Wednesday, June 6, 2012

சுதேசிச் சிந்தனைகள்: இந்திய மக்கள்தொகை வளர்ச்சி இந்தியாவுக்கு பிரச்னையா?




சுதேசிச் சிந்தனைகள்: இந்திய மக்கள்தொகைப்பெருக்கம் ஒரு பிரச்னை?!

இப்படித்தான் நாம் நமது பொருளாதாரம் பற்றி நமது பாடத்திட்டத்தில் படித்திருக்கிறோம்.ஆனால் அதில் ஒரு நிஜமான திருத்தம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது.அது என்ன?
இந்திய மக்கள்தொகைப்பெருக்கம் அமெரிக்க ஐரோப்பாவின் வளர்ச்சிக்கு ஒரு பிரச்னை! உலக அமைதிக்கு ஒரு அவசியம்!!! என இன்றுமுதல் வாசிப்போம்.எப்படி இது சாத்தியம்?

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஐரோப்பாவில் மக்கள்தொகை வளர்ச்சி 20 % ஆக இருந்தது. கி.பி.1950 களில் அந்த வளர்ச்சி 11 % ஆக வீழ்ந்தது.இன்னும் 100 ஆண்டுகளில் கி.பி.2110 ஆம் ஆண்டில் இந்த மக்கள் தொகை வளர்ச்சி 3 % ஆக தொபுக்கடீர்!!!இப்போதே ஐரோப்பாவில் பல நாடுகளின் மக்கள்தொகை வளர்ச்சி ஒற்றை இலக்க சதவீதத்திற்கு வந்துவிட்டது.
அமெரிக்காவிலும் இதே நிலைதான்.இந்த நிலை எப்படி வெள்ளைத் தோல்நாடுகளுக்கு வந்தது?

பெண் விடுதலை,பெண் சுதந்திரம் என கி.பி.1900 இன் ஆரம்பங்களில் மேற்கு நாடுகளில் துவங்கியது.இதன் விளைவாகவும்,பைபிளின் கொள்கைப்படி திருமணம் என்பது ஒரு சமுதாய ஒப்பந்தம்.ஆக,அந்த ஒப்பந்தத்தை சர்வசாதாரணமாக்கிவிட்டனர்.
18 வயதுக்குப்பிறகு,மேல்நாடுகளில் ஒரு இளைஞனும்,இளம்பெண்ணும் தனது பெற்றோருடன் சேர்ந்து வாழ்வதில்லை.காலையில் கல்யாணம்,மதியம் முதலிரவு . . .ஓ . . . மன்னிக்கவும். . .முதல் மத்தியானம் மாலையில் மணமுறிவு என வேகமாக வாழ்க்கை வாழத்துவங்கினர்.இதனால்,குழந்தைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் அங்கு இல்லை.விளைவு? யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் எத்தனை தடவை வேண்டுமானாலும் என்ற நிலை சகஜமாகிப்போனது.எனவே,தனி மனிதனின் அளவற்ற சந்தோஷம், அந்த நாட்டின் வளர்ச்சி,மனித வள வீழ்ச்சி, பொருளாதார வீழ்ச்சி என சுழலில் விழ வைத்துவிட்டது.யாரும் சேமிப்பதில்லை.குழந்தை இருந்தால்தானே அதற்கு,அதன் கல்வி, ஆரோக்கியம், சொத்துக்களுக்காக சேமிக்கும் குணம் இருக்கும்.
ஒரு வருடத்தில் சேமிக்கும் மொத்தப் பணத்தையும், அமெரிக்கர்கள் அந்த வருட இறுதிவிடுமுறையில் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று செலவழித்து விடுவர்.ஹாலிவுட் படங்களில் தான் அமெரிக்காவும்,அமெரிக்கர்களும் ரொம்ப நல்லவர்கள் போலவும்,உலக நன்மைக்காக பாடுபடுபவர்கள் போலவும் காட்டுவர்.2012 என்ற திரைப்படத்தில் கூட அமெரிக்க ஜனாதிபதி தனது மக்களுடனே இருந்து சுனாமியில் மடிவதாக காட்டுகின்றனர்.நிஜத்தில் அப்படியா?

இன்று, மேல்நாடுகளில் குப்பை அள்ள, லாரி டிரைவர், முனிசிபாலிட்டி வேலை,மின் அளவு அதாங்க ரீடிங் எடுக்க, டாக்டர், மனோதத்துவ நிபுணர்,சிவில் என்சினியர்,நர்ஸ் என எல்லாவற்றிற்கும் ஆட்கள் தேவை.ஐரோப்பாவில் கி.பி.2020 க்குள் 6 கோடிபேர்கள் இத்தகைய பணிகளுக்குத் தேவை.இந்த 6 கோடி பணிகளுக்கும் ஐரோப்பாவில் வேலைக்குச் சேரப்போவது நமது இந்தியர்கள் மட்டுமே!


