Friday, June 15, 2012

மீனம்,கன்னி,மேஷம்,சிம்மம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட எச்சரிக்கை


யுத்தக்கிரகமான செவ்வாயும்,காற்றுக்கிரகமான சனியும் மீண்டும் ஒன்று சேரப்போகின்றன.ஒரு ராசியைக் கடக்க செவ்வாய்க்கு 45 நாட்கள் ஆகிறது;ஒரு ராசியை சனி 900 நாட்கள்(2 1/2 வருடம்) எடுத்துக்கொள்கிறது.இந்த சூழ்நிலையில் துலாம் ராசிக்குள் 21.12.2011 அன்று நுழைந்த சனி ,வக்கிரமாகி மீண்டும் கன்னிராசிக்குள் சென்றுவிட்டார்.சிம்மராசியில் இருந்த செவ்வாயும் வக்கிரமாகி இருந்து சுமார் 7 மாதங்கள் வரை இருந்துவிட்டு,கன்னிராசிக்குள் 23.6.2012 அன்று நுழைய இருக்கிறார்.ஏற்கனவே,வக்கிரம் பெற்ற சனி அங்கே இருக்கிறார்.


23.6.2012 முதல் 14.8.2012 வரை செவ்வாயும்,சனியும் கன்னியில் இருக்கப் போகிறார்கள்.இதனால் மீனம்,சிம்மம்,கன்னி,துலாம் ராசியினர் தேவையில்லாத சிக்கல்,திடீர் விபத்து,அனாவசியமான வம்பு வழக்குகளில் சிக்கும் சூழ்நிலை ஏற்பட இருக்கிறது.தான் தான் பெரிய அறிவாளி; தனக்குத் தெரியாதது என்று எதுவும் இந்த உலகத்தில் இல்லை என்று நினைப்பவர்களும்; அடுத்தவர்களின் அவமானத்தில் குளிர்காய்பவர்களும்,எப்போதுமே பிரச்னைகளை உண்டாக்குபவர்களும் எல்லா ராசியிலும் பிறந்திருக்கிறார்கள்.ஆனால்,மேலே கூறிய நாட்களுக்குள் மீனம்,கன்னி,சிம்மம்,துலாம் ராசிக்காரர்களில் இந்தமாதிரியான சுபாவம் இருப்பவர்களுக்கு வில்லங்கங்கள் காத்துகொண்டிருக்கின்றன.


18.8.2012 அன்று வக்கிரநிவர்த்தியான கன்னி சனிபகவான்,துலாம் ராசிக்குள் நுழைகிறார்.அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே அதாவது 14.8.12 அன்றே கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகியிருப்பார் செவ்வாய் பகவான்! எனவே,18.8.2012 முதல் 27.9.2012 வரை துலாம் ராசியில் சனியும்,செவ்வாயும் சேர்ந்திருக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
இவ்வளவு குறைந்த கால கட்டத்தில் யுத்தக்கிரகமான செவ்வாயும்,காற்றுக்கிரகமான சனியும் அடுத்தடுத்து ஒன்று சேர்வதால் நாட்டு மக்களின் மன நிம்மதி  சீர்குலைந்து,போராட்ட மனோபாவம் தலைதூக்கும்;நமது நாடு போரை நோக்கி செல்லும் சூழ்நிலை உருவாகப்போகிறது.


18.8.2012 முதல் 27.9.2012 வரையிலான கால கட்டத்தில் மேஷம்,விருச்சிகம்,கன்னி,மீன ராசிக்காரர்கள் உடல்நிலை அல்லது மனநிலை பாதிக்கும்விதமாக சம்பவங்கள் நிகழும்;தன்னையறியாமல் அடிக்கடி ஆக்ரோஷமடைவார்கள்;இந்த காலகட்டத்தில் மீனம் மற்றும் விருச்சிக ராசியினர் வாகனப்பயணத்தின்போது மிகுந்த நிதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.ரிஷபத்தில் இருக்கும் குருபகவான்,மேஷம்,கன்னி மற்றும் விருச்சிகராசியினரை தனது அருட்பார்வையால் ஓரளவு காப்பாற்றிவிடுவார்.


இந்த கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள நாம் செய்ய வேண்டியது என்னவெனில்,இந்த நாட்களில் வரும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் நமது ஊரில்/அருகில் இருக்கும் மலைக்கோயில்களுக்குச் செல்ல வேண்டும்.அங்கே தனிமையான இடத்தில் ஒரு மஞ்சள் துண்டினை விரித்து,கிழக்கு அல்லது வடக்கு நோக்கியவாறு அமர்ந்து ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் என்று ஜபிக்க வேண்டும்;வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றுபவர்கள் ஓம்ஹரிஹரிஓம் என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.(நமது  ஊரில்/அருகில் இருக்கும் மலைக்கோவில் எந்த கடவுளாக இருந்தாலும் அங்கே இவ்வாறு ஜபிக்க வேண்டும்)


3.7.2012 செவ்வாய்க்கிழமை அன்று ஆனி மாத பவுர்ணமி வருகிறது.19.7.2012 வியாழக்கிழமை அன்று அமாவாசை வருகிறது;1.8.2012 புதன் கிழமையன்று ஆடி மாத பவுர்ணமி வருகிறது;17.8.2012 வெள்ளிக்கிழமை அன்று ஆவணி மாத அமாவாசை வருகிறது;31.8.2012 வெள்ளிக்கிழமையன்று ஆவணி மாத பவுர்ணமி வருகிறது;15.9.2012 சனிக்கிழமை அன்று மீண்டும் ஒரு அமாவாசை ஆவணி மாதம் வர இருக்கிறது;29.9.2012 சனிக்கிழமை அன்று புரட்டாசி மாத பவுர்ணமி வர இருக்கிறது.

ஏழரைச்சனியால அவதிப்படும் கன்னி,துலாம்,விருச்சிகம் ராசிக்காரர்களும்,அஷ்டமச்சனியால் அவதிப்படும் மீன ராசிக்காரர்களும் இந்த காலகட்டம் முழுவதும் (23.6.2012 முதல் 27.9.2012 வரை) தினமும் உங்கள் ஊரில்/நீங்கள் வசிக்கும் இடத்தில் இருக்கும் ஜீவசமாதிகளுக்குச் செல்ல வேண்டும்;அங்கே கிழக்கு அல்லது வடக்கு நோக்கி மஞ்சள் துண்டில் அமர்ந்து 30 நிமிடம் வரையிலும் ஓம்சிவசிவஓம் அல்லது ஓம்ஹரிஹரிஓம் மந்திரஜபம் செய்ய வேண்டும்.மறந்தும்கூட அசைவம் சாப்பிடக் கூடாது;இதன் மூலமாக மனநிம்மதியைப்பெற முடியும்.அல்லது தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு அவரவர் வீட்டில் பின்பற்றிவரவேண்டும்.
கடந்தகாலங்களில் சனியும்,செவ்வாயும் ஒன்று சேரும்போதெல்லாம் மிகப்பெரிய போராட்டங்கள்,யுத்தங்கள்,அரசாங்கமே தடுமாறுமளவுக்கு கலகங்கள்,தீவிரவாதத் தாக்குதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.




ஓம்சிவசிவஓம்   ஓம்ஹரிஹரிஓம்

No comments:

Post a Comment