சுந்தரமூர்த்தி சுவாமிகள்,காஞ்சிபுரத்தில்,சர்வ தீர்த்தங்கரையில் உள்ள ஓணன்,காந்தன் என்ற இரு அசுரர்கள் தரிசித்துப்பெற்ற ஓணகாந்தந்தளி என்னும் சிவாலயத்திற்கு ஒருமுறை சென்றார்.
அங்குள்ள ஈசுவரனிடம் உரிமையுடன் தோழமையால் பெருகும் அடிமைத்திறம் பேசி,பொன் பெற வேண்டி இப்பதிகத்தைப் பாடினார்.ஈசுவரனும் சுந்தரருக்கு பொன்னை அளித்து அருளினார்.
நாம் வாழ்வதோ கலியுகம்;நாம் பொன்னை உடனடியாகப் பெறும் தகுதியுள்ளவர்களாக இருக்கிறோமா? ஆனாலும்,தினமும் காலை(அதிகாலையில் எனில் மிகச்சிறப்பு!!!)யில் காலைக்கடமைகளை முடித்துவிட்டு,இந்த பதிகத்தை மூன்று முறை(முடியாதவர்கள் ஒரு தடவையாவது) பாடிட ஆரம்பகாலத்தில் பணம் கிடைக்கும்;போகப்போக பொன் கிடைக்கலாம்.
நெய்யும் பாலுந் தயிருங்கொண்டு
நித்தல் பூசனை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
கழலடி தொழு துய்யினல்லால்
ஐவர் கொண்டிங்கு ஆட்ட ஆடி
ஆழ் குழிப்பட்டழுந்து வேனுக்கு
உய்யுமா றொன் றளுளிச் செய்யீர்
ஓண காந்தன் தளியுளீரே -1
திங்கள் தங்கு சடைக்கண் மேலோர்
திரைகள் வந்து புரளவீசும்
கங்கை யாளேல் வாய்திறவாள்
கணபதியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவியார் கோற்றட்டி யாளார்
உங்களுக்காட் செய்ய மாட்டோம்
ஓண காந்தன் தளியுளீரே -2
பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
பேணி உம்கழல் ஏத்துவார்கள்
மற்றோர் பற்றிலர் என்றிரங்கி
மதியுடையவர் செய்கை செய்யீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
ஆபற்காலத் தடிகேள் உம்மை
ஒற்றி வைத்திங் குண்ண லாமோ
ஓண காந்தன் தளியுளீரே -3
வல்லதெல்லாம் சொல்லி உம்மை
வாழ்த்தினாலும் வாய்திறந் தொன்
றில்லை என்னீர் உண்டும் என்னீர்
எம்மை ஆள்வான் இருப்பதென் நீர்
பல்லை உக்க படு தலையிற்
பகல் எலாம் போய்ப் பலிதிரிந்து இங்கு
ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
ஓணகாந்தன் தளியுளீரே -4
கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
கொண்ட பாணி குறை படாமே
ஆடிப்பாடி அழுது நெக்கங்
கன்புடையவர்க் கின்பம் ஓரீர்
தேடித் தேடித் திரிந்தெய்த் தாலும்
சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்
ஓணகாந்தன் தளியுளீரே -5
வாரிருங் குழல் வாள் நெடுங்கண்
மலைமகள் மதுவிம்மு கொன்றைத்
தாரிருந் தடமார்பு நீங்காத்
தையலாள் உலகுய்ய வைத்த
காரிரும் பொழிற் கச்சி மூதூர்க்
காமக் கோட்டம் உண்டாக நீர் போய்
ஊரிடும் பிச்சை கொள்வ தென்னே
ஓணகாந்தன் தளியுளீரே -6
பொய்மை யாலே போது போக்கிப்
புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
மேலை நாள் ஒன்றிடவுங் கில்லீர்
எம்மைப் பெற்றாலும் ஏதும் வேண்டீர்
ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்
உம்மையன்றே எம்பெரு மான்
ஓண காந்தன் தளியுளீரே -7
வலையம் வைத்த கூற்ற மீவான்
வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
சிலை அமைத்த சிந்தை யாலே
திருவடி தொழுதுய்யின் அல்லால்
கலை அமைத்த காமச் செற்ற
குரோத லோப மதவரூடை
உலை அமைத்திங் கொன்ற மாட்டேன்
ஓண காந்தன் தளியுளீரே -8
வாரமாகித் திருவடிக்குப்
பணி செய் தொண்டர் பெறுவதென்னே
ஆரம்பாம்பு வாழ்வ தாரூர்
ஒற்றி யூரேல் உம்மதன்று
தாரமாகக் கங்கை யாளைச்
சடையில் வைத்த அடிகேள் உந்தம்
ஊரும் காடு உடையும் தோலே
ஓண காந்தன் தளியுளீரே -9
ஓவணம் மேல் எருதொன்றேறும்
ஓண காந்தன் தளியுளார் தாம்
ஆவணஞ்செய் தாளுங் கொண்டு
அரை துகிலோடு பட்டுவீக்கிக்
கோவணம் மேற் கொண்ட வேடம்
கோவையாக ஆரூரன் சொன்ன
பாவணத் தமிழ்ப் பத்தும் வல்லார்க்குப்
பறையுந் தாஞ்செய்த பாவந் தானே -10
No comments:
Post a Comment