"இந்தியாவைச் சுற்றி ஒரு வலை பின்னும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. ஏற்கனவே இலங்கையில் ஹம்பன்டட்டா துறைமுகத்தில் கால்பதித்துள்ள சீனா, தற்போது ஆப்கானிஸ்தானுக்குள்ளும் நுழைகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு மலையைக் குடைந்து சாலை அமைக்கும் பணியை, சீனா மேற்கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கையும், முக்கியத்துவத்தையும் உடைக்கும் வகையில், சீனா இதை செய்து வருகிறது' என, இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற தளபதி வி.கே.சிங் அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர் வி.கே.சிங். இவர் போபாலில் உள்ள வர்க்கத்துல்லா பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி., மாணவராக உள்ளார். பணியில் இருந்த 2010ம் ஆண்டே தன்னை, இந்த பல்கலைக் கழகத்தில் உள்ள பாதுகாப்புத் துறை பிரிவில் பதிவு செய்து கொண்ட வி.கே.சிங், ஓய்வுக்கு பின், தற்போது ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். தன் ஆராய்ச்சிக்காக, இமயமலை பகுதியில் உள்ள வக்கன் காரிடார் என்ற மலைப் பகுதியை எடுத்துக் கொண்டுள்ளார்.
சாலை அமைப்பு: இந்நிலையில், தன் ஆராய்ச்சி குறித்து பத்திரிகைகளுக்கு வி.கே.சிங் அளித்துள்ள பேட்டியில், மிகுந்த அதிர்ச்சியளிக்கும் தகவல் அம்பலமாகியுள்ளது. அவர் கூறியுள்ளதாவது: வக்கன் காரிடார் பகுதி என்பது இமயமலைத் தொடரின் ஒரு பகுதி. பூகோள ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலைப் பகுதியை, சீனா குடைந்து வருகிறது. இந்த மலையைக் குடைந்து சீனாவில் இருந்து, ஆப்கானிஸ்தானிற்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது சீனா - ஆப்கானிஸ்தான் இடையே நேரடி போக்குவரத்து வசதி இல்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறி வரும் நிலையில், அங்கு தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட, சீனா தீவிரமாக உள்ளது. இதற்காகவே மலையைக் குடைந்து சாலை அமைத்து வருகிறது. 220 கி.மீ., தூரமும், 64 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சாலை, பாதி தூரம் சுரங்கப் பாதையாகவே இருக்கப் போகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாகவே செல்கிறது. இந்த சாலை மட்டும் அமைத்து முடித்து விட்டால், ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் பெரியதாக இருக்கும்.
பாகிஸ்தான் ஆதரவு: சீனாவின் இந்த சாலை அமைக்கும் திட்டத்திற்கு, பாகிஸ்தான் முழு ஆதரவை வழங்கி வருகிறது. தலிபான்களை ஒடுக்குவதற்காக அமெரிக்காவும், இந்தியாவும் கைகோர்த்து ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு முடிந்த நிலையில், தற்போது சீனாவுடன் கைகோர்த்து மீண்டும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட பாகிஸ்தான் பார்க்கிறது. வக்கன் மலைத்தொடர் பகுதியில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் மிக அதிகமாகவே உள்ளன. இது வெளியுலகத்திற்கு பெரியதாக தெரியாமல் உள்ளது. உண்மையில் பாகிஸ்தானோடு கூட்டுச் சதி நோக்கத்துடன் சேர்ந்து, இந்த சாலை அமைக்கும் பணியை ரகசியமாகவே சீனா செய்து வருகிறது.
குவாடர் துறைமுகம்: பூகோள ரீதியாக இந்தியாவைச் சுற்றி வளைத்து, வலை போல ஒன்றை பின்னும் திட்டத்தில், சீனா இருந்து வருகிறது. தெற்கே இலங்கையில் ஹம்பன்டட்டா துறைமுகத்தை சீனா பிடித்துவிட்டது. அங்கு வலுவாக காலூன்றியும் விட்டது. மாலத்தீவிலும் கூட சீனாவின் நடவடிக்கைகள் அதிகமாகவே உள்ளன. மியான்மரில் ஹாங்கி என்ற துறைமுகத்தையும், சீனாவே கைகொண்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு வடக்கே உள்ள குவாடர் துறைமுகத்தையும், சீனா தான் கடந்த ஐந்தாண்டுகளாக நிர்வகித்து வருகிறது. இப்போது வடக்கே ஆப்கானிஸ்தானிலும் தனது பிடியை உறுதிப்படுத்த, சீனா துடித்து வருகிறது.
