உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என அனைத்தையும்
ஈசனின் சார்பாக நிர்வாகித்து வருபவர் ஈசனின் அவதாரமான கால பைரவர் ஆவார்;இவரது பெயரில்
ஒரு உலகம் இருக்கின்றது;
அதற்கு பைரவ உலகம் என்று பெயர்;
தொடர்ந்து 12 பிறவிகள் மனித பிறப்பு எடுத்து
அனைத்து பிறவிகளிலும் மஹாகால பைரவப் பெருமானை மட்டுமே பேசி,ஜபித்து,வழிபட்டு,விரதம்
கொண்டு வாழ்ந்தால் பைரவ உலகத்தில் பைரவ சித்தர் என்ற புகழுடன் வாழும் வாய்ப்பு கிடைக்கும்;
ஜோதிடர்கள் தினமும் வழிபடவேண்டிய தெய்வம்
மஹாகால பைரவர் ஆவார்;ஜோதிடர்கள் தினமும் ஒருமுறையாவது ஓம் ஸ்ரீவாரதாரக சித்தகுரு நம
ஸ்வாஹா என்று ஜபிக்க வேண்டும்;இந்த பைரவ சித்தரின் அருளை ஒவ்வொரு ஜோதிடரும் பெறுவது
அவசியம் ஆகும்;
உபாசனை என்பது மிகவும் கடினமானது;விநாயகர்
உபாசனை,முருகக் கடவுள் உபாசனை,சிவ உபாசனை,காளி உபாசனை,துர்கை உபாசனை,பைரவ உபாசனை,வராகி
உபாசனை,வீரபத்திரர் உபாசனை என்று ஏராளமான உபாசனைகள் இருக்கின்றன;துர்கையில் ஒரு அவதாரம்
இருக்கின்றது;அவளுக்கு 18,000 கைகள் உண்டு;தட்சிண காளி உபாசனை வெற்றி பெற வேண்டும்
என்றால் 80,00,00,000 ஆண்டுகள் விடாமுயற்சி செய்ய வேண்டும்;முருக தரிசனம் செய்ய வேண்டும்
என்றால் 12 பிறவிகள் விடாமுயற்சி செய்ய வேண்டும்;12 வது ஜன்மத்தில் முருக தரிசனம் கிட்டும்;மதுரையில்
இருந்து கன்னியாக்குமரி வரை பல ஆயிரக்கணக்கான துறவிகள் முருகக் கடவுளை தரிசனம் செய்துஅவரது
அருளால் பல சித்துக்கள் புரிந்துள்ளார்கள்;பலரது கர்மவினைகளை (தீராத நோய்,கடன்) தீர்த்துள்ளார்கள்;மிக
மிக எளியது விநாயகர் உபாசனை!
மிக மிகக் கடினமானது தான் பைரவ உபாசனை!
அரை விநாடி அளவுக்கு கவனக் குறைவு ஏற்பட்டாலும் பைரவ கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதை
உணர்ந்தமையால் தான் நமது கலியுகத்தில் ஷீர்டி சாய்பாபா,பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்,மாயம்மா
போன்றவர்கள் பைரவ பக்தியை 40 ஆண்டுகள் வரை பின்பற்றினார்கள்;
இதைச் செய்ய இயலாதவர்கள் கும்பகோணம் அருகில்
இருக்கும் சோழபுரம் அருள்மிகு பைரவேஸ்வரர் கோவிலுக்கு தொடர்ந்து 64 தேய்பிறை அஷ்டமிகளுக்கு
சென்று வழிபடுவதன் மூலமாக அஷ்டமாசித்துக்களை பைரவரின் அருளால் பெற முடியும்;கும்பகோணத்தில்
இருந்து சென்னை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் கிராமம் சோழபுரம்! இங்கே இருக்கும்
அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் ஆலயத்திற்கும் பைரவ உலகத்திற்கும் நேரடித் தொடர்பு
இருக்கின்றது;ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதி ஆரம்பம் ஆகும் நொடியில் இருந்து நிறைவடையும்
விநாடி வரை பல சித்தர்கள் தமது சீடர்களோடு வருகை தந்து இங்கே சூட்சுமமாக வழிபாடு செய்து
வருகின்றார்கள்;
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகை
மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியும்,பரணி நட்சத்திரமும் கூடிய நாளில் ஈசனின் அருளால் மஹாகால
பைரவர் உதயமானார்;இன்றைய கலியுகத்தில் இந்த மூன்று கால சக்திகளும் கார்த்திகை மாதத்தில்
வருவது அரிதிலும் அரிது;
முதல் யுகமான கிருதயுகத்தில் ஒரு ஆண்டு
என்பது நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் மூன்று ஆண்டுகளுக்குச் சமம்;முதல் யுகமான
கிருதயுகத்தில் சனி ஒரு ராசியை கடக்க 12 ஆண்டுகள் வரை ஆகியிருக்கின்றது;
மஹாகால பைரவப் பெருமானின் அருளைப் பெற ஒரு
அரிய நாள் அமைந்திருக்கின்றது;
விளம்பி வருடம்,ஆடி மாதம்,19 ஆம் நாள் தேய்பிறை
அஷ்டமி திதியும்,பரணி நட்சத்திரமும் சேர்ந்தே
வந்திருக்கின்றது;4.8.2018 சனிக்கிழமை காலை 8.04 முதல் மறுநாள் 5.8.2018 ஞாயிற்றுக்கிழமை
காலை 7.02 வரை தேய்பிறை அஷ்டமி திதியும்,4.8.2018 சனிக்கிழமை காலை 11.50 முதல் மறுநாள்
5.8.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11.26 வரை பரணி நட்சத்திரமும் வர இருக்கின்றது;