எழுதப்படாத வரலாற்றுக்கும் முன்பிருந்தே நமது சனாதன தர்மம் எனப்படும் இந்து தர்மம் உலகம் முழுவதும் பரவியிருந்தது.மேல்நாடுகள் மனித நாகரீகமடையத்துவங்கி வெறும் 10,000 ஆண்டுகள் தான் ஆகின்றன.ஆனால்,நமது பாரதம்(இன்றைய ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,நேபாளம்,திபத்,ஸ்ரீலங்கா, பங்களாதேஷ்,மியான்மர் எனப்படும் பர்மா,மலேஷியா,சிங்கப்பூர்) 20,00,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித நாகரிகத்தை அடைந்து மனித குலத்துக்குத் தேவையான அனைத்து துறைகளிலும் சாதனைகளை செய்துவிட்டன.பாரதத்திலிருந்துதான் இன்றைய ஆப்ரிக்கா,தென் அமெரிக்கா,ஆஸ்திரேலியா,தாய்லாந்து,அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா,இந்தோனேஷியாவில் வெவ்வேறு மனித நாகரீகங்கள் உருவாயின.
இன்றைய தகவல் யுகத்தில் ஒரு குடும்பமாக நாம் வாழ்ந்துவந்தாலும்,நமது குழந்தைகளுக்கு சிவாலயத்தில் எப்படி வழிபாடு செய்வது? வைஷ்ணவ ஆலய வழிபாட்டு முறைகள் எத்தனை இருக்கின்றன? ஒரு தியானத்தை எப்படிச் செய்ய வேண்டும்? தியானத்தின் அடுத்த கட்டத்தில் நாம் உணர்வது என்னென்ன? போன்றவைகளை விஷீவலாகக் காட்டினால்,எதிர்கால இந்துதர்ம மக்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.இல்லாவிட்டால்,2020க்குள்ளாகவே நமது ஆலயங்களில் இருக்கும் சாமிசிலைகளின் சானித்தியங்கள்,சக்திகள்,வழிபட வேண்டிய விதிமுறைகள் தெரியாமல் போய்விடும்.இப்போதே அப்படித்தான் இருக்கின்றது.பலருக்கு தங்களின் குலதெய்வமே தெரியவில்லை;பணம் சம்பாதிக்கும் வேகத்தில் தர்மத்தைப் பின்பற்றிட பலருக்கு நேரமில்லை;
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமது இந்து தர்மம் எனப்படும் சனாதன தர்மத்தின் அடிப்படை நடைமுறைகள் பற்றி குறும்படங்கள்,ஆன்மீக விளக்க வீடியோக்கள்,இறைவழிபாட்டு முறைகளை விவரிக்கும் சிறு திரைப்படங்கள் போன்றவைகளை எடுக்க ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மீகக்கடல் அறக்கட்டளை முடிவெடுத்துள்ளது.
எனவே,திரைப்படத்துறையில் இருக்கும் ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் ஆன்மீகக்கடலைத் தொடர்பு கொள்ளவும்.
மிகவும் அருமையான பதிவு .தங்களுக்கு மிக்க நன்றி .மிகவும்.
ReplyDeleteஇது ஒரு மிக நல்ல முயற்சி. உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவன் அருளட்டும்.
ReplyDelete