மூடப்பட்ட கணவாய்: சீனாவிலிருந்து ஆப்கானிஸ்தான் போவதற்கு நேரடியாக எந்த வசதியும் தற்போது இல்லை. முன்னர் வக்ஜித் கணவாய் என்ற ஒன்று இருந்தது. அதன் வழியாகவே இரு நாடுகளும் தொடர்பு கொண்டிருந்தன. 1949ல் மாசேதுங் வருகைக்கு பிறகு அந்த கணவாயும் மூடப்பட்டு விட்டது. அந்த கணவாயும் கூட, வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே திறந்திருக்கும்; மீதி நாட்களில் மூடியபடியே இருக்கும். எனவே, வளர்ந்து வரும் சர்வதேச சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவத்தை சீனா பயன்படுத்த விரும்புகிறது.
முதலீடு அதிகரிப்பு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இடைமறிப்பதால், இந்தியாவிலிருந்தும் கூட ஆப்கானிஸ்தானிற்கு நேரடியாக சென்றுவிட முடியாது. மும்பையிலிருந்து ஈரான் வழியாக அங்குள்ள சப்பகார் துறைமுகம் போய், அங்கிருந்து தான் ஆப்கானிஸ்தான் சென்றாக வேண்டிய நிலைமை இந்தியாவுக்கு உள்ளது. தலிபான்கள் வீழ்த்தப்பட்ட பிறகு, ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகளை, ஆப்கானிஸ்தானில் மத்திய அரசு செய்துள்ளது. எனவே, சீனாவின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகமானால், அது இந்தியாவை நிச்சயம் பாதிக்கும்.
ஆதாரம் சேகரிப்பு: இந்தியாவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் ஒரு வித அச்சுறுத்தலை ஏற்படுத்தி வைக்க வேண்டுமென்ற சீனாவின் நோக்கம், வக்கன் காரிடார் மலைக்குகை சாலைத் திட்டத்தின் மூலம் நிறைவேறப் போகிறது. இதுகுறித்து மேலும் பல ஆதாரங்களை, என் ஆராய்ச்சிப் படிப்புக்காக சேகரித்து வருகிறேன். தொழில்நுட்ப ரீதியாக இனியும் கிடைக்கவுள்ள பல தகவல்கள் மூலம், இந்த ரகசிய சாலைத் திட்டம் குறித்து மேலும் விரிவாக தெரிய வரும். இவ்வாறு வி.கே.சிங் கூறியுள்ளார்.
இன்னொரு அதிசயம்! கடந்த 1962ல் நடந்த போரில், இந்தியாவிடம் இருந்து அக்ஷய்சின் என்ற பகுதியை சீனா கைப்பற்றியது. அந்த இடத்தில் தான், காரகோரம் என்ற புகழ் பெற்ற நெடுஞ்சாலையை சீனா கட்டி முடித்தது. இதே போல, பீஜிங் நகரில் இருந்து கரடுமுரடான மலைகள் வழியாக திபெத்திற்கு ரயில் பாதையையும் அமைத்தது. மிகப்பெரிய அறிவியல் தொழில்நுட்ப அதிசயமாக, அந்த திட்டம் கருதப்படுகிறது. இப்போதும் இமயமலையில் உள்ள பாமியன் மலைத்தொடரில் உள்ள வக்கன் காரிடார் மலையைக் குடைந்து அமைக்கும் சாலை மட்டும் நிறைவேற்றப்பட்டால், அது, அறிவியல் அதிசயமாகவே கருதப்படும். பிரிட்டிஷ் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லைப்புறமாக இந்த வக்கன் காரிடார் விளங்கியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
- நமது டில்லி நிருபர் -
வாசகர் கருத்து (37)
Bala - ny,யூ.எஸ்.ஏ
2012-06-10 09:18:38 IST Report Abuse
இந்தியா இந்த இராஜ தந்திரத்தில் தோல்வியையே கண்டுள்ளது. இப்பொழுது இந்தியாவிற்கு இரண்டே வாய்ப்புகள் தான் உள்ளது. ஒன்று சீனாவிடம் நட்பு உறவாடுவது அல்லது அமெரிக்காவிடம் சரண் அடைவது. ஐயா அரசியல் வாதிகளே இனிமேலாவது நாட்டைப் பற்றி தெரிந்துக் கொண்டு வேலை செய்யுங்கள். ஒரு சாதாரண குடி மகனுக்கு உள்ள அக்கறை கூட இந்த மானங்கெட்ட அரசியல் வாதிகளுக்கு இல்லை என்பதே வருத்தமான விஷயம்.
