திப்பு சுல்தான் காலத்தில், தற்போது கேரளத்தில் உள்ள, அன்றைய மலபார் பகுதியில் நூற்றுக்கணக்கான கோயில்கள் முஸ்லீம் வெறியர்களால் தகர்க்கப்பட்டன;கோவிலின் விலைமதிப்பற்ற நகைகளும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன;அவற்றில் இரண்டு கோவில்கள் குறிப்பிடத்தக்கவை: தளி சிவன் கோவில் மற்றும் மல்லபரம்பா நரசிம்ம மூர்த்தி கோவில்.இவை இரண்டுமே தற்போதைய மல்லபுரம் மாவட்டத்தில் இருக்கின்றன.
ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு முதல்வராக இருந்த கம்யூனிஸ்டு ஆட்சியின்போது,நடத்தப்பட்ட பிரம்மாண்டமான கிளர்ச்சிக்குப்பின்னர், தளியில் இருந்த சிவன் கோவில் மீண்டும் கட்டப்ப்பட்டு,குடமுழுக்கு செய்யப்பட்டது.பழையபடி,வழிபாட்டு ஸ்தலமாயிற்று.
இரண்டாவது கோவில், 350 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு தனியார் கோவில்.அதை நிர்வகித்து வந்த குடும்பத்தினரின் அக்கறையின்மையின் காரணமாக ஸ்ரீநரசிம்மமூர்த்தி குடிகொண்டிருந்த அந்தக் கோவில் சிதிலமடைந்தது.1779 இல் திப்பு சுல்தான் மலபார் பகுதிக்கு வந்த போது அது நாசமாக்கப்பட்டது.
கோவிலைச் சுற்றியுள்ள 100 ஏக்கர்நிலத்தை, அந்த இடத்தில் ரப்பர் மரங்களைப் பயிரிடும் நோக்கில் உன்னியன் சாகேப் என்பவர் குத்தகைக்கு எடுத்தார்.1947 ஆம் ஆண்டில் ஓர் இரவு அவர் கனவில் ஒரு காட்சி கண்டார்.பயங்கர முகம் கொண்ட ஓர் உருவம் தன்னை நோக்கி கூச்சலிடுவதைப் போல, அந்த கனவு அவருக்கு பல இரவுகள் தொடர்ந்து வந்தது.மிகவும் பயந்து நடுங்கிப்போன சாகேப், இது குறித்து தனது இந்து நண்பர்களிடம் கூறினார்.அவர்களது ஆலோசனைப்படி,உன்னியன் சாகேப் ஒரு ஜோதிடரை அணுகினார்.அந்த ஜோதிடர் சொன்னார்: “உங்கள் கனவில் தோன்றுவது சாட்சாத் நரசிம்ம மூர்த்திதான்! தனது பழைய இடத்தில் தன்னை மீண்டும் ஸ்தாபனம் செய்ய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்!!!”
அவ்வாறே செய்து முடிப்பதாக, உடனே தன் மனதில் முடிவெடுத்தார் அந்த முஸ்லீம்(உன்னியன் சாகேப்).என்ன ஆச்சரியம்! அன்று முதல் ,இரவில் அவருக்கு அந்த பயங்கர கனவு வருவது நின்று விட்டது.
தீவிரமாக வேலையில் இறங்கினார் உன்னியன் சாகேப்!!! நம்பூதிரி பிராமணர்களை சிற்பங்கள் வடிக்கும் கலைஞர்களை கோயில் கட்டுமானப்பணிக்குத் தேவையான அனைத்துத் தொழில்களைச் சார்ந்தவர்களையும் சந்தித்தார்.திருப்பணி துவங்கி கோவில் கட்டி முடிக்கப்பட்டு,குடமுழுக்கு நடைபெறும் நிலையில் இருந்தது.
கோவில் கட்டுமானத்தின் போது காணப்பட்ட சூழ்நிலை,அங்கு ஒலிக்கப்பட்ட வேத மந்திரங்கள் காரணமாக ஒரு தாக்கம் ஏற்பட்டு,உன்னியன் சாகேப் தான் ஒரு இந்துவாக மாற விரும்புவதாக விருப்பம் தெரிவித்தார்.
மட்டற்ற மகிழ்ச்சி கொண்ட இந்து சமுதாயத் தலைவர்கள் அவரை 45 மைல்கள் தொலைவில் உள்ள கோழிக்கோடுக்கு அழைத்துச் சென்றார்கள்.அங்கு புத்தாசிங் என்பவரது தலைமையில் இயங்கிய ஆரிய சமாஜ அமைப்பு மூலம் சாகேப் தாய்மதம் திரும்பினார்.தன் மகன்கள் மற்றும் சகோதரருடன் உன்னியன் சாகேப் ராஜசிம்மன் என்றும்,அவரது தம்பி தயாசிம்மன் என்றும், சிறுவர்கள் இருவரும் பதேசிங்,ஜோராவர் சிங்( குரு கோவிந்தசிங்கின் புதல்வர்களின் பெயர்கள்) என்றும் பெயர்கள் சூட்டப்பட்டனர்.
சில மாதங்கள் கழிந்தன.ராஜசிம்மனாகிய உன்னியன் சாகேப்
தன் தம்பிக்கு ஒரு நம்பூதிரி பிராமணப்பெண்ணை திருமணம் செய்து வைக்க விரும்பினார்.நம்பூதிரி சமூகம்,அவரது விருப்பத்தை ஏற்று,பூர்த்தி செய்தது.சிறுவர்கள் இருவரும் டில்லியில் உள்ள ஆர்ய சமாஜப் பள்ளி ஒன்றில் கல்வி பயில அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சி எல்லாம் அங்கிருந்த முஸ்லீம்களிடம் அதிர்ச்சியையும்,ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.3.8.1947 அன்று இரண்டு லாரிகளில் பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த முஸ்லீம் முரடர்கள், ராஜசிம்மனையும் இதரர்களையும் படுகொலை செய்தனர்.புதிதாகக் கட்டப்பட்ட கோயிலையும் நாசப்படுத்தினர்.டில்லியில் இருந்ததால் சிறுவர்கள் உயிர் தப்பினர்.
இந்தப் படுகொலையை எதிர்க்க எந்த இந்துவும் முன்வரவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.பயத்தால் நடுங்கிப்போன இந்துக்கள்,தங்கள் வீட்டுக் கதவுகளை உட்பக்கமாக பூட்டிக்கொண்டனர்.இறந்த உடல்களைக் கோர எவரும் முன் வரவில்லை;காவல்துறையினரே அவற்றை எந்த சடங்கும் இன்றி,மலையடிவாரத்தில் புதைத்தனர்.அந்த காலகட்டத்தில் ராஷ்டீரிய ஸ்வயம்சேவக சங்கம் அங்கே வலுப்பெற்றிருக்கவில்லை;
ஒரு பெரிய செல்வந்தரான ராஜசிம்மனின் மாமனார்,சிறுவர்களை தன் பொறுப்பில் வைத்துக்கொண்டார்.இன்று 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ்.அந்தப்பகுதியில் வலுவாக உள்ளது.1947இல் சிறுவர்களாக இருந்தவர்கள்,அந்த கொடூரத்தை அன்று நேரில் கண்டவர்கள்,அறிந்தவர்கள்,தங்களது அந்த காலத்திய இயலாமையைக் குறித்து வருந்தியவர்கள் அனைவரும் 1947இல் செய்ய முடியாததை இன்று சாதிக்க முடிவெடுத்தனர்.
‘நரசிம்ம மூர்த்தி கோவில் டிரஸ்ட்’ அமைக்கப்பட்டது.அதன் மூலம் நீதி மன்றத்தை நாடி அந்த கோவில் நிலங்களை மீட்டு,ராஜசிம்மனின் சந்ததியினர் பொறுப்பில் விடப்பட்டு,அந்த இடத்தில் மீண்டும் கோவில் கட்ட நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டது.
தீவிர,கடுமையான உழைப்புக்குப் பின்,அந்த இடத்தில் ஒரு பிரம்மாண்டமான ஆலயம் எழுந்தது.கோவிலைக் கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆயிற்று.நரசிம்மர் கோவிலில் விநாயகர்,சுப்ரமணியர்,ஐயப்பன்,துர்கை விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.குடமுழுக்கு மிகப்பெரிய திருவிழா போல சிறப்பாக செய்யப்பட்டது.இந்து விரோதிகள் மனதில் கிலி ஏற்படுத்தும் விதமாக, மல்லபுரம் இந்துக்கள் நரசிம்மரைப் போல கர்ஜனை செய்யத் துவங்கியுள்ளனர்.இந்த இடத்தில் நரசிம்மர் கோவில் கட்டப்பட்டிருப்பது 5 வது தடவையாகும்.
நவக்கிரகங்களில் சந்திரபகவானால் கட்டப்பட்டது சோமநாதபுரம் சிவாலயம்.பூசாரிகள் மட்டுமே 2000 பேர்களுக்கு மேல் எனில் ,இந்த கோவிலின் பிரம்மாண்டத்தை கற்பனை செய்து பார்க்க முடியுமா? அப்பேர்ப்பட்ட சோமநாதபுரம் கோவிலை முஸ்லீம்கள் 17 முறை நாசமாக்கினர்.அதை மீண்டும் கட்டிட அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல்,முயற்சி செய்தார்.அவருடன் இந்த கோவில் புனர்நிர்மாணத்திற்கு கே.எம்.முன்ஷி போன்றவர்களும் உறுதுணையாக இருந்தனர்.கோவில் குடமுழுக்கு விழாவிற்குச் செல்வதை அன்றைய பிரதமர் நேரு எதிர்த்தாலும்,அதையும் மீறி அன்றைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திரபிரசாத் கலந்து கொண்டதையும் நாம் மறக்கக் கூடாது.
கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன்,நரசிம்மரின் விக்கிரகம் திருவுலாவாக மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.அனைத்து ஊர்களிலும் இந்துக்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்று வணங்கினர்.மல்லபுரம் இந்துக்களுக்கு ஒரு புதிய தன்னம்பிக்கை உணர்வு ஏற்படுத்தியது.அந்தக் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 4 கி.மீ.வரை ஒரு இந்துவீடு கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆனாலும்,நரசிம்மரை தரிசிக்க தினமும் பக்தர்கள் நூற்றுக்கணக்கில் வந்து செல்கின்றனர் .
நன்றி:விஜயபாரதம் பக்கம் 18,19; 30.12.11
No comments:
Post a Comment