Sunday, July 15, 2018

முற்பிறவிகள் உண்மை என்பதை நிரூபிக்கும் மனோதத்துவம்



காரணம் இல்லாமல் எதையாவது பார்த்ததும் பயம் வருகிறது என்றால் அது முன் ஜன்மத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்கிறார் எடித்.எடித் பையர் என்பவர் முன் ஜன்மம் பற்றியும் மறு ஜன்மம் பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர்.இவர் ஹிப்னாடிச முறையில் முற்பிறவி நினைவுகளைக் கண்டறியக்கூடியவர்.



ஒரு பெண் எப்போதும் தண்ணீரைக் கண்டாலே பயந்து நடுங்கினாள்.வயதானபிறகும் இந்த பயம் இவரை விட்டு நீங்க வில்லை;ஆட்டிப்படைத்தது.பயத்துக்கு என்ன காரணம் என்பதை அறிய,இந்தப் பெண் எடித் பையரைத் தொடர்பு கொண்டாள்.

எடித் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி,முற்பிறவி நினைவுகளை ஆய்வு செய்தார்.முதல் பிறவியில் அவர் சிறுமியாக இருந்தபோது,ஏரியில் படகில் சென்று விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்திருக்கிறார்.



இரண்டாவது பிறவியில் மீனவராக பிறந்து புயலில் சிக்கி கடலுக்குள் விழுந்து இறந்திருக்கிறார்.மூன்றாவது பிறவியில் மாலுமியாக இருக்கும்போது,கப்பல் கவிழ்ந்து இறந்திருக்கிறார்.



இந்த நிகழ்ச்சிகள் அவரது ஆன்மாவில் படிந்து அச்ச உணர்வை தோற்றுவித்திருக்கிறது.மெல்ல மெல்ல முன் ஜன்ம நினைவுகளை மறக்கச் செய்து தண்ணீர் பயத்தைப் போக்கினார் எடித் பையர்.



இதே போல உயரமான இடம் என்றாலே ஓடிப்போய் ஒளிந்துகொள்ளும் தொழிலதிபர் ஒருவர் இருந்தார்.இந்தப் பிறவியில் பெரிய தொழிலதிபராக இருக்கும் அவர் முற்பிறவியில் ஒரு கூலி வேலையாளாக இருந்தார்.உயரமான சர்ச கூரைகளின் மீது ஓடுகளை பழுது பார்க்கும் வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்.அப்படி ஒரு சர்ச்சில் அவர் ஓடுகளை பழுது பார்த்துக்கொண்டிருந்த போது கீழே தவறிவிழுந்து இறந்திருக்கிறார்.



அந்த அதிர்ச்சி அவரது ஆன்மாவில் நிரந்தரமாகப் பதிந்து,மறுபிறவியிலும் பயம் காட்டிக்கொண்டிருந்தது.மனோதத்துவ சிகிச்சையின் மூலமாக அந்த பயம் போக்கப்பட்டது.
இதுபோன்ற பல முன் ஜன்ம பிரச்னைகளைத் தீர்த்து வைத்த எடித் இந்த அனுபவங்களை யூ ஹேவ் பீன் ஹியர் பிஃபோர்(you have been here before)என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.



நமது முன் ஜன்ம நினைவுகள் அனைத்தும் நமது வலது பக்க மூளையில் பதிந்திருக்கின்றன.அவற்றைக் கொண்டே நாம் நமது வாழ்க்கையில் சம்பாத்தியம்,துணிச்சல்,பயம்,முன் ஜன்ம மனைவி,நட்பு,எதிரி என அனைவரையும் எதிர்கொள்கிறோம்.

ஆதாரம்:தினத்தந்தி,நெல்லைப் பதிப்பு 9.3.2011,ஆவிகள் உலகம் மாத இதழ்,                               ஜீன் 2011 பக்கம் 37.






No comments:

Post a Comment