Share this comment
syed razakh - vellore,இந்தியா
2012-06-09 21:32:14 IST Report Abuse
வாழ்த்துக்கள் சீனா , 220 கிலோ மீட்டர் , 200 அடி அகல பாதை இதில் பாதி தூரம் சுரங்க பாதை, இனி மேல் ladakh வழியாக தரை வழி வியாபார போக்குவரத்து kazakhastan போன்ற CIS நாடுகளுடன் இந்தியாவும் பயனடைலாம். இதை சீனாவால் சாதிக்க இயலும். Joint corridor திபெத் உடன் அமைத்துகொண்டால் சாத்தியமாகும்.
Share this comment
Bala - coimbatore,இந்தியா
2012-06-09 20:15:42 IST Report Abuse
அவன் உக்காந்து நாட்டை எப்படி வலுப்பெற வைப்பது என்று யோசிக்குறான்,, நம்மாளு எப்படி கொள்ளை அடிப்பது எதில் லஞ்சம் வாங்குவது அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்கிறார்கள் .
Share this comment
Bala - coimbatore,இந்தியா
2012-06-09 20:15:11 IST Report Abuse
தேச பக்தியுள்ள இந்தியன் உள்ளுக்குள்ளே அடிசுக்குறான். இந்த நாட்ட காப்பாத்த யார் வரப் போறாகளோ?
Share this comment
2012-06-09 18:56:02 IST Report Abuse
புலியை அழிக்கிறேன் என்று ஈழத் தமிழனையும் அழித்து தனக்கும் குழி தொண்டிக்கொண்டது இந்திய தேசம்
Share this comment
S.Tajudeen - riyadh,சவுதி அரேபியா
2012-06-09 17:37:53 IST Report Abuse
we are not able finish our sethu plan ,take a lesson from the other country how to grow
Share this comment
Premalatha Net Pal - manama,பஹ்ரைன்
2012-06-09 14:22:03 IST Report Abuse
சும்மா இருந்த சீனாவை உசுப்பி விட்டதே இந்தியா தான். ஸ்ரீலங்கா சீனாவுடன் நெருக்கம் அடைவதை தடுக்கிறோம் என்று சொல்லி கொண்டு உதவி செய்தார்கள். இதை சீனா கவுரவ பிரச்சனை யாக எடுக்க மாட்டாதா என்று யோசிக்க வில்லை. சிறிலங்காவுக்கு ஒரு தந்திரத்தை இவர்களே கற்றும் கொடுத்தார்கள். ஒரு நிலைக்கு மேல் சீனா என்கிற துருப்பு சீட்டை போட்டு இந்தியாவை ஸ்ரீலங்கா மடக்கி விடும் தந்திரத்தை உருவாக்கி கொடுத்ததே இந்தியா தான். ஸ்ரீலங்கா என்று இல்லாமல் சுற்றி இருக்கிற எல்லா நாடுகளும் இதையே செய்கின்றன.
Share this comment
R.Saravanan - male,மாலத்தீவு
2012-06-09 12:50:37 IST Report Abuse
நம் ஆட்சியாளர்களுக்கு கொள்ளை அடிக்கவே நேரமில்லை.... இதில் எங்கிருந்து பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.... காங்கிரஸ் இந்தியாவை விக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.... துளி கூட வருத்தப்பட மாட்டார்கள் நம் ஆட்சியாளர்கள்.... நாம் தான் புலம்ப வேண்டும்......
Share this comment
Nagaraj - hyderabad,இந்தியா
2012-06-09 10:58:42 IST Report Abuse
ஏன் இந்த பாழா போன இந்திய அரசியல்வாதிங்க இதை பெரிய பிரச்சனையா எடுத்துக்க மாட்டேங்கறாங்க, அமெரிக்கா தன் பக்கம் உள்ளது என்ற நினைப்ப, டேய் அரசியல்வாதிங்களா அமெரிக்க எந்த நேரமும் இந்தியாவை கழட்டி விட்டுடும். சீனா இந்தியாவை சுற்றி வளைப்பது தெரிந்தும் இன்னும் மௌனம் (பயம்) ஏன். கஷடப்பட்டு நமக்கு வாங்கி கொடுத்த சுதந்திரத்தை, சீனாவின் ஆயுதங்களுக்கும், நிர்பந்தங்களுக்கும் பலி ஆக்கி விடாதீர்கள். அவனது நாட்டின் மீது அவனுக்குள்ள வெறியை விட நமது அரசியல்வாதிகளுக்கு அதிகம் பணத்தின் மேல்.
