Monday, June 18, 2012

கடன்களைத் தீர்க்கவும்,தீராத வழக்குகள் தீரவும்,நீண்டகால குடும்பச் சச்சரவுகள் தீரவும் உதவும் திருவாதிரை நட்சத்திர பைரவ வழிபாடு!!!


நமது முந்தைய ஐந்து பிறவிகளில் செய்த தவறுகள் மற்றும் நமது முன்னோர்கள் கடந்த ஐந்து தலைமுறைகளாக சேமித்த பூர்வபுண்ணியத்தோடு  பாவ கர்மாக்களையும் சேர்த்தே நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.அப்படி அனுபவிக்கும்போது,அது 1/8 பங்கே நமக்குக்கிடைக்கிறது.ஆனால்,அந்த எட்டில்  ஒரு பங்கையே நம்மால் தாங்க முடியவில்லை;தாங்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்.உதாரணமாக,நமது அப்பாவின் தாத்தா(நமது பாட்டனார்) செய்த தவறுகளின் விளைவுகள் நமக்கு எட்டில் ஒரு பங்காக நமக்குக் கிடைக்கின்றன.அவையே நமக்கு தீராத பிரச்னைகள்,குடும்ப சச்சரவுகள்,கடுமையான நோய் என்று ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மைத் தொடர்கிறது.நமது பாட்டனாருக்கோ மொத்தம் 20 முதல் 70 பேரன்./பேத்திகள் இருக்கிறார்கள்.அத்தனை பேர்களுக்கும் இது பிரிந்துவிடும்.


ஆக,நமது முந்தைய ஐந்து மனிதப்பிறவிகளில் நாம் என்னென்ன செய்தோமோ அந்த பூர்வபுண்ணியமும்,பூர்வபாவமும் நாம் பிறக்கும் நேரத்தில் வானில் நவக்கிரகங்களாக அமர்ந்திருக்கின்றன.அதையே நாம் பிறந்த ஜாதகமாக மலருகிறது.ஒரு திறமையான ஜோதிடரால் நாம் என்னென்ன புண்ணியம் மற்றும் பாவங்கள் செய்தோம் ?  என்பதை துல்லியமாக கணித்துச் சொல்லிவிட முடியும்.ஆனால்,அதிலிருந்து எப்படி மீள்வது? என்பதை ஒருசில ஜோதிடர்களால் மட்டுமே சொல்ல முடியும்.தினமும் ஏதாவது ஒரு இறைவழிபாடு செய்துவரும் ஜோதிடரால் உரைக்க முடியும்.அப்படி இறைவழிபாடு செய்தாலும்,அதை அந்த ஜோதிடர் மானசீகமாக செய்துவந்தால்,அவரிடம் ஆர்ப்பாட்டமோ,சுய தம்பட்டமோ இராது;அப்படிப்பட்ட ஜோதிடரை நாம் பார்த்தாலே நமது மனதில் மரியாதை தோன்றாது;பழகியபின்னரே அவர் மீது அளவற்ற மரியாதை உருவாகும்.

ஒரு பொதுவான ஆனால் சக்தி வாய்ந்த சுயபரிகாரத்தை உங்களுக்கு சொல்லுவதில்,பெருமை கொள்கிறேன்.இப்படி உங்களுக்கு உரைப்பதற்கு அடியேனை பைரவ பெருமான் தேர்ந்தெடுத்ததற்கு அவருக்கு கோடி கூகுள் நன்றிகளைச் சொல்லிக்கொள்கிறேன்.

மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் ஊர் ஆனந்த தாண்டவபுரம் ஆகும்.இங்கு இருக்கும் பைரவரை 16 திருவாதிரை நட்சத்திர நாட்களுக்கு எட்டு நெய்தீபங்கள் ஏற்றி,நமது பெயர் மற்றும் நமது குடும்பத்தாரின் பெயர்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.இப்படிச் செய்தால் தீராத வழக்குகள்,தீராத பிரச்னைகள்,குடும்பச் சச்சரவுகள்,நீண்டகால கடன் தொல்லைகள் தீர்ந்துவிடும்.

இதைச் செய்ய முடியாதவர்கள் முதல் திருவாதிரை நாளன்று மட்டும் இவ்வாறு ஆனந்த தாண்டவபுரம் சென்று வழிபட்டுவிட்டு,மீதி 15 திருவாதிரைக்கு உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் பைரவருக்கு இதே போல வழிபாடு செய்யலாம்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய காகபுஜண்டருக்கு மானசீகமாக கோடிகோடிகோடி நன்றிகள் சொல்லி இதைச் செயல்படுத்துவோம்!!!

20.6.2012 புதன்
17.7.2012 செவ்வாய்க்கிழமை காலை 8.32 முதல் 18.7.2012 புதன் காலை 10.21 வரை
14.8.2012 செவ்வாய் மதியம் 3.48 முதல் 15.8.2012 புதன் மாலை 5.42 வரை
10.9.2012 திங்கள்
7.10.2012 ஞாயிறு காலை 6.08 முதல் 8.10.2012 திங்கள் காலை 8.14 வரை
3.11.2012 சனி  மதியம் 1.14 முதல் 4.11.2012 ஞாயிறு மதியம் 3.24 வரை
1.12.2012 சனி
28.12.2012 வெள்ளி(திருவாதிரை பவுர்ணமி)
24.1.2013 வியாழன் காலை 10.36 முதல் 25.1.2013 வெள்ளி மதியம் 12.59 வரை

21.2.2013 வியாழன்
20.3.2013 புதன்

இவை அனைத்தும் திருவாதிரை நட்சத்திர நாட்கள் ஆகும்.மீதி திருவாதிரை நாட்கள் அடுத்த வருடமான விஜய வருடத்து பஞ்சாங்கம் வெளிவந்ததும்,இந்தப் பதிவு மறுபதிவாக வெளியிடப்படும்போது,குறிப்பிடப்படும்.

திருவாதிரை நட்சத்திர நாளன்று பைரவர் வழிபாடு செய்வோம்;கடன்,நோய்,எதிரி,கர்மவினைகள் தீர்ந்து
நலமோடும் வளமோடும் வாழ்வோம்!!!

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment