தாயக்’ என்ற மக்கள் தங்களை கிறிஸ்துவ மதத்திலிருந்து மீட்டுக் கொண்டு தங்களை இந்துக்களாக அறிவித்துக்கொள்ளத் தொடங்கியிருப்பதாக செய்தி வெளியானது.ஆஸ்திரேலியாவின் ‘த இண்டர்நேஷனல் ஹெரால்டு ட்ரிப்யூன்’ நாளிதழும் இதை மறுவெளியீடு செய்தது.திரு.உதடன் என்ற தாயக் ஆதிவாசி “நான் பள்ளி சென்று படித்த போது,நான் கத்தோலிக்க கிறிஸ்தவன்.பள்ளிப்படிப்பு தேவையென்றால் நாங்கள் மதம் மாற வேண்டியிருந்தது” என்று(கிறிஸ்தவர்களின் கல்விச்சேவை என்ற மத மாற்றத்தூண்டிலை) போட்டு உடைக்கிறார்.ஆனால்,காலம் மாறிவிட்டது.மிஷனரிகள் மிரண்டு போகும் விதத்தில் ‘தாயக்’மக்கள் தங்களை இந்துக்களாக் பிரகடனப்படுத்திக் கொண்டுவிட்டார்கள். ‘இந்துக்கள் எங்களுக்கு உதவி செய்தார்கள்.குடைபோல பாதுகாப்பு கொடுத்தார்கள்’ என்கிறார் உதடன்.

No comments:

Post a Comment