Share this comment
James - singapore,சிங்கப்பூர்
2012-06-09 10:38:59 IST Report Abuse
China's primary goal is economically they want to be at the top of the world. All these developments are on that basis and not about India. We Indians and our leaders need to focus on the local issues first. In the current situation, no other country is needed for our downfall, we Indians are already doing that.
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
2012-06-09 11:47:53 IST Report Abuse
YOU ARE VERY RIGHT JAMES, SINGAPUR. INDIANS MUST WASH THEIR ASS FIRST AND THEN DO SERVICE TO OTHERS....
Share this comment
rajkumar vmmc - dammam,சவுதி அரேபியா
2012-06-09 10:30:02 IST Report Abuse
நான் சுருக்கமாக சொல்லவந்தது என்வென்றால், நம் அண்டை நாடுகள் நம்முடைய கண்டனங்கள், அறிக்கைகளை டிஷு பேப்பர் அளவுக்கு கூட மதிப்பதில்லை
Share this comment
rajkumar vmmc - dammam,சவுதி அரேபியா
2012-06-09 10:08:13 IST Report Abuse
இதை பார்த்து நம்ம பிரதமரும் சிவகங்கை கோமானும் ரொம்ப வருத்தப்படுவாங்க. அப்புறம் சீன கண்சுலேட்டை கூப்பிட்டு டீ சாப்பிட்டுகிட்டே (சிதம்பரம் ஜி பிஸ்கட் பஹூத்) அச்சா அச்சா அப்படின்னு சொல்லிட்டு கண்டன அறிக்கையை கொடுத்துட்டு வாசலுல வெயிலுல உட்கார்ந்திருக்குற நிருபருக்கு நியூஸ் துண்டை வீசி எறிஞ்சிட்டு ஒரு பாதுகாப்பு முன்னேர்பாட்டை செஞ்சதா நெஞ்சை நிமிர்த்திகிட்டு போய்டுவாங்க.
Share this comment
Rama Samy - bangalore,இந்தியா
2012-06-09 09:36:31 IST Report Abuse
ஆஹா என்ன அருமையான திட்டம். இதுல எவ்வளவு அடிக்கலாம் -கழகம்
Share this comment
saravanan - dares salaam,தான்சானியா
2012-06-09 11:14:39 IST Report Abuse
திருத்திக் கொள்ளுங்கள்......கழகங்கள்............
Share this comment
paamaran - village,இந்தியா
2012-06-09 11:49:50 IST Report Abuse
ராம சாமி....சூப்பர். உங்க பேர் வந்துடிச்சி போதுமா????...
Share this comment
Raj - chennai,இந்தியா
2012-06-09 09:08:26 IST Report Abuse
சீனாதான் இந்தியாவை நம்பி உள்ளது ... ஒவ்வொரு இந்தியன் வீட்டிலும் எவ்வளவு சீன பொருட்கள் ... சீனாவின் அட்டுழியத்தை தடுக்க ஒரே வழி சீன பொருட்களை முடிந்த வரை வாங்கதிர்கள்
Share this comment
panaieari - maldives,மாலத்தீவு
2012-06-09 11:25:07 IST Report Abuse
நீங்க சொல்லுவது எல்லாம் சரிதான், நம்ம கம்பெனிகளும் சீன விலைக்கு பொருட்களை ஏன் விற்க முடியாது?...
Share this comment
Ak Gopal - chennai,இந்தியா
2012-06-09 14:00:07 IST Report Abuse
எப்படி விற்க முடியும் .. பத்து ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை தயாரிக்கும் இந்தியாவில் உள்ள ஒரு அயல் நாட்டு கம்பனி தனது நாட்டுக்கு பத்து ரூபாயும் , மத்திய அரசு வரிக்கு பத்து ரூபாயும் மாநில அரசு வரிக்கு பத்து ரூபாயும் சேர்த்து நாற்பது ரூபாய் மதிப்பி podukintrathu ....
Share this comment
Studentofindia - colllege,இந்தியா
2012-06-09 08:41:55 IST Report Abuse
ithu complaint panra time ila. nee than thappu nan than thappu nu. ena seiyanumnu yosikira time. mokka pasangala onnu sernthu india va pidika ninacha vitruvoma. militarya strong aakura time ithu. rifle la irunthu launcher vara ready panra time. nama parthu valarthu vitta podipasangala chumma vidakudathu.athuku first BJP varanum. apo than border pirachanaiku oru mudivu varum.
Share this comment
Sathish - south coimbatore,இந்தியா
2012-06-09 08:20:30 IST Report Abuse
எத்தனை சீனா வந்தாலும் இந்தியாவை ஒன்றும் செய்யமுடியாது.
Share this comment
panaieari - maldives,மாலத்தீவு
2012-06-09 11:26:04 IST Report Abuse
உண்மைதான்.. ஆனால் நம்ம மக்கள் பணத்துக்காக எதையும் செய்ய தயாராக உள்ளார்களே?...
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
2012-06-09 07:58:03 IST Report Abuse
சீனா இவ்வளவு கஷ்டப் பட வேண்டியதில்லையே? நம்ம அரசியல்வாதிகள், அதிகாரிகள் இவர்களை கவனித்தாலே போதும், அவர்கள் நினைப்பதை சாதித்துக் கொள்ள?
Share this comment
Kasimani Baskaran - singapore,சிங்கப்பூர்
2012-06-09 07:49:47 IST Report Abuse
ஹசாரே பக்கம் மக்கள் சேர வேண்டும். காங்கிரஸ் காரர்களை நம்பினால் நாட்டை திரும்பவும் கிழக்கிந்திய கம்பனிக்கு மறுபடியும் விற்று விடுவார்கள். சீனாவின் ஆதிக்கம் அமெரிக்காவை க்கூட கதி கலங்க வைக்கிறது. இந்தியா தன்னை முதலில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் - அது கூட முடியுமா என்பது கேள்விக்குறி. பின்னர் வளர்ச்சி பற்றி பேசலாம்.
Share this comment
itsmeulook - doha,கத்தார்
2012-06-09 12:42:44 IST Report Abuse
We just have to keep moaning and moaning and do nothing, china is far ahead of us in technology and science. Most of the electronic equipments and motor industry import major components from china. Philipines took our title and now they are called "call center capital of the world". Foriegn investments around 400 billion dollars in indian market has been diverted to indonesia a small country that has a boosting economy. Where are we standing ? Look at the tourism industry they are booming in south asia and what do we have everything is price high and quality is extremly bad. ohhhhhhhhhhhhhh............ our currency is in downfall. india&39s future is unpredic, worried indian....
Share this comment
komanam - cbe,இந்தியா
2012-06-09 07:18:43 IST Report Abuse
அவன் ரோடு போடட்டும் நாம அதுல குழி வெட்டி விடலாம், இது தான் நம்மக்கு கை வந்த கலை, காங்கிரசு மாதிரி ஒரு அரசு உள்ளவரை நாடு எந்த வித முனேற்றம் கானது, வெளிநாட்டு வர்த்தகம் மூலமாக வருவாய் பெருக்க ஒரு திட்டம் கூட போடாத இந்த அரசு பெட்ரோல் மீது விலை ஏற்றி மக்களை கொலை செய்கிறது, பலன் விரைவில் ,,,
Share this comment
Malleeswaran - dindigul,இந்தியா
2012-06-09 07:18:09 IST Report Abuse
தேச பக்தியுள்ள கட்சிக் காரன் உள்ளுக்குள்ளே அடிசுக்குறான் .இந்த நாட்ட காப்பாத்த யார் வரப் போறாகளோ? ஈஸ்வரன்,பழனி.
Share this comment
agni shiva - new delhi,இந்தியா
2012-06-09 07:17:34 IST Report Abuse
காங்கிரஸ் கட்சி இந்த நாட்டை ஆண்டால், சீனா என்ன சுண்டைக்காய் நாடுகளும் தான் இந்தியாவிற்கு எதிராக பெரிதாக தான் சாதிக்கும்.
Share this comment
rajan - kerala,இந்தியா
2012-06-09 06:56:17 IST Report Abuse
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கென்ன எனும் நிலையில உள்ளது நம்நாடு.
