கும்பகோணத்துக்குக் கிழக்கே 5 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் இடமே திருவிசநல்லூர் ஆகும்.இதன் பழைய பெயர் வில்வவனம் ஆகும்.பூமியில் உருவான இரண்டாவதுகோவில் இது என்பார்கள்.இங்கு சிவனும்,மஹாவிஷ்ணுவும் ஒரே கோவிலில் இருந்து அருள்பாலித்துவருகிறார்கள்.இங்குள்ள சிவனுக்கு வில்வ வன ஈசன்,புராதன ஈசன்,சிவயோகி நாதர் என்ற பெயர்கள் உண்டு.ஓவ்வொரு பெயருக்கும் ஒரு புராணம் உண்டு.இங்கு ஈசான மூலையில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் இருந்து அருள்பாலித்து வருகிறார்கள்.த்ரேதாயுகம்,க்ருதயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என்ற நான்கு யுகத்துக்குமான பைரவர்கள் இங்கு இருந்து அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகின்றன என்றால்,இந்த கோவில் சுமார் 20,00,000 ஆண்டுகளாக இருக்கின்றதாகத் தானே அர்த்தம்!!!
ஒரே இடத்தில் நான்கு பைரவர்கள் இருப்பதால் இவர்களுக்கு சதுர்யுகபைரவர் என்றும்,சதுர்க்கால பைரவர் என்றும் பெயர்கள் இருக்கின்றன.நமது வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய பைரவர்கள் இவர்கள்! ஆமாம்,நான்கு யுகங்களையும் இவர்கள் கண்காணித்துவருகிறார்கள் எனில்,இவர்கள் எப்பேர்ப்பட்டவர்கள்?!!?
இந்த சதுர்யுகபைரவர்களை ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியன்றும் வரும் இராகு காலத்தில் 108 ஒரு ரூபாய் வைத்து அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட தாமரைப்பூவை வைத்து பின்வரும் பொருட்களைக் கொடுத்து பூஜை செய்ய வேண்டும்.
அவைகள்:சிகப்பு அரளி மாலை,சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளை நான்கு,நான்காக வாங்கிட வேண்டும்.
இந்த பூஜைப்பொருட்களை பூசாரியிடம் கொடுத்து வளர்பிறை அஷ்டமியில் பூஜை செய்துவிட்டு,108 ஒரு ரூபாய் நாணயங்களை நமது வீடு அல்லது அலுவலகத்தில் இருக்கும் பணப்பெட்டியில் வைத்து தினமும் பூஜை செய்ய வேண்டும்.
ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத்தோரணாய
அஜாமிளபந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மமதாரித்திரிய வித்வேஷணாய
ஓம்ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ
பிறகு,தினமும் இந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் ஒரே நேரத்தில் நமது கர்மவினைகள் தீர்ந்து,பெரிய பணக்காரராக ஆகிவிடுவோம்.
அப்படி ஆவதற்கு,அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;மது,போதைப்பொருட்களை நிரந்தரமாகப் பயன்படுத்துவதைக்கைவிட வேண்டும்;முறையான தாம்பத்தியம் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும்.இதில் ஏதாவது ஒன்றை மட்டும் பின்பற்ற முடியாமல் போனாலும் இந்த வழிபாடு பலன் தராது.
ஆசிரியர் அவர்களுக்கு , வணக்கம்... நம் வலைப்பூவில் உள்ள சொர்ணகர்ஷன பைரவரின் மூலமந்திரம் தினம் தோறும் சொல்லிவருகிறேன். ஆனால் வேறு புத்தகம் மற்றும் சில வலைப்பூவில் மூலமந்திரத்தில் சில வேறுபாடுகள் உள்ளது .. அதனால் மூலமந்திரத்தில் சின்ன குழப்பம் ...தயவு செய்து சொல்லமுடியுமா ?
ReplyDelete"இந்த சதுர்யுகபைரவர்களை ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியன்றும்"
ReplyDeletevalarpirai astami or theipirai astami?
Pl.explain. Because, all poojas done in Theipirai astami for Biravar.