சரி! 112 கோடி பேர்களாக இருப்பதால் மட்டும் நாம் வல்லரசாகிவிடமுடியுமா? எப்படி நாம் உலகப்பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும்,துபாய் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் பாதிக்காமல் தப்பித்து வருகிறோம்?

நல்ல கேள்வி!

நமது தமிழ்நாட்டில் மட்டும் கி.பி.2010 முதல் 2011 க்கான கல்வியாண்டில் செயல்படும் என் ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை மட்டும் 500! ஒரு கல்லூரியில் 100 மாணவ மாணவிகள் படிப்பார்கள் என கருத்தில் கொண்டால் எத்தனை சிவில் பொறியாளர்கள்,எத்தனை கணினி பொறியாளர்கள்,எத்தனை மெக்கானிக்கல் பொறியாளர்கள்,எத்தனை எலக்ட்ரானிக்ஸ் பொறியாளர்கள் உருவாகுவார்கள்.இது ஒரு கல்வியாண்டிற்கு மட்டுமான கணக்கு.ஆக நமது இளைஞர் வளமானது திறமையான கல்வியாளர்கள்,கல்வி அமைப்புக்களால் கூர்திட்டப்பட்டு திறன்மிகுந்த ஒரு சமுதாயத்தையே உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம்.இவர்களால்தான் இன்று உலகின் பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன என்பதே நிஜம்.ஆக, நாம் எப்போதோ இந்த உலகத்தை ஆளத்துவங்கிவிட்டோம்.;

ஒரு மாறுதலுக்கு இப்படி சிந்தித்துப் பார்ப்போமே?!

அமெரிக்காவும்,ஐரோப்பாவும் சேர்ந்து இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு இனி ஒரு ஒப்பந்தம் கூட தர மாட்டோம் என முடிவு செய்வதாக வைத்துக்கொள்ளுவோம்.என்னாகும்?
இன்று வரை வெறும் 20,00,000 இந்தியர்கள் தான் ஐ.டி.துறையில் பணிபுரிகின்றனர்.இந்த எண்ணிக்கையானது தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தில் வாழும் ஜனத்தொகைக்குச் சமம்.அல்லது பின்லாந்து நாட்டின் ஜனத்தொகைக்குச்சமம்.இந்த 20,00,000 பேருக்கும் வேறு வேலை கிடைக்காதா என்ன?

இந்தியப் பங்குச் சந்தையை சுமார் 10 ஆண்டுக்கு தடை செய்வதாக வைத்துக்கொள்ளுவோம்.அமெரிக்கா தனது செல்வாக்கினால்,உலக வங்கி,ஐ.நா.சபை மூலமாக உயிரியல் ஆயுதங்கள் இந்தியா வைத்திருக்கிறது என மிரட்டி இப்படி ஒரு தடையைச் செய்தால் இந்தியாவின் 3 % இந்தியர்கள் மட்டுமே பாதிக்கப்படுவர்.

இந்தியாவின் ஏற்றுமதியை இதே பாணியில் அமெரிக்கா தடை செய்கிறது என வைத்துக்கொள்வோம்.கி.பி.2011 முதல் கி.பி.2021 வரை இந்தியா உலகின் எந்த ஒரு வெளி நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யக் கூடாது என நமது கழுத்தை நெறிப்பதாக வைத்துக்கொள்வோம்.அமெரிக்கா நெறிப்பது இந்தியாவின் கழுத்தை அல்ல;இந்தியாவின் கெண்டைக்காலைத் தான் நெரிக்கிறது என்று அர்த்தம்.சுமார் 1,00,000 இந்திய ஏற்றுமதியாளர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.ஆக, இந்தியாதான் உலகின் ஒரே வல்லரசு! யாரையும் எதற்காகவும் சார்ந்திராத தன்னையும் தனது உழைப்பையும் நம்பி வாழும் சுயச்சார்புள்ள வல்லரசு!

ஒருவேளை அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒன்றிணைந்து சீனாவுக்கு இந்தத் தடைகளில் ஏதாவது ஒன்றை விதித்தால் போதும்.சீனா அம்பேல்தான்.

நாம் மட்டும்தான் நம்மை மட்டும் சார்ந்து வாழ்ந்து வருகிறொம்.ஒரே வருத்தம், உலக மயமாக்கலை நாம் தான் ரொம்பவும் பின்பற்றுகிறோம்.கேவலம் பிரதமரையல்லவா இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்துள்ளோம்.

ஆக, இந்தியாவின் பொருளாதார வலிமையும்,பொருளாதார வாழ்க்கையும்,இந்து மதமும் இனி உலகத்திற்குத் தேவை.வெகு விரைவில் இந்துதர்மம் எந்த வற்புறுத்தலும் இன்றி உலக மயமாகும்.இதற்கு இறைவனின் கருணை நமது பாரத நாட்டின் மீது இருக்கிறது.

No comments:

Post a Comment