ஏசுநாதரின் வாழ்க்கையில் மறைக்கப்பட்ட ரகசியம்
இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் அகமதியா என்று அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் உலகெங்கும் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களில் பல நாடுகளில் தூதராக வாழ்ந்த ஒருவர்,உலக நாடுகளின் ரகசிய ஆவணங்களை ஆராய்ந்து,ஏசுநாதரின் வாழ்க்கையில் மறைக்கப்பட்ட 20 ஆண்டுகால வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தகமாகவே எழுதி,திருநெல்வேலியிலிருந்து வெளியிட்டனர்.வெளியிட்ட ஆண்டு 1974.வெளியிட்ட பிரதிகள் 1000! அதிலிருந்து சில பகுதிகள்:
யூத இனத்தில் பிறந்த ஈசா தனது 13 வயது ஆனபோது,இந்தியாவுக்குச் செல்லும் ஐரோப்பிய வர்த்தகர்கள் கூட்டத்தோடு இணைந்து, நடந்தே இந்தியா வந்தடைந்தார்.அப்படி அவர் இந்தியாவுக்கு வந்தடைய 3ஆண்டுகள் ஆயின.ஆம்! அவர் தனது 16 ஆம் வயதில் இந்தியாவில் தற்போதைய ஒடிசா மாநிலத்தில் இருக்கும் புவனேஸ்வரத்தை வந்தடைந்தார்.
(*யூத சம்பிரதாயப்படி ஒரு யூதன் தனது 13 ஆம் வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.)
புவனேஸ்வரத்தில் சுமார் 15 ஆண்டுகள் வரையிலும் இந்து ஜோதிடம்,மாந்திரீகம் எனப்படும் அஷ்டகர்மா,பிராணயாமா,யோகா போன்றவைகளைக் கற்றார்.அப்படிக் கற்றவற்றை தனது 31ஆவது இந்தியாவிலேயே பிரச்சாரமும் செய்ய ஆரம்பித்தார்.இது இந்து பிராமணர்களுக்குப் பிடிக்காததால்,அவர்கள் இயேசுவின் சமகாலத்தில் வாழ்ந்த (மன்னர் வம்சத்தில் பிறந்து துறவியான) புத்தரை பிரபலப்படுத்திவிட்டனர்.இதனால்,இயேசு தனது 33 வது வயதில் இந்தியாவிலிருந்து தனது பிறந்த நாட்டுக்குத் திரும்பினார்.
தனது பிறந்தநாட்டில் மூன்றுகடவுள் கொள்கையைத் தவிர,(படைப்பது பிரம்மா,காப்பது விஷ்ணு,அழிப்பது சிவன்) மற்ற அனைத்தையும் பிரச்சாரம் செய்தார்.அவருக்கு 13 சீடர்கள் கிடையாது.14 சீடர்கள் உண்டு.அந்த 14 வது சீடரின் பெயர் மகதலினா மரியாள்.அந்த பெண் சீடரை இயேசு திருமணம் செய்து கொண்டார்.குழந்தைகள் பிறந்தன.(இன்று இயேசுவின் வழிவம்சத்தவர்கள் ஒரு மாநிலம் முழுக்க வாழ்ந்து வருகின்றனர்.இதுபற்றி வாடிகனுக்கும்,அமெரிக்க நிர்வாகத்திற்கும் தெரியும்)
அக்காலத்தில் அரசனே கடவுளின் அவதாரம் என ஜெருசேலம் பகுதியில் நம்பப்பட்டதால்,அவரை சிலுவையில் அறைய உத்தரவிட்டான் அந்தப்பகுதி மன்னன்.ஆனால்,இயேசுவின் சீடர்கள்,சிலுவையில் அறையப்பட்ட பகுதியில் காவல் இருந்தவர்களுக்கு லஞ்சம் கொடுத்து,இயேசுவைக் காப்பாற்றி மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பினர்.
இந்தியாவுக்கு வந்த இயேசு இன்றைய காஷ்மீர் மாநிலத்தில் 120 வருடங்கள் வரை வாழ்ந்து இயற்கையான முறையில் இறைவனடி சேர்ந்தார்.
அந்த புத்தகத்தின் பெயர் இயேசுவின் மரணம் காஷ்மீரிலே!!!
No comments:
Post a Comment