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
2012-06-09 06:30:24 IST Report Abuse
நம்மை ஆளுபவர்களுக்கு, வெறிகொண்ட தேசபக்தியும், வீரமும் தன்மானமும் இருந்திருந்தால் இப்போதைய எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கும், பொருளாதார இழிநிலைக்கும் ஆளாகியிருக்கமாட்டோம். எல்லோரும் வீராங்கனை எனப் பாராட்டிகொண்டிருகிரார்களே அதே இந்திரா காந்தியின் ராஜதந்திர இமாலயத் தவறுதான் இந்த நிலைமைக்குக் காரணம். 1971போரில் பாரதம் வெற்றிபெற்றுக்கொண்டிருந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆசாத் கஷ்மீர் பகுதியையும் அப்போதே மீட்டெடுத்திருக்கலாம். நிலை குலைந்திருந்த பாக் , ராணுவத்தால் ஒன்றும் செய்திருக்கமுடியாது. மைனாரிட்டி ஓட்டுவங்கி இழப்புக்கு பயந்து, அராபிய நாடுகளின் எச்சரிக்கைக்கு அஞ்சி தேவையிலாமல் பாதியில் போரை நிறுத்தி நிரந்தரத் தொல்லைக்கு இடமளித்தார் இந்திரா காந்தி. இப்போது.?? விவகாரம் அது முழுவதும் கையை விட்டுப் போய்விட்டது . ஆக்கிரமித்தத்தில் ஒரு பகுதியை கராச்சிக்கு நெடுஞ்சாலை அமைக்க சீனாவுக்குக் கொடுத்துவிட்டார்கள். நாம் இப்போது நினைத்தாலும் அதனை மீட்டெடுக்க சீனா விடாது. இப்போது அமெரிக்கவும் பெட்ரோலிய உற்பத்தியில் சுயசார்பை அடையும் நிலையில் நம்மை இவர்களிடமிருந்து பாதுகாக்க நண்பர்களே இல்லை. நாட்டையும் மீண்டும் வெள்ளையர்களிடம் ஒப்படைத்து விட்டோம். போலி மதசார்பின்மையில் மயங்கியிருக்கிறோம் எதிர்காலத்திலாவது விழித்துக்கொள்வோமா?
Share this comment
poiyyan - doha,கத்தார்
2012-06-09 22:01:17 IST Report Abuse
போலி மதசார்பின்மையில் மட்டும் மயங்கியிருக்கவில்லை அரசியல் போலிகளிடமும் மயங்கியிருப்பதை ஏன் விட்டு விட்டீர்கள் நண்பரே...
Share this comment
madurai virumaandi - san jose, ca,யூ.எஸ்.ஏ
2012-06-09 04:43:24 IST Report Abuse
இதில் சீனாவைத் திட்ட என்ன இருக்கிறது ?? கையாலாகாத இந்திய அரசை "கவனிப்பதை" விட்டு விட்டு இப்படி புலம்புவதால் சல்லி காசும் பிரயோசனம் இல்லை.. குட்டக் குட்ட குனியும் வரை குட்டிக் கொண்டே தான் இருப்பார்கள்..
Share this comment
puthuvai mani bharathi - pondicherry,இந்தியா
2012-06-09 03:58:21 IST Report Abuse
2025 இல் சீனா இவுலகை தலைமை தாங்கும் இந்தியா???
Share this comment
cheliya - pondy,இந்தியா
2012-06-09 01:52:17 IST Report Abuse
பாகிஸ்தான் பண்ணிகள விட இந்த முல்ல மன்றி பயல்களோட தொல்ல தாங்க முடில ..ரெண்டு குண்ட போட்டா தான் அடங்கும்
Share this comment
Murugavel S - chennai,இந்தியா
2012-06-09 17:13:47 IST Report Abuse
அவங்க நாலு குண்டு கொண்டு போட்டா நீங்க என்ன ஆவீங்க...தப்பு விடுங்க......
Share this comment
guru - beiruth,லெபனான்
2012-06-09 01:40:28 IST Report Abuse
அவன் உக்காந்து நாட்டை எப்படி வலுப்பெரவைப்பது என்று யோசிக்குறான்,, நம்மாளு எப்படி கொள்ளை அடிப்பது எதில் லஞ்சம் வாங்குவது அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்கிறார்கள் .
Share this comment
Poornima - singapore,சிங்கப்பூர்
2012-06-09 01:33:49 IST Report Abuse
என்ன தான் நல்ல திட்டம் சீனா கொண்டு வந்தாலும், நம்ம மக்களுக்கு அதனால் பயன் ஒன்றும் இல்லை. அது வழியா ஆப்கானிஸ்தான் கூட தொடர்பு வச்சுக்க போறது சீனா தான். அரசியல்வாதிகள் சுரண்டினது போக மிச்சம் இருக்கிற நிலங்களையும் அண்டை நாடுகள் சுரண்டிட்டால், மக்கள் எல்லாம் எங்கே போறது?
Share this comment
No comments:
Post a Comment