Monday, June 4, 2012

ஷீர்டி சாய்பாபா சொத்துக்களைச் சுருட்டும் சோனியா காங்கிரஸ்


ஷீர்டி சாய்பாபாவின் பக்தர்கள் கோடிக்கணக்கில் இந்தியாவிலும்,உலகம் எங்கும் இருக்கிறார்கள்.இவருக்கு இவரது பக்தர்கள் சமர்ப்பித்த காணிக்கை மட்டும் ரூ.500,00,00,000/- வரை இருக்கிறது.இந்த காணிக்கைகளை ஷீர்டி சாயி சம்ஸ்தான் என்ற அமைப்பின் பொறுப்பில் இருக்கிறது.இது தவிர,அமைப்பின் கட்டிடங்கள்,விவசாய நிலங்கள் வகையில் சேர்த்தால் சம்ஸ்தானிடம் உள்ள சொத்து மதிப்பு ரூ.1000,00,00,000/-வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த கணிசமான சொத்து,மஹாராஷ்டிராவை ஆளும் சோனியா காங்கிரஸ் பிரமுகர்களுக்கு  நாவில் நீர் ஊறச் செய்திருக்கிறது.2004 இல் ஷீரடி தலத்துக்கு என தனிச் சட்டத்தை இயற்றினார்கள்.தனி அதிகாரி நியமனத்தின் மூலம் இந்த ஷீர்டி சாயி சம்ஸ்தானின் சொத்துக்களைக் கைப்பற்றும் நோக்கில்,சம்ஸ்தானத்தின் நிர்வாகக் குழுவில் காங்கிரஸ் பெரும்புள்ளிகள் நுழைந்தனர்.இந்த சம்ஸ்தான் நிர்வாகக் குழுவின் மொத்த எண்ணிக்கை 16 ஆகும்.சோனியா  காங்கிரஸீம்,பவார் காங்கிரஸீம் ஆளுக்கு 8 என்று பங்கு போட்டுக்கொண்டனர்.இந்த ஷீரடி சம்ஸ்தான் நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் 2007 ஆகஸ்டில் முடிவடைந்தது.


ஆனால்,அதிகார துஷ்பிரயோகம் மூலமாக உறுப்பினர்கள் இன்று வரை பதவிகளில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்.ஷீர்டி வாழ் பக்தர்கள் இருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கினால் இந்த கூட்டுக்கொள்ளை விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.


நன்றி:விஜயபாரதம்,பக்கம 24;வெளியீடு 1.6.12

No comments:

Post a Comment